என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் பூட்டை உடைத்து கொள்ளை
- கோவில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மர்ம நபர்களை தேடி வருகின்றார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை பூங்கா நகரில் ஸ்ரீ ராஜ யோக விநாயகர் கோவிலில் உள்ளது. இக்கோவில் சுவாமிக்கு இரண்டு நேரத்திலும் பூஜைகள் நடைபெறும். இதனால் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் வழக்கம் போல் பூஜைகள் முடிந்து கோவிலை பூட்டிவிட்டு சென்ற நிர்வாகத்தினர், இன்று காலை வந்து பார்த்த போது கோவில் முன்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்டு கோவிலின் உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பார்வையாளர் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டார் ராஜகோபால் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றார்.
Next Story