வரும் 26-ந் தேதி விவசாயிகள் குறைதீர்கூட்டம்

வரும் 26-ந் தேதி விவசாயிகள் குறைதீர்கூட்டம் நடைபெற உள்ளதுமாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது
வரும் 26-ந் தேதி விவசாயிகள் குறைதீர்கூட்டம்
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில், கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள். இக்கூட்டத்திற்கு கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கபிரதிநிதிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு கூட்டத்தில் கலந்துக்கொண்டு பயனடையலாம் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com