என் மலர்
உள்ளூர் செய்திகள்

குருகுலம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
- குருகுலம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
- கீரமங்கலம் காவல் நிலையத்தில் நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள அலஞ்சிரங்காடு. குருகுலம் பள்ளியில் பயிலும் 80 மாணவர்கள், கீரமங்கலம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று காவல் துறை பற்றியும், காவல் நிலைய பணிகளைப் பற்றியும் அறிந்து கொண்டனர்.
கீரமங்கல காவல்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார். அப்போது அவர், மாணவர்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தங்களை எவ்வாறு தயார் செய்து கொள்வது, செல்போன் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி என்பதை பற்றியும்,
மாணவர்கள் காவல்துறை சார்ந்த படிப்புகளை ப யில்வது, வேலை வாய்ப்பு பெறுவது எப்படி என்றும் போதைப்பொருள் இல்லாத ஒரு மாணவ சமுதாயத்தை உரு வாக்குவது தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்களை வழங்கினார். இறுதியாக, குருகுலம் பள்ளி சார்பில் காவல் துறையினருக்கு மரக்கன்றுகளை பள்ளி மாணவர்கள் வழங்கினர்.






