என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டுப்புழு வளர்ப்பில் தொற்று நீக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
- பட்டுப்புழு வளர்ப்பில் தொற்று நீக்கம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
- அனைத்து கிராமதிட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்
புதுக்கோட்டை:
விராலிமலை வட்டாரம் சிங்கதாக்குறிச்சி கிராமத்தில் அட்மா திட்டத்தின்கீழ் பட்டுப்புழு வளர்ப்பில் தொற்று நீக்கம் குறித்த விவசாயிகள் பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் பட்டு வளர்ச்சி துறையைச் சேர்ந்த சிலம்பரசன், உதவி ஆய்வாளர்கள் பேசும் போது, பட்டு வளர்ப்பில் நான்கு வகையான பட்டு வளர்ப்பு முறை பின்பற்றபட்டு வருகிறது. அதில் பட்டுப்புழுக்களை வளர்க்க தேவையான குடில் மற்றும் நெற்றிக்கா போன்ற உபகரணங்களை கிருமி நீக்கம் செய்வது குறித்தும்,
அறுவடை செய்த பட்டுக்கூடுகளை விற்பனை சந்தை நிலவரங்கள், பட்டு வளர்ச்சி துறையில் வழங்கப்படும் பல்வேறு வகையான மானிய விபரங்கள் மற்றும் பட்டு வளர்ப்பு குறித்த விவசாயிகள் பயிற்சிகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
அதனைத்தொடர்ந்து வேளாண்மை உதவி இயக்குநர் தமிழ்செல்வி, வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் மானிய விபரங்களை எடுத்துக்கூறினார். இறுதியாக துணை வேளாண்மை அலுவலர், கலைஞரின் அனைத்து கிராமதிட்ட விபரங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் தேவி வரவேற்புரை வழங்கினார். பயிற்சியின் முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளா; பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் விராலிமலை சார்பாக நன்றி கூறினார்..
பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பர்கானா பேகம் செய்திருந்தார்.






