என் மலர்
புதுக்கோட்டை
- கார் மோதி பால் வியாபாரி காயம் ஏற்பட்டது
- வியபாரம் முடித்துவிட்டு வரும் போது விபரீதம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் குப்பையன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் சந்திரன் (வயது 54). பால் வியாபாரியான இவர், தனது வியாபாரத்தை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் கூழையான்விடுதி ஏடி-காலனி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது கும்பகோணம் கொற்கை முகமது உசேன் மகன் கனி ( வயது 35) ஓட்டிவந்த கார், இவர் மீது மோதியது. இதில் சந்திரன் படுகாயம் அடைந்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து செம்பட்டிவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
- அங்கன்வாடி பணியார்கள் சார்பில் நடந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி மற்றும் திருவரங்குளம் வட்டார சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பேரூராட்சி தலைவர் ராசி முகருகானந்தம் தலைமையில், துணைத்தலைவர் ராஜேஸ்வரி பழனிகுமார், ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை, பேரூராட்சி செயலாளர் பூவேந்திரன், ஆலங்குடி அரசு மருத்துவமனையின் சுகாதார மேற்பார்வையாளர் ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலையில் திருவரங்குளம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலு வலர் பானுப்பிரியா, குத்துவிளக்கு ஏற்றி கொடி தொடங்கி வைத்தார்.
வடகாடு முக்கம், அரசமரம் பஸ் பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
விழாவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் நித்தியா, வட்டார திட்ட உதவியாளர் ஆனந்தி, ராகவி, மேற்பார்வையாளர் மணிமேகலை, கலையரசி, சத்தியவாணி, முத்தழம்மாள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
- கோவில் பணியாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
- தேர் விபத்து நடந்த கோவிலுக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகர் பகுதியான திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ள திருக்கோகர்ணேஸ்வரர் உடனுறை பிரகதாம்பாள் கோவிலில் கடந்த 31-ந்தேதி ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடிக்க இழுத்தனர். நிலையத்தில் இருந்து நகர்ந்த ஒரு சில விநாடிகளில் தேர் சரிந்தது. இந்த விபத்தில் அரிமளத்தை சேர்ந்த ராஜகுமாரி (வயது 64) மற்றும் 2 பெண்கள் உள்பட 8 பக்தர்கள் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.
மேலும் தேர் விபத்து நடந்த கோவிலுக்கு வருகை தந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினார்.
அத்துடன் தேர் விபத்து குறித்து விரிவாக விசாரணை நடத்தும் பொருட்டு ஒரு குழுவையும் அமைத்து ஆணை பிறப்பித்தார். இந்த சம்பவம் தொடர்பாக கோவில் பணியாளர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. விசாரணை முடிவில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகுமாரி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தேர் விபத்தில் சிக்கிய அவர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் உயிரிழந்தது பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விவசாயிகள் நூதன போராட்டம்
- விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. இந்நிலையில் தேங்காய் மற்றும் ெ காப்பரை விலையை மத்திய, மாநில அரசுகள் உயர்த்தக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆலங்குடியில் உள்ள வட்டஞ்கச்சேரி முக்கத்தில் தேங்காய்களை உடைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு ஒன்றிய தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். போராட்டம் குறித்து விவசாயிகள் கூறுகையில், தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்தவும், தென்னை சம்பந்தப்பட்ட தொழில்களை காப்பாற்றவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கொப்பரை கொள்முதல் கொள்முதல் விலையை குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.140 வழங்க வேண்டும். தேசிய மற்றும் சர்வதேச அளவில் தென்னை தோட்டக்கலை பயிராக உள்ளது.ஆனால் தமிழகத்தில் மட்டும் வேளாண்மை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தோட்டக்கலைத்துறைக்கு தென்னையை மாற்றி உத்தவிட வேண்டும் என்றனர்.
- ஒய்வு பெற்ற கிராம உதவியாளர்கள் கூட்டம்
- ஒய்வு பெற்ற கிராம உதவியாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
பொன்னமராவதியில் தமிழ்நாடு வருவாய்த்துறை ஒய்வுபெற்ற கிராம உதவியாளர் நலச்சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத்தலைவர் பெ.ராஜூ தலைமைவகித்தார். மாநில துணைத்தலைவர் எம்.பி.ரெங்கசாமி முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் டி.முருகையன், மாநில பிரச்சார செயலாளர் வ.புலிகேசி, மாநில செயலாளர் டி.பரமசிவம், மாநில அமைப்பாளர் எஸ்.ராமன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப்பேசினர்.
2023ம் ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் மாநில சங்கம் மூலம் இதர கோரிக்கைகளை பெற முதல் மாநில மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் சங்கத்தின் வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலர் எம்.பாண்டியன், ஒய்வு பெற்ற கிராம உதவியாளர் சங்க மாவட்டத்தலைவர் செ.ராமன், பிஎல்.நைனான், மாநில பொதுச்செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வன், கிராம உதவியாளர் சங்க பொன்னமராவதி வட்டத்தலைவர் எம்.பழனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக மாநில பொதுச்செயலாளர் ஏ.எல்.பிச்சை வரவேற்றார். மாநில பொருளாளர் பி.ஆர்.சந்திரன் நன்றி கூறினார்.
- சாலையோர வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
- வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டை
புதுக்கோட்டை:
பொன்னமராவதியில் சாலையோர வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சியின் செயல் அலுவலர் கணேசன் தலைமையில் நடைபெற்றது இதில் அவர் பேசும் போது, நெகிழி பொருட்கள் ஒழிப்பு, சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் வங்கி கடன்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுதல், போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் வியாபாரம் செய்தல், தகுதி உள்ள சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குதல், நகரத்தின் தூய்மைகளை பாதுகாக்க குப்பைகளை பிரித்து வழங்குதல் ஆகியன குறித்து பேசினார். கூட்டத்தில் வி.ஆர்.எம்.சாத்தையா, கண்ணன், செளந்தரம் உள்ளிட்ட சாலையோர வியாபாரிகள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் பழனிச்சாமி, பன்னீர்செல்வம், குழு மேற்பார்வையாளர்கள் வினோத், சதீஷ், பரப்புரையாளர்கள் சங்கீதா, சம்பூர்ண பிரியா, உள்ளிட்டோ பங்கேற்றனர்.
- வாகன விபத்தில் தொழிலாளி பலியானார்.
- மனைவி மருத்துவமனையில் அனுமதி
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஒலுகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை(40). இவர்கள் 2 பேரும் பொன்னமராவதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
பொன்னமராவதி அருகே பரியாமருதபட்டி சாலையில் சென்றபோது சக்திவேல் என்பவர் ஒட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட த ம்பதியினர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பின்ன அந்த கார் அருகே உள்ள உயர் அழுத்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் முற்றிலுமாக முறிந்து கீழே விழுந்தது.
இதையடுத்து அவ்வழியாக வந்தவர்க்ள படுகாயம் அடைந்த தம்பதியை மீட்டு வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மணிமேகலை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த வித்து குறித்து பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் ‘செல்லப்பிள்ளை’ மையம் தொடங்கப்பட்டது
- கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் 'செல்லப்பிள்ளை' பச்சிளம் குழந்தை பராம ரிப்பு ஆலோசனை மையம் திறக்கப்பட்டது.
இந்த மையத்தை திறந்து வைத்து கலெக்டர் கவிதா ராமு பேசியதாவது :
தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படு த்தும் வகையில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 'செல்லப்பிள்ளை' பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப்பால்.
தாய்ப்பால் கொடுப்பதில் தாய்க்கு மட்டும் பங்கு இல்லை. அவருடன் இருப்பவர்களும் இது குறித்த போதுமான விழிப்புணர்வு பெற வேண்டும். தாய்ப்பால் அளித்து வந்தால் குழந்தையின் எடை கூடும். அடிக்கடி சளி பிடிக்காது. ஆஸ்துமா பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு ஏற்டாது. உடல் பருமன், இதய நோய்களை தடுக்கலாம். குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் மட்டுேம கொடுக்க வேண்டும். எனவே பொதுமக்கள் அனைவரும் தாய்ப்பாலின் அவசியம் குறித்து உரிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கட்டுரைப் போட்டி, ஓவிய ப்போட்டி மற்றும் ஆரோக்கிய குழந்தைகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்
- போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
புதுக்கோட்டை:
விராலிமலை பகுதிகளில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் ஈஸ்வரி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 60) என்பவர் அவரது வீட்டில் மறைத்து வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்."
- புதுக்கோட்டையில் புத்தக திருவிழா களைகட்டியது.
- வருகிற 7-ந் தேதியுடன் முடிவடைகிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 5-வது புத்தக திருவிழா நகர்மன்ற வளாகத்தில் கடந்த 29-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. தினமும் மாலையில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், இலக்கியவாதிகள் மற்றும் சிறப்பு பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் உள்பட பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதனால் களை கட்டும் புத்தக திருவிழாவை காண தினமும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தப்படி உள்ளனர். அரங்குகளில் புத்தகங்கள் விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது. பள்ளிக்கல்வி துறையின் சார்பில், புத்தக திருவிழாவிற்கு வருகை தரும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 7-ம் நாள் நிகழ்வில் கவிஞர் அப்துல் காதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'வண்டுகளை சூலாக்கும் வாசப்பூக்கள் ' எனும் தலைப்பில் பேசினார். இதேபோல தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக மெய்யியல் துறை தலைவர் நல்லசிவம், 'தமிழிசை- அன்றும் இன்றும்' எனும் தலைப்பில் பேசினார். இவர்களது பேச்சை பொதுமக்கள் ஆர்வமுடன் கேட்டனர். விழாவில் புத்தக திருவிழா பாடல் பாடி வழங்கிய பாடகர்கள் செந்தில்கணேஷ்-ராஜலட்சுமி தம்பதிக்கு நினைவு பரிசு விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டது. விழாவில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், விழா ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம் மூர்த்தி, முத்துநிலவன், வீரமுத்து, முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். புத்தகதிருவிழா வருகிற 7-ந் தேதியுடன் முடிவடைகிறது. அன்று விழாவில் சிறந்த நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது."
- தேசியக்கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- பிளாஸ்டிக்கில் ஆன தேசியக்கொடி பயன்படுத்தக் கூடாது
புதுக்கோட்டை:
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் அறிவித்ததை தொடர்ந்து இந்தியாவிலுள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தேசியக்கொடியை அனைத்து வீடுகளிலும் ஏற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதேபோன்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலங்களிலும் தேசியக்கொடி ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மூலம் எடுத்து வருகிறார்.
இதில் புதுக்கோட்டை பிருந்தாவனம் அருகில் கடந்த 40 ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக கதர் துணியில் தேசியக்கொடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குமார் என்பவர் தேசியக்கொடி தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். பிளாஸ்டிக்கில் ஆன தேசியக்கொடி பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து கதர் மற்றும் பாலிஸ்டர் துணியில் தேசியக்கொடி தயாரிக்கும் பணி இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய, மாநில அரசுகள் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதால் இந்த ஆண்டு தேசியக்கொடி அதிக அளவில் ஆர்டர் வந்துள்ளது. 3 விதங்களில் தயாரிக்கப்படும் தேசிய கொடி ரூ.100 மற்றும் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது தவிர சிறிய அளவிலான தேசியக்கொடிகளும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக கதர் விற்பனையை ஊக்குவிப்பதற்கு வரும் காலங்களில் ஏற்கனவே பிளாஸ்டிக் கொடியை ஒழித்தது போன்று பாலிஸ்டர் துணியால் ஆன தேசிய கொடியையும் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்து முழுமையாக கதர் துணியால் செய்யப்பட்ட தேசியக் கொடியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய மாநில, அரசுகள் உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
- 3 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டது.
- மூன்றாவது கண்ணாக திகழ்கிறது.
புதுக்கோட்டை:
ஆவுடையார்கோவில் ஒன்றியம், மீமிசல் கடைவீதி பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் 26 கண்காணிப்பு கேமராக்கள் வர்த்தக சங்கம் சார்பில், புதிதாக பொருத்தப்பட்டது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்து ேபசுகையில், கண்காணிப்பு கேமரா என்பது குற்றங்கள் நடைபெறுவதை கண்டுபிடிப்பதற்கும், நடைபெற இருக்கும் குற்றத்தை தவிர்ப்பதற்கும் மிகவும் முக்கியமான மூன்றாவது கண்ணாக திகழ்கிறது. இதனை கண்காணித்து பல குற்றச்செயல்களை தடுப்பதற்கு எளிய வகையாகும் என கூறினார். நிகழ்ச்சியில் வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்."






