search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் செல்லப்பிள்ளை மையம்
    X

    பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் 'செல்லப்பிள்ளை' மையம்

    • பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் ‘செல்லப்பிள்ளை’ மையம் தொடங்கப்பட்டது
    • கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் 'செல்லப்பிள்ளை' பச்சிளம் குழந்தை பராம ரிப்பு ஆலோசனை மையம் திறக்கப்பட்டது.

    இந்த மையத்தை திறந்து வைத்து கலெக்டர் கவிதா ராமு பேசியதாவது :

    தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படு த்தும் வகையில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 'செல்லப்பிள்ளை' பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப்பால்.

    தாய்ப்பால் கொடுப்பதில் தாய்க்கு மட்டும் பங்கு இல்லை. அவருடன் இருப்பவர்களும் இது குறித்த போதுமான விழிப்புணர்வு பெற வேண்டும். தாய்ப்பால் அளித்து வந்தால் குழந்தையின் எடை கூடும். அடிக்கடி சளி பிடிக்காது. ஆஸ்துமா பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு ஏற்டாது. உடல் பருமன், இதய நோய்களை தடுக்கலாம். குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பால் மட்டுேம கொடுக்க வேண்டும். எனவே பொதுமக்கள் அனைவரும் தாய்ப்பாலின் அவசியம் குறித்து உரிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் கட்டுரைப் போட்டி, ஓவிய ப்போட்டி மற்றும் ஆரோக்கிய குழந்தைகளுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×