என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • விதைப் பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றிய விவசாயிகள் ஒரு நாள் பயிற்சி கந்தர்வகோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.
    • விதைக்கும் முன் உயிர் உரங்கள் மற்றும் பூஞ்சான் கொல்லிகள் மூலம் விதை நேர்த்தி செய்து விதைப்பதால் அதிக அளவு பூச்சி நோய் தாக்குதலை தவிர்க்க முடியும்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு உள்ளான விதைப் பண்ணை விவசாயிகளுக்கான தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றிய விவசாயிகள் ஒரு நாள் பயிற்சி கந்தர்வகோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.

    பயிற்சிக்கு கந்தர்வகோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்பரசன் தலைமை தாங்கினார்.

    புதுக்கோட்டை மாவட்ட விதை மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு விதைப்பண்ணை விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து பேசுகையில், விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை வட்டாரத்தில் பணிபுரியும் உதவி விதை அலுவலர் மூலம் பெற்று விதை பண்ணை அமைக்க வேண்டும் என்றும், விதைக்கும் முன் உயிர் உரங்கள் மற்றும் பூஞ்சான் கொல்லிகள் மூலம் விதை நேர்த்தி செய்து விதைப்பதால் அதிக அளவு பூச்சி நோய் தாக்குதலை தவிர்க்க முடியும் என்றும் கூறினார். முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    பயிற்சி ஏற்பாடுகளை உதவி விதை அலுவலர்கள் நாகராஜ் மற்றும் சிவக்குமார் ஆத்மா உதவி அலுவலர் கவியரசன் செய்து இருந்தனர்.

    • சிவகுமார் (22), அவரிடமிருந்து ஒரு கிலோ 400 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது
    • கல்வி நிலையங்கள் அருகே காவலர்கள்காலை, மாலை நேரங்களில் கண்காணிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள முந்திரி காட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆதனக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் உத்தரவின் பேரில் ஆதனக்கோட்டை சப் - இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் காவலர்கள்முந்திரி காட்டில் தேடுதல் வேட்டை நடத்தினர்.அப்பொழுது சந்தேகத்து இடமான நபரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் பெருங்களூர் அருகே உள்ள அரியூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் (22), அவரிடமிருந்து ஒரு கிலோ 400 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

    இது தொடர்பாக ஆதனக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி நபரை கந்தர்வகோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    சமீப காலமாக கல்வி நிலையங்கள் அருகே போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், பள்ளி மாணவர்கள் எதிர்காலம்பாதிக்கப்படும் எனவும், பெற்றோர்கள் கூறுகின்றனர். எனவே கல்வி நிலையங்கள் அருகே காவலர்கள்காலை, மாலை நேரங்களில் கண்காணிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதுகை புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் இயக்க வட்டார தலைவர் ரகமதுல்லா, சின்ன ராஜா ஆகியோர் செய்து இருந்தனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடக்கும் புதுகை புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த புத்தகத் திருவிழாவில் கந்தர்வகோட்டை, அரியாணி பட்டி, மஞ்சப்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு கந்தர்வ–கோட்டை வட்டார கல்வி அலுவலர் வெங்க–டேஸ்வரி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்விஜய–லட்சுமி முன்னிலை வகி–த்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் இயக்க வட்டார தலைவர் ரகமதுல்லா, சின்ன ராஜா ஆகியோர் செய்து இருந்தனர்.

    • வழிகாட்டி பலகை மீது பஸ் மோதிய விபத்தில் புதுக்கோட்டை வாலிபர் பலியானார்
    • 5 பேர் காயமடைந்தனர்

    புதுக்கோட்டை:

    சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி மாநகர பஸ் சென்றது. பரங்கிமலையில் இருந்து ஆலந்தூர் கத்திப்பாரா மெட்ரோ ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் பகுதிக்கு செல்ல சாலை வளைவில் திரும்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை வளைவுபகுதியில் நெடுஞ்சாலை துறையால் வைக்கப்பட்டு இருந்த வழிகாட்டி பெயர் பலகை ராட்சத இரும்பு தூண் மீது பங்கரமாக மோதியது.

    இதில் பெயர் பலகையுடன் ராட்சத தூண் சரிந்து சலையின் குறுக்கே இருபக்கமுமாக விழுந்தது. அப்போது கிண்டி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், மற்றும் மீனம்பாக்கம் நோக்கி சென்ற மினிவேன் மீது வழிகாட்டி பெயர் பலகை விழுந்தது. இதில் வழிகாட்டி பெயர் பலகைக்கு அடியில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கிய புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூரை சேர்ந்த சண்முக சுந்தரம் (வயது 28) படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    மேலும் மினிவேன் டிரைவர் உட்பட பயணிகள் 5 பேர் காயமடைந்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்து வந்த பரங்கிமை போலீசார் ஆபத்தான நிலையில் இருந்த சண்முகசுந்தரத்தை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சண்முக சுந்தரத்திற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • த.மு.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தனியார் மஹாலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் கட்சி நகரத் தலைவர் நூருல் அமீன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் மதுரை அப்துல்காதர் பங்கேற்று சிறப்பித்தார்.இக்கூட்டத்தில் அரசு மருத்துவமனையை அனைத்து அடிப்படை வசதிகளோடு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சீனி கடை முக்கம் அம்புக்கோவில் முக்கம் வரை தொடர்ச்சியாக உள்ள ஐந்து மதுபான கடைகளை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும். மீன் மார்க்கெட் வியாபாரிகளுக்கு கழிவுநீர் தொட்டிகளை அமைத்து கோபுர மின் விளக்கு அமைத்து தர வேண்டும். அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    இரவு நேரங்களில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளை பேருந்து நிலையம் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனி கடை முக்கம், அம்புக்கோவில் முக்கம் பகுதிகளில் போக்குவரத் தை அதிகாரிகள் ஒழுங்கு செய்ய வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அப்துல் கனி, மா வட்ட செயலாளர் நிஜாமுதீன், மாவட்ட துணைச் செயலாளர் முகமது சுலைமான், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சேக் தாவுது மீரான் பாய், நகர இளைஞரணி செயலாளர் அஜ்மீர் சுகைபுர் ரஹ்மான் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மனிதநேய மக்க ள் கட்சியினர் பங்கேற்றனர்.

    • கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்டனர்
    • தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கருக்காகுறிச்சி வட தெரு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஆடு இறை தேடிச்செல்லும் பொழுது தவறுதலாக வீட்டின் அருகே உள்ள 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லா கிணற்றில் விழுந்தது. இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆட்டை உயிருடன் மீட்டு உரிமையா ளரிடம் ஒப்படைத்தனர். 

    • 1750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன
    • டிரைவரையும் கைது செய்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சூத்தியன்பட்டி அரசடிப்பட்டி வழியாக ரேஷன் அரிசி கடத்தி வருவதாக ேபாலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஆலங்குடி சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் அப்பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டாடா ஏசி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 1750 கிலோ ரேசன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து, வாகனத்தின் உரிமையாளரும், ஓட்டுநருமான மழையூர் முருங்கைக்கொல்லை கிராமத்தைசேர்ந்த ராமையா மகன் ராஜேந்திரன் (வயது 45) என்பவரை கைது செய்தனர். பின்னர் ரேசன் அரிசியை புதுக்கோட்டை குடிமைமை பொருட்கள் வழங்கல் குற்ற புலனாய்வு புதுக்கோட்டை அலுவலரிடம் ஆலங்குடி போலீசார் ஒப்படைத்தனர்.

    • விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது
    • தவ்ஹீத்ஜமாத் சார்பில் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் வரதட்ச ணை கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி பள்ளிவாசல் வடபுறத்தி ல் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முஹம்மது பாரூக். மாவட்ட மருத்துவரணி முஹம்மது அலி தலைமை வகித்தனர். கிளை நிர்வாகிகள் முஹமது இஸ்மாயில், முஹமது ஆரிஃப், முஹமது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ேபரணியில் ஏராளமான மாணவர்கள், ெபண்கள் கலந்து கொண்டு, வரதட்சனைக் கொடுமைக்கு எதிராக முழுக்கமிட்டர். மேலும் கைகளில் பாதகைகள் ஏந்தி பேரணியில் சென்றனர். பேரணிக்கு முன் அனுமதி பெறவில்லை என்று கூறி, ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை, பேரணியை தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரதம் பரபரப்பு காணப்பட்டது.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 கிராமங்களில் இரவில் ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்
    • பகலில் கூட ஏதாவது ஒரு தனியார் வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ள முடியும். இரவில் அதற்கெல்லாம் சாத்தியம் இல்லை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 35 இடங்களில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் வல்லத்திராக்கோட்டை, காரையூர், பரம்பூர், புனல்குளம், மழையூர், வாராப்பூர் மற்றும் ராஜநாயக்கர்பட்டி ஆகிய இடங்களில் 108 ஆம்புலன்ஸ் இரவு நேரங்களில் இயக்கப்படுவதில்லை என்றும். பகல் நேரங்களில் மட்டுமே இயக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.

    நாள் முழுவதும் இயக்கப்பட்டு வந்த இந்த ஆம்புலன்ஸ்கள் கடந்த சில மாதங்களில் இரவு நேரங்களில் இயக்கப்படுவது ஒவ்வொரு இடமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த 7 இடங்களுமே கிராமப்பகுதிகளாக இருப்பதால் அப்பகுதியினரால் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு உடனடியாக மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

    எனவே நாள் முழுவதுமாக ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன் கூறியதாவது:

    மனிதருக்கு எப்போது அவசர உதவி தேவைப்படும் என்று யாரும் முன்கூட்டியே கணிக்க முடியாது. எனவே பகலில் ஆம்புலன்ஸை இயக்கி விட்டு இரவில் இயக்காமல் இருப்பது நல்லத்தல்ல. பகலில் கூட ஏதாவது ஒரு தனியார் வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ள முடியும். இரவில் அதற்கெல்லாம் சாத்தியம் இல்லை.

    எனவே பொதுமக்களின் அசரத்தேவைக்காக கொண்டு வரப்பட்ட மிகவும் பயனுள்ள இந்தி திட்டத்தில் இரவு, பகல் பாராமல் அனைத்து நேரங்களிலும் சேவையை தொடர செய்ய வேண்டும். இத்தகைய இடையூறுக்கு பராமரிப்புக்கான நிதிப் பற்றாக்குறை, ஆள் பற்றாக்குறை என்றெல்லாம் அலுவலர்கள் காரணம் கூறுவதாக தெரிகிறது.

    நிர்வாகத்தின் இத்தகைய செயலைப் பார்க்கும் போது இந்த திட்டத்தையே முடக்கி விடுவார்களோ என கருதத் தோன்றுகிறது. எனவே இதில் கலெக்டர் தலையிட்டு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

    இது குறித்து சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ஆம்புலன்சில் பணிபுரியும் பெண் மருத்துப் பணியாளர்கள் மகப்பேறு விடுப்பில் உள்ளதால் 7 வாகனங்களை முழுநேரமும் இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.

    இதனால் குறைந்த தொலைவிலேயே அடுத்த ஆம்புலன்ஸ் சேவை வசதியுள்ள பகுதிகளில் மட்டும் தற்காலிகமாக இரவில் ஆம்புலன்ஸ் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் சேவை பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    • 40 வருடங்களாக சாலை வசதி இல்லாமல் உள்ளது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கண்டியன் தெரு பகுதியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையிடம் மனு அளித்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கண்டியன் தெரு பகுதியில் 40 வருடங்களாக சாலை வசதி இல்லாமல் குண்டும் குழியுமான சாலை யால் மழைநீர் தேங்கி செல்வதற்கு வழி இல்லாமல் அப்பகுதி பொது மக்கள் அவதியுற்று வந்த நிலையில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.கண்டியன் தெரு பகுதியில் 5 இடங்களில் பேவர் பி ளாக் சாலை அமைக்கப்பட்டது. கண்டியன் தெரு அருணாச்சலம் இல்லம் முதல் தமிழ்வாணன் என்பவரது இல்லம் வரை தனி நபர் ஆக்ரமிப்பால், பேவர் பிளாக் சாலை அமைக்க அளவீடு செய்ய வில்லை.

    எனவே அதனை முறையாக அளவீடு செய்து சாலை அமைக்குமாறு கறம்பக்குடி பேரூராட்சி மற்றும் வருவாய் துறையினரிடம் ஊர் பொதுமக்கள் சார்பாக ஊர்கமிட்டி தலைவர் ஞானச்சந்திரனிடம் மனு அளித்தனர்.

    மனுவை பரிசீலனை செய்த அன்றைய வட்டாட்சியர் விஸ்வநாதன் பேரூராட்ச்சிக்குட்பட்ட சாலை என்பதால் மனுவை பேரூராட்சி செயல் அலுவலர் கார்திக்கேயனுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்ககோரி கடிதம் அனுப்பினார். ஆனால் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையை சீரமைக்காத, பேரூராட்சி நிர்வாக அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோ ரியும். தங்களுக்கு முறையான அளவீடு செய்து தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைத்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கீரமங்கலத்தில் வாசனை திரவிய தொழிற்சாலை தொடங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 15-வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது. ஒன்றிய தலைவர் விமல் துறை தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் சரவணன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். முன்னதாக ஆலங்குடி பஸ் ஸ்டாண்டில் மாவட்டத் தலைவர் கர்ணா கொடியேற்றி துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் குமாரவேல் அறிக்கையை தாக்கல் செய்தார். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை வாழ்த்துரை வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வடிவேல், ரவிக்குமார் தமிழரசன், செந்தமிழ், குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

    மாநாட்டில் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய புதிய நிர்வாகிகளான தலைவர் கனகராஜ், செயலாளர் சரவணன், பொருளாளர் பாண்டியன், கிழக்கு ஒன்றிய தலைவர் விமல்துரை, செயலாளர் பாலா, பொருளாளர் பிரபு, ஆகிய புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டன.

    திருவரங்குளம் பகுதியில் உள்ள ஆரஸ்பதி மரங்களை அழிக்க வேண்டும். கீரமங்கலம் பகுதியில் விளையும் மலர்களைகொண்டு வாசனைதிரவிய தொழிற்சாலை துவங்கி புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மாவட்ட செயலாளர் துறைநாராயணன் நிறைவுறையாற்றினார். நிகழ்ச்சியில் கனகராஜ், கார்த்திக், பிரபு, சின்னமணி, பாண்டியன், தினகரன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். நிகழ்ச்சியில் ஒன் றிய நகர செயலாளர் பாலசுப்ரமணியன் மற்றும் இந்திய வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர். பேரூரா ட்சி கவுன்சிலர் பாலா நன்றி கூறினார்.

    • கறம்பக்குடியில் ம.ஜ.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • ஆயுள் சிறை வாசிகளை விடுதலை செய்யக்கோரிக்கை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி நகர அலுவலகத்தில் நகர செயலாளர் ஆசை அப்துல்லா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகர வணிகர் செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரையாற்றினார் இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முகமதுஜான் கலந்து கொண்டு 10 ஆண்டுகளை சிறையில் கழித்த ஆயுள் சிறை வாசிகளை விடுதலை செய்யக்கோரி, செப்டம்பர் 10 அன்று நடைபெற இருக்கின்ற சென்னை தலைமை செயலகம் முற்றுகை போராட்டத்தி ல் கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனைகள் வழங்கினார். நகர பொருளாளர் அம்மன் ராமசாமி கட்சியின் வளர்ச்சி கட்டமைப்பு உள்ளிட்டவைகளை குறித்து கலந்துரையாடல் நிகழ்த்தினார். இறுதியாக நகரத் துணைச் செயலாளர் சதக்கத்துல்லா நன்றியுரை கூறி னார். இக்கூட்டத்தில் நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    ×