என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தீர்மானம்
    X

    அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தீர்மானம்

    • அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • த.மு.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தனியார் மஹாலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் கட்சி நகரத் தலைவர் நூருல் அமீன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் மதுரை அப்துல்காதர் பங்கேற்று சிறப்பித்தார்.இக்கூட்டத்தில் அரசு மருத்துவமனையை அனைத்து அடிப்படை வசதிகளோடு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சீனி கடை முக்கம் அம்புக்கோவில் முக்கம் வரை தொடர்ச்சியாக உள்ள ஐந்து மதுபான கடைகளை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும். மீன் மார்க்கெட் வியாபாரிகளுக்கு கழிவுநீர் தொட்டிகளை அமைத்து கோபுர மின் விளக்கு அமைத்து தர வேண்டும். அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    இரவு நேரங்களில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளை பேருந்து நிலையம் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனி கடை முக்கம், அம்புக்கோவில் முக்கம் பகுதிகளில் போக்குவரத் தை அதிகாரிகள் ஒழுங்கு செய்ய வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அப்துல் கனி, மா வட்ட செயலாளர் நிஜாமுதீன், மாவட்ட துணைச் செயலாளர் முகமது சுலைமான், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சேக் தாவுது மீரான் பாய், நகர இளைஞரணி செயலாளர் அஜ்மீர் சுகைபுர் ரஹ்மான் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மனிதநேய மக்க ள் கட்சியினர் பங்கேற்றனர்.

    Next Story
    ×