என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேங்காய் கொப்பரை விலையை உயர்த்த கோரி  நடந்தது
    X

    தேங்காய் கொப்பரை விலையை உயர்த்த கோரி நடந்தது

    • விவசாயிகள் நூதன போராட்டம்
    • விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. இந்நிலையில் தேங்காய் மற்றும் ெ காப்பரை விலையை மத்திய, மாநில அரசுகள் உயர்த்தக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆலங்குடியில் உள்ள வட்டஞ்கச்சேரி முக்கத்தில் தேங்காய்களை உடைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு ஒன்றிய தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். போராட்டம் குறித்து விவசாயிகள் கூறுகையில், தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்தவும், தென்னை சம்பந்தப்பட்ட தொழில்களை காப்பாற்றவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கொப்பரை கொள்முதல் கொள்முதல் விலையை குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.140 வழங்க வேண்டும். தேசிய மற்றும் சர்வதேச அளவில் தென்னை தோட்டக்கலை பயிராக உள்ளது.ஆனால் தமிழகத்தில் மட்டும் வேளாண்மை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே தோட்டக்கலைத்துறைக்கு தென்னையை மாற்றி உத்தவிட வேண்டும் என்றனர்.

    Next Story
    ×