என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடை பெறுவதாக பொன்னமராவதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
    • அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி லாட்டரி விற்பனையில் ஈடுப்பட்ட 2 பேரை கைது செய்தனர்.

    புதுக்கோட்டை :

    பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடை பெறுவதாக பொன்னமராவதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பொன்னமராவதி ஏனமேடு பகுதியை சேர்ந்த சேட் முகமது (வயது56).

    மற்றும் இருசக்கர வாகனத்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட துவரங்குறிச்சி மருங்காபுரி தாலுகாவை சேர்ந்த பாண்டித்துரை (27) ஆகிய இருவரையும் பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன் தலைமையிலான போலீசாரால் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 1500 ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டு மற்றும் விற்பனைக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக கையில் சாக்குப்பையுடன் 2 நபர்கள் பேருந்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட தனிப்படை போலீசார்,அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.
    • விசாரணையில் இருவரும் அழிந்துவரும் இனமான 29 உடும்புகளை பிடித்து உயிருடன் திருச்சிக்கு கடத்த முயன்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக கையில் சாக்குப்பையுடன் 2 நபர்கள் பேருந்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட தனிப்படை போலீசார்,அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.

    விசாரணையில் இருவரும் கூத்தாடிவயல் கிராமத்தை சேர்ந்த ரஜினி(வயது36),மாதவன் (30) என்பதும், அவர்கள் அழிந்துவரும் இனமான 29 உடும்புகளை பிடித்து உயிருடன் திருச்சிக்கு கடத்த முயன்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

    அதனைத் தொடர்ந்து இருவரையும் கையும் களவுமாக பிடித்த தனிப்படையினர், அவர்களிடமிருந்த 29 உடும்புகளை பறிமுதல் செய்ததோடு இருவரையும் அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

    பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட 29 உடும்புகள் மற்றும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.ஒப்படைக்கப்பட்ட உடும்புகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் காடுகளில் பத்ரிரமாக விடப்படவுள்ளது.

    அழிந்துவரும் இனமான உடும்புகளை பிடித்து சாக்குப்பையில் திருச்சிக்கு கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆலங்குடி புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றம்
    • 2-ந்தேதி காலை திருவிழா கூட்டு பாடல் திருப்பலியும் தொடர்ந்து புனித அந்தோணியாரின் கொடி இறக்கமும் நடைபெற உள்ளது.

    புதுக்கோட்டை :

    ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலம் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவையொட்டி புனிதம் செய்து கொடியேற்று விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் ஆலயத்தை சுற்றி கொடி பவனியும் நான்கு புறத்திலும் அதிர வைத்த வாண வெடிகளும் அதனைத்தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெற்றது.

    இதனைதொடர்ந்து கொடியேற்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. இன்று மாலை முதல், வருகிற 30-ந்தேதி வரை நவநாள் திருப்பலியும் தேர்ப்பவனியும் நடைபெற உள்ளது. விழாவில் வரும் 1-ந்தேதி அன்று மாலை ஏழு மணிக்கு அருட்தந்தையர்களால் திருவிழா கூட்டுப்பாடல் திருப்பலியும், அதனை தொடர்ந்து புனித அந்தோணியாரின் ஆடம்பர அலங்கார தேர்பவனியும் நடைபெற உள்ளது.

    இதனைதொடர்ந்து 2-ந்தேதி காலை திருவிழா கூட்டு பாடல் திருப்பலியும் தொடர்ந்து புனித அந்தோணியாரின் கொடி இறக்கமும் நடைபெற உள்ளது. விழாவையொட்டி தினமும் இரவு கலை நிகழ்ச்சிகளும், கிராமிய பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. விழாவில் கோடி அற்புதர் புனித அந்தோணி யாரின் இறை மக்கள் மற்றும் பங்கு அருட்பணியாளர்கள் கிராம கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    • அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி மற்றும் அரிமளம் ஆகிய வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நேரடி நெல் விதைப்பு பணிகளை, வேளாண்மை இணை இயக்குநர் சக்திவேல் தலைமையில் குழுவினர் பார்வையிட்டனர்.
    • 2022-23 ஆம் வருட, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின்கீழ் நேரடி நெல் விதைப்பு தொகுப்பு செயல் விளக்கங்கள், ஹெக்டேருக்கு ரூ.7,500 மானியம் வழங்கப்படுகிறது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி மற்றும் அரிமளம் ஆகிய வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நேரடி நெல் விதைப்பு பணிகளை, வேளாண்மை இணை இயக்குநர் சக்திவேல் தலைமையில் குழுவினர் பார்வையிட்டனர்.

    பின்னர் சக்திவேல் தெரிவித்ததாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பு பணிகள் அறந்தாங்கி வட்டாரத்தில் 6,150 ஹெக்டேலும், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 12350 ஹெக்டேலும், மணமேல்குடி வட்டாரத்தில் 8200 ஹெக்டேலும், அரிமளம் வட்டாரத்தில் 3750 ஹெக்டேலும் மேற்கொள்ளப்படுகிறது.

    2022-23 ஆம் வருட, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின்கீழ் நேரடி நெல் விதைப்பு தொகுப்பு செயல் விளக்கங்கள், ஹெக்டேருக்கு ரூ.7,500 மானியத்தில், அறந்தாங்கி வட்டாரத்தில், 30 ெஹக்டேரில் அமைக்க, ரூ.2.25 லட்சம், ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் 30 ஹெக்டேரில் அமைக்க ரூ.2.25 லட்சம், மணமேல்குடி வட்டாரத்தில், 30 ஹெக்டேரில் அமைக்க ரூ.2.25 லட்சம் மற்றும் அரிமளம் வட்டாரத்தில், 10 ஹெக்டேரில் அமைக்க ரூ.75 ஆயிரமும், மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பெரும்பாலான செயல் விளக்கங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் அமலாக்கம் செய்யப்படும் கிராமங்களில், செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றுஅவர் தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து, அறந்தாங்கி வட்டாரத்தில், ஆயிங்குடி, களக்காடு மற்றும் தாந்தாணி பகுதிகளிலும், ஆவுடையர்கோவில் வட்டாரத்தில், பாண்டிபத்திரம் பகுதியிலும், மணமேல்குடி வட்டாரத்தில் விச்சூர், கானாடு மற்றும் கம்பர்கோவில் பகுதிகளிலும், அரிமளம் வட்டாரத்தில் இரும்பாநாடு மற்றும் குருங்கூர் பகுதிகளிலும், நேரடி நெல் விதைப்பு தொகுப்பு செயல்விளக்கங்களை பார்வையிட்டார்.

    அப்போது செயல் விளக்கங்கள், அமைக்கத் தேவையான நேரடி நெல் விதைப்புக்குரிய நெல் விதைகள், வரப்புப் பயிராக விதைப்பு செய்யக்கூடிய உளுந்து விதைகள், நெல் விதைகளுக்கு, விதை நேர்த்தி செய்து விதைக்கப் பயன்படும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா மற்றும் நெல் விதைப்பு செய்தவுடன் மேலாக இடக்கூடிய நெல் நுண்சத்து முதலிய இடுபொருட்கள் அந்தந்த வட்டாரங்களில், தொகுப்பு செயல் விளக்கங்களை செயலாக்கும் விவசாயிகளுக்கு வேளாண்மை இணை இயக்குநர் சக்திவேல் வழங்கினார்.

    இந்நிகழ்வில், துணை வேளாண்மை இயக்குநர் (மத்திய திட்டம்) ரவிச்சந்திரன், ஆவுடையார்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்ட ஆலோசகர் சர்புதீன், தொழில் நுட்ப அலுவலர்கள் கார்த்திக் மற்றும் சரண்யா, வட்டார வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    • கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி ஊராட்சிமருங்கூரணி கிராமத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாமில் பொது மருத்துவம், மகளிர் சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், கண் சிறப்பு மருத்துவம், இசிஜி, ஸ்கேன் பரிசோதனை, அனைத்து வகையான ரத்த சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி ஊராட்சிமருங்கூரணி கிராமத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமினை கந்தர்வகோட்டை ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராயர் தொடங்கி வைத்தார்.முகாமில் பொது மருத்துவம், மகளிர் சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், கண் சிறப்பு மருத்துவம், இசிஜி, ஸ்கேன் பரிசோதனை, அனைத்து வகையான ரத்த சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    முகாமில் 847 நபர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.20 நபர்களுக்குகண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.டிஜிட்டல் எக்ஸ் ரே 46 பேருக்கு எடுக்கப்பட்டது.மருத்துவ பெட்டி 10 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.முன்னதாக அனைவரையும் சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் வரவேற்றார்.

    முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன், ஒன்றிய குழு உறுப்பினர் பாரதி பிரியா அய்யாத்துரை, ஊராட்சி மன்ற பிரதிநிதிகள்சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமிஆகியோர் கலந்து கொண்டனர்.

    • செவிலியரை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்
    • அருண்குமார் குடிபோதையில் வந்து தனக்கு சிகிச்சை அளிக்கும்படி மிரட்டும் தோணியில் கூறியுள்ளார். மேலும் செவிலியர் ராதிகாவை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் ராதிகா (வயது 30) இவர் பணியில் இருக்கின்ற பொழுது கறம்பக்குடி சேவுகன் தெரு ரங்கசாமி மகன் அருண்குமார் குடிபோதையில் வந்து தனக்கு சிகிச்சை அளிக்கும்படி மிரட்டும் தோணியில் கூறியுள்ளார். மேலும் செவிலியர் ராதிகாவை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். இது சம்பந்தமாக செவிலியர் ராதிகா கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் செல்லத்துரை வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கோவிலில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
    • ஒன்பது வகையான ஆராதனை நடந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் புகழ் வாய்ந்த சோழகாலத்து சுயம்புலிங்க சிவன் கோ வில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு சுயம்புலிங்க சிவபெருமான் பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு தீபாராதனை நடைபெற்றது. நந்தி பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட ஒன்பது வகையான அபிஷேக ஆராதனை நடைபெற்று மலர் அலங்காரம் செய்து சிறப்பு வழிபா டு நடைபெற்றது, இதே போல் திருவுடையார்பட்டி திரு மூல நாதர் திரிபுரசுந்தரி அம்பாள் கோவில், திருக்கட்ட ளை சோமசுந்தரேஸ்வரர் மங்களநாயகி அம்பாள் கோவில், பாளையூர் பழங்கரை புராதன ஈஸ்வரர் கோ வில், திருமலைராய சமுத்திரம் கதிர்காமேஸ்வரர் கதி ர்காமேஸ்வரி அம்பாள் கோவில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்
    • வீட்டில் பதுக்கிவைத்து விற்பனை

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பதாக ஆலங்குடி டிஎஸ்பி தீபக்ரஜினிக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாலங்குடி கலைஞர் நகரை சேர்ந்த தேசிகன் (வயது 60) வீட்டில் வைத்து வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்ததை பார்த்த தனிப் படை போலீசார், அவரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் 16 மற்றும் ரூபாய் 1500 பறிமுதல் செய்து , அவரைஆலங்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் ஆலங்குடி போலீசார் அவர் மீது வழ க்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வன்முறை போக்கை கிள்ளி எறிய வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்தார்.
    • பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாநில செயலாளர் முத்த ரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது :-

    தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, தசனாதன தர்மமாக என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதனைக்குறிப்பிட்டு பேசுகிறார்.

    அந்த கருத்து தவறாக இருந்தால் சனாதன தர்மத்தை ஏற்கவில்லை என பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சொல்ல வேண்டும். ஏற்பதாக இருந்தால் அது எப்படி நாட்டின் அரசியல் சாசனத்துக்கு எதிராக இருக்கிறது என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும்.

    அதை விடுத்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தவுள்ளதாக வன்முறை யை தூண்டுகிறார்கள். இதை அனுமதிக்க முடியாது. அதே போலத்தான் விநாயகர் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதையை ஒரிடத்தில் குறிப்பி ட்டுப் பேசினேன். உடனே எனது நாக்கை வெட்ட வேண்டும் என்கிறார்கள்.

    தலையை வெட்ட வேண்டும் என்கிறார்கள். புராணக்கதை தவறு என்று சொல்ல மறுக்கிறார்கள். இவர்களின் வன்முறை போக்கை தமிழ்நாடு அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகள் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • தொழிலாளர்கள் சங்க போராட்டம் கைவிடப்பட்டது
    • அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை தொடர்ந்து

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், பொது செயலாளர் முகமதுஅலிஜின்னா முன்னிலை வகித்தார்.

    அப்போது ஊராட்சியில் வேலை செய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மோட்டார் ஆப்பரேட்டர்கள் மற்றும் தூய்மைப்ப ணியாளர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படியை அமுல்படுத்த வேண்டும். 7- வது ஊதியக்குழு ஊதியம் மற்றும் ஊதிய நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி மூலம் ஊதியம் நேரடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    போராட்டத்தினை தொடர்ந்து துறை அதிகாரிகள் உரிய பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்ததையடுத்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தில் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மோட்டார் ஆப்பரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் பட்டியலின மக்களை புண்படுத்திவிட்டார் என்று அம்பேத்கார் மக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது

    புதுக்கோட்டை:

    அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த மணம்பூண்டியில் நியாய விலை கட்டடத் திறப்பு விழாவில், திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்துகொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், அதே மேடையில் அமர்ந்திருந்த பெண் ஒன்றிய குழு தலைவரை பார்த்து, சாதியை குறிப்பிட்டு அந்த ஒன்றிய குழு பெண் தலைவரை பொதுமக்கள் முன்னிலையில் ஜாதிய வன்கொடுமை செய்துள்ளார். இந்திய தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்,

    மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒருவரை ஜாதியை சொல்லி களங்கப்படுத்துவது சட்ட சாசனத்திற்கு எதிரான செயலாகும். இந்திய இறையாண்மையை காப்பற்றுவேன் என்று உறுதிமொழி ஏற்று அமைச்சரான ஒருவர் இந்திய இறையாண்மையையும் ஒற்றுமையையும் குலைக்கும்  வகையில் பேசியது கண்டனத்திற்குரியது.

    தமிழகத்தில் இருக்கும் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால் பங்கு வகிக்கும் பட்டியலின மக்களின் உணர்வுகளை அமைச்சர் பொன்முடி புண்படுத்திவிட்டார். இச்செயலுக்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில், அம்பேத்கர் மக்கள் இயக்கம் தமிழகம் தழுவிய போராட்டத்தை கையிலெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாணவர்களின் காரில் பள்ளிக்கு செல்லும் ஆசையை வட்டாரக் கல்வி அலுவலர் நிறைவேற்றினார்.
    • பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வடக்கு பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 1990-91-ல் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக இருந்த ஷீலாராணி சுங்க நரிக்குறவர் காலனியை அறிவொளி நகர் என்று பெயர் வைத்து அவர்களுக்கு அறிவொளி தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி கொடுத்து கையெழுத்துப் போட கற்றுக் கொடுத்தார். தொடர்ந்து பள்ளி செல்லும் வயது குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்தார்.

    இந்த நிலையில் போக்குவரத்து அதிகமுள்ள சாலையில் பள்ளிக்கு செல்ல முடியாததால் அறிவொளி நகர் பகுதி மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்பதை அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பள்ளி செல்லாக் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தியதோடு அவர்கள் பள்ளிகளுக்கு செல்கிறார்களா என்றும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை அறிவொளி நகருக்கு ஆய்வுக்கு சென்ற திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரனிடம் சில மாணவ, மாணவிகள் எங்களை ஒரு நாள் ஏ.சி. காரில் ஏற்றிச் செல்வீர்களா? என்று கேட்டனர். மாணவர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக இன்று காலை வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன் அறிவொளி நகருக்கு காருடன் வந்தார். அவர் வருவதற்குள் பல மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். எஞ்சியிருந்த மாணவர்களை தனது காரில் ஏற்றிச் சென்று கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இறக்கிவிட்டதுடன் இன்று காரில் வராத மாணவ, மாணவிகளை மற்றொரு நாள் காரில் ஏற்றி வருவதாக கூறினார். நரிக்குறவர் மாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய வட்டாரக் கல்வி அலுவலரை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    ×