என் மலர்
உள்ளூர் செய்திகள்

செவிலியரை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது
- செவிலியரை பணி செய்ய விடாமல் தடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்
- அருண்குமார் குடிபோதையில் வந்து தனக்கு சிகிச்சை அளிக்கும்படி மிரட்டும் தோணியில் கூறியுள்ளார். மேலும் செவிலியர் ராதிகாவை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் ராதிகா (வயது 30) இவர் பணியில் இருக்கின்ற பொழுது கறம்பக்குடி சேவுகன் தெரு ரங்கசாமி மகன் அருண்குமார் குடிபோதையில் வந்து தனக்கு சிகிச்சை அளிக்கும்படி மிரட்டும் தோணியில் கூறியுள்ளார். மேலும் செவிலியர் ராதிகாவை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். இது சம்பந்தமாக செவிலியர் ராதிகா கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் செல்லத்துரை வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






