என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • தியேட்டர் மேலாளரை அரிவாலாள் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • ஓசியில் படம் பார்க்க வந்தவர்களை தடுத்ததால் ஆத்திரம்

    புதுக்கோட்டை பழனியப்பா கார்னர் பகுதியில் ஒரு தியேட்டர் செயல்பட்டு வருகிறது. இதில் இரவு காட்சிக்கு காந்தி நகர் இரண்டாவது வீதியை சேர்ந்த முகிலன் (வயது 28 ).காமராஜபுரம் 9வது வீதியை சேர்ந்த விக்னேஷ் (28) ஆகிய இருவரும் சென்றனர். பின்னர் அவர்கள் டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுக்காமல் நேராக தியேட்டருக்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தியேட்டர் ஊழியர் சம்பத் அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினார.

    அதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முகிலனும், விக்னேஷும் அந்த தியேட்டரின் மேலாளர் மணிகண்டனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில் அவரது தோள்பட்டை மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தியேட்டர் ஊழியர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முகிலன், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். ஓசியில் படம் பார்க்க சென்று அனுமதி மறுத்த காரணத்தால் தியேட்டர் மேலாளரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருமுறை செப்பேட்டு கோவில் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட உள்ளது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் சத்திரத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் திருமுறை செப்பேட்டுக் கோவில் அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தக் கோவில், வேறெங்கும் இல்லாத வகையில் 12 திருமுறைகளில் உள்ள 18,000 பாடல்களை செப்பேடுகளில் இடம் பெற செய்து, கருவறையில் சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட உள்ளது.

    உலகத்திலேயே இது போன்ற கோவில் வேறெங்கும் இல்லாத வகையில் அமைய உள்ளதை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில், சேக்கிழார் சுவாமிகள் அருளிய திருத்தொண்டர் மாக்கதை திருவிழா வரும் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இது தொடர்பாக புதுக்கோட்டையில் திலகவதியார் திருவருள் ஆதீனத் தலைவர் தயானந்த சந்திர சேகர சுவாமிகள் கூறியதாவது:

    கொடும்பாளூர் நாயனார் அவதரித்த இடமாகும். இதனால், அந்த இடத்தை தேர்வு செய்து திருமுறை செப்பேட்டு கோவில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், 12 திருமுறைகளில் உள்ள 18,000 பாடல்களும் செப்பேட்டில் எழுதி சிவலிங்கம் வடிவில் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு செப்பேடுகளும் தலா ஒரு கிலோ எடையில் மொத்தம் 5 டன் எடையில் செய்யப்பட்டு வருகின்றன.

    மேலும் இந்த கோவில் வளாகத்தில் அறுபத்து மூவர் சித்திர கூடம், அருங்காட்சியம், நூலகம், தியானமண்டபம் ஆகியன அமைக்கப்பட உள்ளன. எத்தகைய இயற்கை பேரிடர் வந்தாலும் செப்பேட்டில் எழுதிய எழுத்துக்கள் ஒரு போதும் அழியாது. இது வருங்கால சந்ததியினர் நம்முடைய தொன்மையையும், நம் பாரம்பரியத்தையும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இதை பொது மக்கள் மத்தியில் எடுத்து ெ சால்லும் நோக்கத்துடன் பெரிய புராண திருவிழா என்ற பெயரில் திருமுறை குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி விராலிமலையில் வரும் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது என்றார்.

    • ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.) சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் முகமதலி ஜின்னா தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் மணிமாறன், பொருளாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேரள மாநில அரசை போல தமிழகத்திலும் ஆட்டோவிற்கான இணைய வழி சேவையை நல வாரியத்தின் மூலம் தொடங்கிட வேண்டும், எரிபொருள் உள்பட அனைத்து விலை வாசி உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை உயர்த்திட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்திட வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் பலா் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

    • அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையில் அண்ணா சிலை அருகே அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் சந்திரா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பத்மா கோரிக்கைகள் குறித்து பேசினார். அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அதற்கு முன்பாக உள்ளூர் இடம் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாறுதல் உடனடியாக வழங்க வேண்டும், 3 ஆண்டுகள் பணி முடித்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். 

    • பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ. 80 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு காவல் சரகத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக மாவட்ட காவல்கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையொட்டி தனிப்படை போலீசார் அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஈச்சான்விடுதி பாலம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை அடப்பனவயல் பகுதியைச் சேர்ந்த பாசித்அலி (வயது 34), அய்யனார்புரத்தைச் சேர்ந்த சந்திரதுரை (48), பெரியார் நகரைச்சேர்ந்த ரமேஷ் (34), அம்பாள்புரத்தைச்சேர்ந்த சுப்பிரமணியன் (38), தோப்புக்கொல்லை யைச்சேர்ந்த கமலநாதன்(49), சின்னப்பாநகரை சேர்ந்த சரவணன் (43), உசிலங்குளத்தை சேர்ந்த மாரிமுத்து (39) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 8 அலைபேசிகள், ரூ. 80 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்து வடகாடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

    • மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை

    ஆலங்குடி பகுதியில் மது விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதபாண்டேக்கு தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது

    ஆலங்குடி அருகே மது விற்றுக் கொண்டிருந்த மேலகரு ம்பிரான்கோட்டையை சேர்ந்த நடேசன் மகன் ஜெகதீஸ்வரன் (வயது 43), ராஜேந்திரன் மகன் சதீஷ்குமார் (27). மற்றும் ஆலங்குடி அரசு டாஸ்மாக் கடை அருகில் மது விற்றுக்கொண்டிருந்த அண்ணா நகரை சேர்ந்த மாணிக்கம் மகன் சேகர் ( 59). ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்ததனர். மேலும் அவர்களிடமிருந்து 39 மது பாட்டில்கள் மற்றும் ரூ.3960 பறிமுதல் செய்தனர்.

    • தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மணமேல்குடி வட்டாரக்கிளை சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    வட்டார தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத் துணை தலைவர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் தமிழக முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆகியோரின் சீரிய முயற்சியால் தமிழகத்தில் கல்வியை மேலும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் விதமாக பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2 மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தை ஒதுக்கீடு செய்து, ஒன்று புதுக்கோட்டை தொடக்கக்கல்வி அலுவலகமாகவும், மற்றொன்று அறந்தாங்கி கல்வி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகமாவும் செயல்பட அரசாணை வெளியிட்டதற்கு நன்றி,

    தொடர்ந்து அறந்தாங்கி கல்வி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொடக்கக்கல்வி அலுவலகம் அறந்தாங்கியிலேயே செயல்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக வட்டார செயலாளர் விஸ்வநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் பல்வேறு பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இறுதியில் பொருளாளர் பாண்டி நன்றியுரை கூறினார்.

    கேனில் பெட்ரோல், டீசல் விற்க தடைவிதிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை

    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கேன், பாட்டிலில் பெட்ரோல், டீசல் விற்க போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டையிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பை பலகையில் எழுதி ஒட்டியுள்ளனர். மேலும் வாடிக்கையாளர்கள் கண்ணில்படும் படி தாளில் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. இந்த திடீர் உத்தரவு தெரியாமல் சிலர் கேனில் பெட்ரோல், டீசல் நிரப்ப வந்தனர். அவர்களுக்கு உத்தரவு குறித்து தெரிவித்து கேனில் வழங்க ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.

    • போட்டி தூண்டில் மீன் திருவிழா நடைபெற்றது.
    • 260-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி ஒன்றியம் வார்ப்பட்டு ஊராட்சியில் உள்ள பொய்யாமணி கண்மாயில் போட்டி தூண்டில் மீன் திருவிழா நடைபெற்றது. விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு போட்டி தூண்டில் மீன் திருவிழாவை தொடங்கி வைத்தனர். காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற்ற விழாவில் நத்தம், துவரங்குறிச்சி, சிங்கம்புணரி, பொன்னமராவதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து 260-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு கெண்டை, கட்லா உள்ளிட்ட பலவகை மீன்களை பிடித்தனர். இதனை சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கண்டு களித்தனர்.

    • செல்போன் கடையில் திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டார்.
    • கடையை பூட்டி விட்டு உறவினரை பார்க்க சென்று விட்டார்.

    புதுக்கோட்டை:

    அன்னவாசல் அருகே பரம்பூர் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அமீர்கான் (வயது 33). இவர் பரம்பூர் கடைவீதியில் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர், சம்பவத்தன்று கடையை பூட்டி விட்டு உறவினர் ஒருவரை பார்ப்பதற்கான சென்று விட்டார். இந்நிலையில், கடையின் மேற்கூரையை பிரித்து அங்கிருந்த செல்போன்கள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் செல்போன் கடையில் திருடியது அன்னவாசல் அருகே உள்ள பின்னங்குடியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • 6 மாதத்திற்குள் வீட்டு மனை பட்டா வழங்க அதிகாரிகள் உறுதி அளித்தனர்
    • சுக்கிரன்குண்டு கிராமமக்கள் போராட்டம் எதிரொலி:

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள சுக்கிரன்குண்டு கிராமத்தில் சுமார் 40 ஆ ண்டுகளுக்கு மேலாக வசிக்கும் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வீட்டும னை பட்டா வழங்க கோரி, தே.மு.தி.க. தெற்கு மாவட்ட செயலாளர் மன்மதன் தலைமையில் அப்பகுதி மக்கள் கைகாட்டி பகுதியில் கைக்குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில்,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அணவயல் எல்என்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட சுக்கிரன்குண்டு கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா இ ல்லாததால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும், வரு வாய் துறையினருக்கும் மனு கொடுத்தும் இதனால் வரை எந்த பலனும் இல்லை.

    இந்நிலையில் பல ஆண்டு காலமாக நாங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா கேட்டு போராடிவரும் நிலையில் தற்போது எங்கள் பகுதியை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைக்க முயல் வதாகவும், அதனால் அதனை தடுத்து நிறுத்தி நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள பட்டா வழங்க கோரியும் அல்லது அதற்கு பதிலாக அடிப்படை வசதிக ளுடன் கூடிய இடத்தையோ, வீட்டையோ தங்களுக்கு வழங்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது என்றனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தை அறிந்து அங்குவந்த வட்டாட்சியர் செந்திலநாயகி தலைமையிலான வருவாய் துறையினர், டிஎஸ்பி தீபக் ரஜினி, வடகாடு காவல் ஆய்வாளர் மற்றும் கீரமங்கலம் வருவாய் அலுவலர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டத்தில் ஆறு மாத காலத்திற்குள் வீட்டு மனை பட்டா வழங்குவதாக வாய்மொழி உத்தரவாக அளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • 2 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன
    • நேரடி நெல் விதைப்பு முறையில் நெல் சாகுபடி

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணைக் கால்வாய் மூலம் காவிரி நீரை கொண்டு 25 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். அதே போன்று சுமார் 1.75 லட்சம் ஏக்கரில் மழை நீரையும், நிலத்தடி நீரையும் பயன்படுத்தி சாகுபடி செய்யப்படும்.

    இதில் அறந்தாங்கி ஆவுடையார் கோவில், மணமேல்குடி, கறம்பக்குடி உட்பட மாவட்டம் முழுவதும் 75 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு முறையில் நெல் சாகுபடி செய்யப்படும்.

    அண்மையில் பெய்த மழைநீரைப் பயன்படுத்தி நிலத்தை உழுது நேரடி நெல் விதைப்பு முறையில் நெல் விதைக்கப்பட்டு வருகிறது. கண்மாய் மற்றும் ஆழ்துளைக் கிணறு தண்ணீர் வசதி உள்ளோர் நெல் நாற்றங்கால் தயாரிப்பிலும் நடவு பணியிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறன்றனர்.

    இந்நிலையில் நடப்பாண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    தென்மேற்கு பருவமழையால் கண்மாய்களில் ஓரளவுக்கு தண்ணீர் உள்ள நிலையில் கடந்தாண்டு இயல்பை விட கூடுதலாக மழை பெய்ததைப் போன்று நிகழாண்டும் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்யும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இது குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கூறியதாவது :

    நேரடி நெல் விதைப்பு முறை அதற்குரிய நெல் விதைகளுடன் ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் வீதம் மானியத்தில் 250 ஏக்கருக்கு நேரடி நெல் விதைப்பு தொகுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    அதே போன்று தேவைக்கு ஏற்ப விதை, இடுபொருட்கள் இருப்பில்ள்ளன என்றார். 

    ×