என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்

    புதுக்கோட்டை

    மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விராலிமலை தாலுகா ஆவூர் அருகே உள்ள கோரையாற்று பகுதியில் இருந்து வந்த ஒரு டிராக்டரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரை பார்த்ததும் டிராக்டர் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் டிராக்டரை சோதனையிட்டபோது அதில் கோரையாற்றிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ½ யூனிட் மணலுடன் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்திய டிராக்டர் உரிமையாளர் சாமிஉரணிப்பட்டி ஆறுமுகம் மகன் ரவி என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்"

    • அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
    • அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று இலுப்பூர் வந்தது கொண்டிருந்தது. போலம்பட்டி ஊரணி என்னும் இடத்தில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் செய்வதறியாது அலறினர். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் டிரைவர், கண்டக்டர் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ராஜராஜ சோழீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
    • நவராத்திரி விழாவை முன்னிட்டு நடந்தது

    புதுக்கோட்டை:

    பொன்னமராதியில் உள்ள பழைமை வாய்ந்த கோவில்களில் ஒன்றான ஆவுடைய நாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நாள்தோறும் சாமிக்கு சிறப்பு வழிபாடும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று அங்கு வைக்கப்பட்டுள்ள கொலுவிற்கு மாலையில் சிறப்பு பூஜைகளும் நாள்தோறும் ஒர அலங்காரத்தில் அம்மன் காட்சியளிக்கிறார் அதே போன்று நான்காம் நாளில் பிரிதிங்கா தேவி கோலத்தில் காட்சியளிக்கும் அம்மனை ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது
    • புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 46 வயது நபருக்கு ஒரு ஆயுள் மற்றும் ஆறாண்டு சிறை தண்டனையும், இரண்டு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கவரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேலு (வயது 46). இவர் கடந்த 2021ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் உன் குடும்பத்தை கொன்று விடுவேன் என்று மிரட்டி அதை பயன்படுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதில்சிறுமி கர்ப்பமானார். இதனால் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றங்கள் உண்டானதை உணர்ந்த பெற்றோர், அவரிடம் விசாரணை செய்த போது சிறுமி நடந்துவற்றை கூறியுள்ளார். பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்த போது, கர்ப்பமாக இருந்தது உறுதியானது.

    இதனையடுத்து இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் விராலிமலை காவல் துறையினர் குழந்தைவேலுவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரனை செய்த நீதிபதி சத்யா இன்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் குழந்தைவேலு மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஒரு ஆயுள் மற்றும் ஆறாண்டு சிறை தண்டனையும் இரண்டு லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7.50 லட்சம் நிவாரணம் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

    இதனை அடுத்து குற்றவாளி குழந்தைவேலு காவல்துறை பாதுகாப்போடு திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளார்

    • உழவர் உற்பத்தியாளர் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது
    • இடு பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கும்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா பெருமருதூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் உமாபதி பிள்ளை,மணமேல்குடி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் ஆர் ராதா கிருஷ்ணன், செயலாளர் மணிமொழியான், பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.

    வேளாண்துறை இயக்குனர் பெரியசாமி.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் தற்போதைய உலர் உற்பத்தியாளர் நிறுவனம் ஈரோடு துள்ளிய பண்ணை திட்ட அலுவலர் டாக்டர் கண்ணன் பாபு. வேளாண்மை அலுவலர் கந்தகிரி வாசன்ஆகியோர் முன்னில வைத்தனர்.

    நிறுவனத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் குழுவின் செயல்பாடு முன்னேற்றம் குறித்து பேசினார். மணமேல்குடி உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனம் 300 விவசாய பங்குதாரர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் செலுத்திய பங்கு தொகை ஒரு நபருக்கு 2 ஆயிரம் வீதம் மொத்தம் ஆறு லட்சம் உள்ளது. இதற்கு இணை பங்கு தொகையாக அரசிடம் இருந்து ரூபாய் 6 லட்சம் வந்துள்ளதால் இதனைக் கொண்டு வேளாண்மை இடு பொருள்களான விதை நெல், பூச்சி மருந்து , உரம் ஆகியவை குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் கடந்த மாதம் வியாபாரம் தொடங்கப்பட்டது, தொடங்கிய ஒரு மாதத்திலேயே ரூபாய் 20 ஆயிரம் லாபம் கண்டுள்ளோம் என்று பெருமிதம் கொண்டார். கூட்டத்தில் உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வி, பார்கவி,தமிழ்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • ஆசிரியர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாராட்டினார்
    • கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த

    புதுக்கோட்டை:

    திருமயம் வட்டார வளமை யத்தில்   இரண்டாம் பருவத்திற்கான, எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை,  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் பாராட்டினார்.

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்க மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி செப்டம்பர் 27 -ந் தேதி முதல் 29-ந் தேதி வரை புதுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. இதில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் தங்கள் ஒன்றிய அளவில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பயிற்சி அளிக்க உள்ளனர்.

    அந்த வகையில் திருமயம் வட்டார வளமையத்தில் இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் பயிற்சிக்கு தேவையான கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் தயாரிக்கும் பணியில்  திருமயம் ஒன்றிய ஆசிரியர்கள் 8 பேர் ஈடுபட்டிருந்தனர். இதனை மாவட்ட முதன்மைக் கல்வி நேரில் பார்வையிட்டு பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் திருமுருகன்,வட்டார வளமைய மேற்பார்வையாளர் குல்ஜார் பானு, வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் பரிசுத்தம், இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது
    • ஒன்றியக்குழு தலைவர் தலைமைவகித்தார்.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி வலையபட்டியில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் சுதா அடைக்கலமணி தலைமைவகித்தார். முகாமினை பேரூராட்சித்தலைவர் சுந்தரி அழகப்பன், வட்டாட்சியர் கே.பிரகாஷ் ஆகியோர் தொடங்கிவைத்தனர். முகாமில் 172 பேருக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டு 22 பேர் அறுவைசிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். முகாமில் பேரூராட்சி உறுப்பினர்கள் மகேஸ்வரி நாகராஜன், புவனேஸ்வரி காளிதாஸ், திருஞானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கத்தி முனையில் மூதாட்டியை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்
    • வாலிபரை சிறையில் அடைத்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் எஸ்.களபம் ஊராட்சியை சேர்ந்த அடைக்கலம் மகன் முருகானந்தம் (வயது 20) . இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தார்.

    அப்போது, அந்த வழியாக வீட்டிற்கு காய்கறிகளை வாங்கிக்கொண்டு சென்ற 65 வயதுடைய மூதாட்டி, முருகானந்தத்திடம் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டு வந்து கொண்டிருந்தார். வாகனம் கும்மங்களம் அருகே உள்ள குளக்கரை வந்தபோது, வாகனத்தை நிறுத்தி மூதாட்டிைய, முருகானந்தம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்த மூதாட்டி சத்தம் போட்டுள்ளார். அப்போது த ான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முகத்தில், கைகளில் குத்தியுள்ளார். வலி தாங்க முடியாமல் மூதாட்டி சத்தம் போட்டதை, கேட்டு ஓடிவந்த பொதுமக்களை பார்த்து முருகானந்தம் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினார். இதையடுத்து பொதுமக்கள் காயத்துடன் கிடந்த அந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து வந்த போலீசார், தப்பியோடிய வாலிபரை தேடிவந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் பதுங்கியிருந்த வாலிபரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்து விசாரணை நடத்தினார். பின்னர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • குளத்தின் வரத்து வாரி ஆக்கிரமிப்பு அகற்றம்
    • ஊராட்சிமன்ற தலைவர் மனு கொடுத்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டைவிடுதி ஊராட்சி கும்மங்குளத்தில் தனி நபர் ஒருவர் குளத்து வரத்து வாரியை ஆக்கிரமிப்பு செய்ததாக, ஊராட்சிமன்ற தலைவர் அகஸ்டின், தாசில்தார் செந்தில் நாயகியிடம் புகார் மனு கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிரு ந்த வரத்து வாரியை அகற்றினர்.

    கும்மங்குளத்தில் உள்ள வரத்து வாரி அக்கிராமத்தில் உள்ள தனிந பர் ஒருவர் வீட்டின் அருகில் உள்ள வரத்து வாரிகளை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர் இந்த ஆக்கிரமிப்பு பல ஆண்டுகளாக நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் போலீசார் மற்றும் புதுக்கோட்டைவிடுதி கிராம நிர் வாக அலுவலர்கள் வீரமுத்து, மாரீஸ்வரன் மற்றும் ஆலங்குடி வரு வாய் ஆய்வாளர் துரைக்கண்ணு மண்டல வட்ட துணை தாசில்தார் பழனியப்பன் கிராம மக்கள் முன்னிலையில் வரத்து வாரி மரங்கள் மற்றும் செடி கொடிகளை அகற்றி தூய்மை செய்தனர்.

    • பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
    • ஆலங்குடி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள சேவகன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவர், 19 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதைப்பற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண்ணின் தாய் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கு ஆலங்குடி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்பாரதி, சக்திேவலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    • பாம்பு கடித்து விவசாயி இறந்தார்
    • விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

    புதுக்கோட்டை

    அன்னவாசல் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 60) விவசாயி. இவர் நேற்று அன்னவாசல் பெரியகுளம் அருகே உள்ள தனது வயலில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, சுப்பிரமணியனை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விற்பனைக்காக பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • வள்ளியை போலீசார் கைது செய்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு தலைமையில் போலீசார் மாலையீடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டில் ரேஷன் அரிசி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டில் சென்று சோதனை நடத்தினர். இதில் வீட்டின் பின் பகுதியில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ஆயிரத்து 100 கிலோ ரேஷன் அரிசி அதில் இருந்தது. இதையடுத்து 1.1 டன் எடையிலான ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதனை பதுக்கிய மறவப்பட்டியை சேர்ந்த நல்லுவின் மனைவி வள்ளியை (வயது 55) போலீசார் கைது செய்தனர்."

    ×