search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்களை பாராட்டிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்
    X

    ஆசிரியர்களை பாராட்டிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்

    • ஆசிரியர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாராட்டினார்
    • கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த

    புதுக்கோட்டை:

    திருமயம் வட்டார வளமை யத்தில் இரண்டாம் பருவத்திற்கான, எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் பாராட்டினார்.

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்க மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி செப்டம்பர் 27 -ந் தேதி முதல் 29-ந் தேதி வரை புதுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. இதில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் தங்கள் ஒன்றிய அளவில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பயிற்சி அளிக்க உள்ளனர்.

    அந்த வகையில் திருமயம் வட்டார வளமையத்தில் இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் பயிற்சிக்கு தேவையான கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் தயாரிக்கும் பணியில் திருமயம் ஒன்றிய ஆசிரியர்கள் 8 பேர் ஈடுபட்டிருந்தனர். இதனை மாவட்ட முதன்மைக் கல்வி நேரில் பார்வையிட்டு பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் திருமுருகன்,வட்டார வளமைய மேற்பார்வையாளர் குல்ஜார் பானு, வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் பரிசுத்தம், இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×