என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலவச கண்சிகிச்சை முகாம்
- இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது
- ஒன்றியக்குழு தலைவர் தலைமைவகித்தார்.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி வலையபட்டியில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் சுதா அடைக்கலமணி தலைமைவகித்தார். முகாமினை பேரூராட்சித்தலைவர் சுந்தரி அழகப்பன், வட்டாட்சியர் கே.பிரகாஷ் ஆகியோர் தொடங்கிவைத்தனர். முகாமில் 172 பேருக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டு 22 பேர் அறுவைசிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். முகாமில் பேரூராட்சி உறுப்பினர்கள் மகேஸ்வரி நாகராஜன், புவனேஸ்வரி காளிதாஸ், திருஞானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story






