என் மலர்
புதுக்கோட்டை
- புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
- வீட்டிற்கு காலையில் சென்று பார்க்கும் போது பின்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே அவர்கள் வசித்து வந்த வீடு தற்சமயம் பழுது அடைந்திருப்பதால் வீட்டை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து அவர்கள் அருகிலேயே மற்றொரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்கியிருந்து பழுது பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீட்டிற்கு காலையில் சென்று பார்க்கும் போது பின்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகைகள் மற்றும் 300 கிராம் வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுமையாபானு வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
- பஸ் கரம்பக்குடி புதுக்குளம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்கு ஓரமாக பேருந்தை டிரைவர் நிறுத்தினார்.
- அப்போது மேலே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த மின் கம்பி பேருந்தின் மேற்கூறையில் அறுந்து விழுந்தது.
புதுக்கோட்டை :
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து கரம்பக்குடிக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் கரம்பக்குடி புதுக்குளம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்கு ஓரமாக பேருந்தை டிரைவர் நிறுத்தினார்.
அப்பொழுது மேலே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த மின் கம்பி பேருந்தின் மேற்கூறையில் அறுந்து விழுந்தது. அது தீப்பொறியாக பறந்தன. இதனைக் கண்டதும்பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளும் பஸ்சை விட்டு இறங்கி தப்பியோடினர்.
மின் கம்பி அறுந்து விழுந்தவுடன் அதிர்ஷ்டவசமாக மின்தடை ஏற்பட்டதால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த மின்சார துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் கம்பியை சீரமைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- கறம்பக்குடி அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடை பெற்றது.
- கூட்டத்தில் இல்லம் தேடி கல்வி பள்ளி உள்கட்டமைப்பு மாணவர்கள் நலன் பள்ளி செல்லா குழந்தைகள் ஆகிய தலைப்புகளில் ஆலோசனை நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டை :
கறம்பக்குடி அனுமார் கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ராஜா தலைமையில் நடைபெற்றது.
மேலாண்மை குழு தலைவர் சித்ரா முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் வரவேற்று பேசினார். இதில் பார்வையாளராக ஆசிரியர் பயிற்சி கல்லூரி விரிவுரையாளர் தனசேகர் கலந்து கொண்டார். கூட்டத்தில் பள்ளி சுற்றுப்புற சுவர் கழிவறை ஆகியவற்றை பார்வையிட்டனர்.
மேலும் இல்லம் தேடி கல்வி பள்ளி உள்கட்டமைப்பு மாணவர்கள் நலன் பள்ளி செல்லா குழந்தைகள் ஆகிய தலைப்புகளில் ஆலோசனை நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இருபால் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.
- ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோகிலா (வயது 35).
- கையெழுத்திட செல்லும் போதெல்லாம் தன்னையும், குடும்பத்தினரை–யும் கீரமங்கலம் போலீசார் மிரட்டி வருவதாக கோகிலா புகார் தெரிவித்தார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோகிலா (வயது 35). நடைபாதை பிரச்சினை தொடர்பாக கீரமங்கலம் போலீசாரால் கடந்த 20-ந்தேதி வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். அவ்வாறு கையெழுத்திட செல்லும் போதெல்லாம் தன்னையும், குடும்பத்தினரையும் கீரமங்கலம் போலீசார் மிரட்டி வருவதாக கோகிலா புகார் தெரிவித்தார்.
இதனால் தனது நிம்மதியை இழந்து விட்டதாக கூறியதோடு, இந்த பிரச்சினையில் தனது கணவரையும் இணைத்து விட்டதால் அவர் பயந்துபோய் எங்கு போனார் என்றே தெரியவில்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த கோகிலாவின் உறவினர்கள் போலீசாரை கண்டித்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த அறந்தாங்கி வட்டாட்சியர் மற்றும் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைக்குரிய நடை பாதையை சீர் செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் கீரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- 12 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி நடந்தது
புதுக்கோட்டை:
எல்.ஐ.சி. முகவர்கள், பாலிசிக்கான போனசை உர்த்தி வழங்க வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவ காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். முகவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி அறந்தாங்கியில் கோட்டத் தலைவர் செல்வகணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிளைத் தலைவர் முகமது அலி ஜின்னா, செயலாளர் செல்லையா, சுப்பிரமணியன், கிளை முன்னணி முகவர்கள் சாத்தையா, அஜய்குமார்கோஸ், செந்தில்குமார், ரவிக்குமார், பழனிச்செல்வம், முருகன், தெட்சிணாமூர்த்தி, ஞானசேகரன், பெண் முகவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கோ -ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இலக்கு ரூ.130 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- கலெக்டர் கவிதா ராமு தகவல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை புதிய பேருந்துநிலைய வளாகத்தில் அமைந்துள்ள முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தொடங்கிவைத்தார்.
பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:
புதுக்கோட்டை விற்பனை நிலையத்தில் தீபாவளி 2021 பண்டிகை காலத்தில் ரூ.94 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது தீபாவளி 2022 -க்கு ரூ.130 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், 'கனவு நனவு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 11-வது மற்றும் 12-வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தொpவித்தார்.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், முருகேசன், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக குழு உறுப்பினர் லெனின், மண்டல மேலாளர் அம்சவேணி, மேலாளர் கூடுதல் பொறுப்பு அய்யப்பன், விற்பனை நிலைய மேலாளர்கள் பாண்டியன், ராஜ்முகமது மற்றும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
- பட்டதாரி பெண் மாயமானார்
- ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்
புதுக்கோட்டை:
ஆலங்குடி பாரதிதாசன் சாலையில் வசிப்பவர் செந்தில்வேல் மகள் விஷாலி (வயது 23). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். வீட்டில் இருந்த இவர், திடீரென் காணவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வட்டாரங்களில் தேடி பார்த்தும் விஷாலி கிடைக்கவில்லை. இதனை அடுத்து வந்த புகாரை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து மாயமான பட்டதாரி பெண்ணை தேடிவருகிறார்.
- பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த செட்டிகுளம் வடகரையில் செந்தில்குமார் (வயது 35), காமராஜர் புரத்தை சேர்ந்த சரவணன் ( 38), அதே பகுதியை சேர்ந்த சேகர்(50), ஆலங்குடியை சேர்ந்த மகேஸ்வரன் (38), பள்ளத்தி விடுதியை சேர்ந்த பாண்டியன் (35 ) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 54 கார்டுகளும் ரொக்கம் ரூ. 54, 200 பறிமுதல் செய்தனர்.
- வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
- விவசாயி வீட்டில் திருட முயன்றவர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகேயுள்ள கே.ராசியமங்க லத்தை சேர்ந்தவர் மத்தியாஸ். விவசாயியான இவரது வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற சுந்தரநாயகி புறத்தை சேர்ந்த செல்வம் (வயது 35) என்பவதை கடந்த 2015-ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஆலங்குடி குற்றவியல கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி விஜய்பாரதி, விவசாயி வீட்டில் திருட முயன்ற செல்வத்திற்கு ஐ.பி.சி. 454-ன்படி ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், ஐ.பி.சி.380-ன்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். ேமலும் இந்த தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடடார்.
- மதுரையில் பணியாற்றியபோது, தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஏராளமான பத்திர பதிவுகளை முறைகேடாக செய்துள்ளார்.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடந்த வீட்டின் முன்பு பொதுமக்கள் சிலர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவாளராக (தணிக்கை பிரிவு) பணியாற்றி வருபவர் அஞ்சனகுமார். இவர் கடந்த பல ஆண்டுகளாக மதுரை மாவட்ட பதிவாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் புதுக்கோட்டை மாவட்ட பதிவாளராக நியமிக்கப்பட்டார்.
இவர் மதுரையில் பணியாற்றியபோது, தனது பதவியை தவறாக பயன்படுத்தி ஏராளமான பத்திர பதிவுகளை முறைகேடாக செய்துள்ளார். அதன் மூலம் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.
பின்னர் சில மாதங்கள் தேனிக்கு இடமாறுதலாக அங்கும் பணியாற்றி உள்ளார். அவர் மீதான புகார்களின் அடிப்படையில் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார், அஞ்சனகுமார் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து அவர் தற்போது பணியாற்றி வரும் புதுக்கோட்டைக்கு இன்று அதிகாலை வந்தனர். புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் அஞ்சனகுமார் வசித்து வரும் புதுக்கோட்டை நகர் பகுதியான கே.எல்.கே.எஸ். நகரில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக சோதனையை தொடங்கினர்.
அதிகாலை 6.30 மணி முதல் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. அஞ்சனகுமார் எங்கெங்கலெ்லாம் சொத்துக்களை வாங்கியுள்ளார், வங்கி உள்ளிட்டவகையில் அவரது முதலீடு எவ்வளவு, அது தொடர்பான ஆவணங்கள் பலவற்றை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் அஞ்சனகுமாரிடமும் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 இருசக்கர வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அஞ்சனகுமார் வீட்டில் இருந்த யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அவர்களின் செல்போன்களையும் பெற்றுக்கொண்டனர். அதேபோல் வெளி நபர்களையும் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடந்த வீட்டின் முன்பு பொதுமக்கள் சிலர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விசாரணை முடிவில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. * * * புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வரும் மாவட்ட பதிவாளர் அஞ்சனகுமார் வீட்டை படத்தில் காணலாம்.
- சி.ஐ.டி.யு.வினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
- போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
புதுக்கோட்டை
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.வினர் புதுக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு அரசு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு.) மண்டல தலைவர் கார்த்திக்கேயன் தலைமை தாங்கினார். இதில், ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே பணப்பலன்களை வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். விருப்ப ஓய்வில் சென்றவர்கள் மற்றும் பணியில் இருக்கும் போது மரணமடைந்த தொழிலாளர்களுக்கு 2019-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். 30 நாட்களுக்கு முன்பாக சட்டப்படி வழங்க வேண்டிய தீபாவளி முன்பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். தொழிற்சங்கங்களை அழைத்து போனஸ் பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உச்சவரம்பின்றி 20 விழுக்காடு போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் மணிமாறன், பொருளாளர் முத்துக்குமார், நிர்வாகிகள் சாமிஅய்யா, செந்தில்நாதன், அண்ணாத்துரை, சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் முகமதலிஜின்னா, பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஓய்பெற்ற நல அமைப்பு மாவட்டத் தலைவர் லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்."
- கோட்டைப்பட்டினம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
- மின் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டை:
நாகுடி, கோட்டைப்பட்டினம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், அரசர்குளம், மாங்குடி நாகுடி, கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஆவுடையார்கோவில், மீமிசல், கரூர், பொன்பேத்தி, திருப்புனவாசல், அமரடக்கி அம்பலாவனேந்தல், கரகத்திக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின் வினியோகம் இருக்காது என்று அறந்தாங்கி மின் உதவி செயற்பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார்."






