என் மலர்
புதுக்கோட்டை
- ஆம்னி பேருந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது
- காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 5 பேர்
புதுக்கோட்டை:
மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஜெகதாப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பாலத்திலிருந்து தலைக்குப்பற ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து க்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் சிறிய காயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து நேற்று இரவு சென்னை நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. இதில் தொண்டியிலிருந்து 2 பேரும், மீமிசலிலிருந்து 2 பேர் என ஓட்டுனர் உட்பட மொத்தம் 5பேர் ஆம்னி பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலை ஜெகதாபட்டினம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முத்தனேந்தல் பாலத்தின் மீது மோதி தலைக்குப்பற கவிழ்ந்தது.
அப்போது பேருந்தில் பயணம் செய்தவர்கள் உயிருக்கு போராடி சத்தமிட்டுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டைப்பட்டினம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பொதுமக்கள் உதவியோடு விபத்தில் காயமடைந்த அருள்ப்ரீத்தி (வயது 26), ஜேம்ஸ்பாலன் (30), நஜ்புநிஷா (50), அகமது (10), ஒட்டுனர் விஜயகுமார் (39)ஆகிய 5 பேரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து கோட்டைப்பட்டினம் காவல்த்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்னி பேருந்தில் ஓட்டுனர் உட்பட 5 பேர் மட்டுமே பயணம் செய்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ராஜராஜ சோழீஸ்வரர் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது
- நவராத்திரி விழாவை முன்னிட்டு
புதுக்கோட்டை:
பொன்னமராவதி ஆவுடைய நாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மீனாட்சி திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுகோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பலமைவாய்ந்த கோயில்களில் ஒன்றான ராஜ ராஜ சோழீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நாள்தோறும் கோயிலில் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜையும் அபிஷேக ஆராதனையும் அதனை தொடர்ந்து நாள்தோறும் ஒவ்வொரு அலங்காரத்திலும் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். அதனைத் தொடர்ந்து இன்று அம்மனுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.
திருக்கல்யாண வைபோகத்தின் துவக்கமாக ஊர் அம்பலகாரர் ராஜா தலைமையில் பக்தர்களால் சிர்வரிசை எடுத்து வரப்பட்டு, சிவாச்சாரியார்கள் சரவணன் மற்றும் ஹரி ஆகியோர் வேத மந்திரம் முழங்க, மங்கள வாத்தியம் முழங்க பக்தர்கள் புடை சூழ மீனாட்சி திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள் பெற்று சென்றனர். வைபோகத்திற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.
- மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்
- கோவில் உண்டியல் உடைத்து கொள்ளை நடந்துள்ளது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வெள்ளை முனியன் கோவில் உண்டியல் உடைப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையில் அருள்மிகு வெள்ளை முனியன் கோவில் உள்ளது. வாரத்தின் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்வார்கள். இக்கோவிலில் பூசாரி யாக இந்திரா நகரை சேர்ந்த சுப்ரமணியன் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, புைஜகள் முடித்துவிட்டு கோவில் பூசாரி சுப்பிரமணியன் கோவில் கதவுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். வழக்கம் போல் காலையில் கோவில் கதவுகளை திறந்த பொழுது, கோவிலின் உள்ளே இருந்த உண்டியல் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை கொள்ளை யடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் சந்திரசேகரன், கந்தர்வகோட்டை காவல்துறையில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழங்கு பதிவு செய்து, கோவில் உண்டியலை உடைத்த மர்ம நபர்களை வலை வீசிதேடி வருகின்றனர். கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் கோவிலின் உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக உள்ளது.
- இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது
- புதுக்கோட்டையில் தி.மு.க. இளைஞரணி சார்பில்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் தி.மு.க. இளைஞரணி சார்பாக 1-வது வார்டு நரிமேடு பகுதியில் இல்லம் தேடி இளைஞரணி சேர் க்கை முகாம் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் நகரச் செயலாளர் செந்தில் முன்னிலையில் நடைப்பெற்றது. தி.மு.க. இளைஞர் அணியை வலுப்படுத்தும் வகையில் புதுக்கோட்டையில் முதற்கட்டமாக 42 நகராட்சி வார்டுகளில் இளைஞரணியில் இளைஞர்களை அதிகபடியாக சேர்க்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, புதுக்கோட்டை எம்.எல்.ஏ.முத்துராஜா, நகரச் செயலாளர் செந்தில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், கீரை.தமிழ்ராஜா, சுப.சரவணன், மாவட்ட பொருளாளர் லியாகத்அலி, மாவட்ட அவைதலைவர் அரு.வீரமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், துணை அமைப்பாளர் நடராஜன், நகர இளைஞரணி அமைப்பாளர் கணேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் செல்லத்துரை, எட்வர்ட் சந்தோசநாதன், நகர்மன்ற உறுப்பினர்கள் மதியழகன், பழனிவேலு, பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி புதுநகர் குமார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு இளைஞரணி உறுப்பினர்களை சேர்த்தனர்.
- அரிசி ஆலையில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார்
- மயங்கி கீழே விழுந்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பி.குளவாய்ப்பட்டி சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அருள் அலெக்ஸ் (வயது40). இவர் ஆலங்குடி தனியார் அரிசி ஆ லையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், சம்பவத்தன்று மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்த சக கூலித்தொழிலாளிகள், அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அலெக்ஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆலங் குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 75 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடந்தது
- அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. அண்டனூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் மஞ்சம்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
அதேபோல் கந்தர்வகோட்டை கிராம சபை கூட்டம் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையிலும், பழைய கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் ராணி முருகேசன் தலைமையிலும், காட்டு நாவல் ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் ஆரஞ்சு பாப்பா குணசேகரன் தலைமையிலும், பல்லவராயன் பட்டி ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் கவிதா மணிகண்டன் தலைமையிலும் அரவம்பட்டி ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் சிவரஞ்சனி சசிகுமார் தலைமையிலும், கோமாபுரம் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு தலைமையிலும் நடைபெற்றது.
அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே மேலப்பட்டு ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. மூக்கணாங்குடியிருப்புகிராமத்தில் ஊராட்சிமன்ற தலைவர் அயூப்கான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிராமபொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கறம்பக்குடி
கறம்பக்குடி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளிலும் அதன் தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. குழந்திரான் பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றன. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரை கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பற்றி பேசினார்.
மேற்கண்ட அனைத்து கிராம சபை கூட்டங்களிலும் அரசு பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததுடன், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
- விற்பனைக்கு மது கடத்தியவர் கைது செய்யப்பட்டார்
- கூடுதல் விலைக்கு விற்பதற்காக
புதுக்கோட்டை:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை இடையாத்தி வடக்கு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் தர்மராஜ் (வயது 30 ) இவர், கூடுதல் விலையில் விற்பனை செய்வதற்காக, ஆலங்குடி அரச மரம் அருகில் உள்ள மதுக்கடையில் மது பாட்டில்கள் வாங்கிக்க ண்டு சென்றார். அப்போது இதனை பார்த்த அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 48 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
- கடனை திருப்பிக்கேட்டவரை உருட்டு கட்டையால் தாக்கியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பாச்சிக்கோட்டை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 41 ) இவரிடம், ஆலங்குடி பகுதியில் வசிக்கும் அருள் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த பணத்தை நீண்ட நாட்களாக கொடுக்காததால், தர்மராஜ் கடனை திருப்பி கேட்டுள்ளார். அப்போது அருள், அவரது சகோதரர் மற்றும் நண்பர் ஆகிய 3 பேரும் சேர்ந்து அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து தர்மராஜை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, தர்மராஜை தாக்கிய 3 பேரை வலை வீசி தேடிவருகின்றனர்.
- பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வாலிபரை கைது செய்தனர்.
- அதிகாலை வேளையில் வீடு புகுந்து
புதுக்கோட்டை
திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலையில் மர்ம ஆசாமி புகுந்தான். இதனை பார்த்த வீட்டில் இருந்த பெண் சத்தம் போட்டார். உடனே அந்த மர்ம ஆசாமி வாயில் துணையை வைத்து அடைத்து கட்டி போட்டார். பின்னர் அங்கு தனி அறையில் இருந்த 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு, தாயின் கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினான். இேத போல் மற்றொரு தெருவில் தனியாக தூங்கிய பெண்ணிடம் ஒரு பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினான்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நேரடி கட்டுப்பாட்டில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் திருட்டு ஆசாமி திருச்சியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. நேற்று அங்கு சென்ற போலீசார் அவனை பிடித்து விசாரித்தனர். அவன், புதுக்கோட்டை மாவட்டம் அதிராமபட்டினம் பகுதியைச் சேர்ந்த முகமது உசேன் (வயது 28) என்பதும், அதிகாலை வேளையில் வீடு புகுந்து பெண்களிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபடுவதோடு, அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை பறித்து செல்வதையும் வழக்கமாக செய்து வந்துள்ளான். இவன் மீது மதுரை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து முகமது உசேனை போலீசார் கைது செய்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
- வாகனம் பழுது நீக்கும் பட்டறையில் தீ விபத்து
- வாகனம் பழுது நீக்கும் பட்டறையில் தீ விபத்துக்குள்ளானது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது37). இவர் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாலையில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.நேற்று இரவு வழக்கம் போல் வேலையை முடித்துக் கொண்டு, கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென கடையின் மேற்கூரைக்கு மேலே செல்லும் மின் கம்பியில் மின் கசிவு ஏற்பட்டு கடையில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் கடையில் பழுது பார்ப்பதற்க்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான 15ற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கடை முழுவதும் தீயில் எரிந்து சேதமாகியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மற்ற கடைகளுக்கு தீ பரவாதவாறு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகம் அருகே இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் மொத்தம் 13,45,297 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.
- இதில் 80 முதல் 99 வரையுள்ள வயதில் 27,161 வாக்காளர்களும், 100 வயதை கடந்த 168 வாக்காளர்களும் என மொத்தம் 27,329 மூத்த வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, 80 வயதை கடந்த மூத்த வாக்காளர்களுக்கு, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள வாழ்த்து மடலை, கலெக்டர் கவிதா ராமு வழங்கி பெருமைப்படுத்தினார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் மொத்தம் 13,45,297 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளார்கள். இதில் 80 முதல் 99 வரையுள்ள வயதில் 27,161 வாக்காளர்களும், 100 வயதை கடந்த 168 வாக்காளர்களும் என மொத்தம் 27,329 மூத்த வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.
தேர்தல் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கும், தேர்தல்களை சுதந்திரமான, நியாயமான, அனைவரையும் உள்ளடக்கியதான, அணுகக்கூடிய மற்றும் பங்கேற்கத்தக்க வகையில் அதனை நேர்மையாக நடத்துவதற்கு பொறுப்புள்ள மூத்த வாக்காளர்களால்தான் நமது நாடு ஜனநாயக நாடாக இவ்வுலகில் செழித்து ஒளிர்கிறது.
அனைத்து மூத்த குடிமக்களும் உங்களது தேர்தல் பங்கேற்பினைத் தொடர்வதன் மூலம் இந்திய ஜனநாயகத்தில் இளம் தலைமுறையினரின் நேர்மையான பங்கேற்பு, இந்திய ஜனநாயகத்தில் இளம் தலைமுறையினரின் நேர்மறையான பங்களிப்பிற்கு முன்மாதிரியாக திகழ்வதில் பெருமிதம் கொள்கிறோம்.
மூத்த குடிமக்கள் அவர்களது ஜனநாயக கடமைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதிக அளவிலான தேர்தல் பங்கேற்பினை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொருவருக்கும் படிவம் 12பி-ஐ நிரப்பி அவரவர் வீட்டிலிருந்து வாக்காளிக்கும் வசதியினை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி உள்ளது.
எனவே மூத்த வாக்காளர்களாகிய நீங்கள் ஜனநாயக செயல்பாடுகளில் தொடர்ந்து பங்கேற்று நமது நாட்டின் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), சொர்ணராஜ் (அறந்தாங்கி), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், வட்டாட்சியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- ஜெயகுமார் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கம்பெனியில் வசூல் செய்யும் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார்.
- ஜெயக்குமார் புதுக்கோட்டையில் பல்வேறு கடைகளில் பணத்தை வசூல் செய்து கொண்டு தலைமை தபால் நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்
புதுக்கோட்டை,
திண்டுகல் மாவட்டம் செட்டிநாயக்கம் சத்யா நகரை சேர்ந்தவர் அர்ச்சுன பெருமாள் மகன் ஜெயகுமார் (வயது 47). இவர் அங்குள்ள தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கம்பெனியில் வசூல் செய்யும் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம் போல் அவர் புதுக்கோட்டையில் பல்வேறு கடைகளில் பணத்தை வசூல் செய்து கொண்டு தலைமை தபால் நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பழைய மருத்துவமனை அருகே வந்தபோது அவர் வைத்திருந்த டிராவல் பேக்கில் இருந்த வசூல் பணம் ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்தை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஜெயகுமார் கொடுத்த புகாரின்பேரில் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.






