என் மலர்
புதுக்கோட்டை
- முதல்வருக்கு புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் நன்றி தெரிவித்துள்ளனர்
- கட்டணமில்லா பேருந்து சேவையில் 3.53 கோடி பேர் பயணம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அரசு நகரப் பேருந்துகளில் இது வரை கட்டணமில்லா திட்டத்தின் கீழ் 3.53 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர் என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 அரசுப் போக்குவரத்து பணிமனைகளிலிருந்து 420 பேருந்துகள் 564 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஒரு நாளைக்கு 2.65 லட்சம் பயணிகள் சராசரியாக பயணம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப் போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 398 மாற்றுத்திறனாளிகள், 15 மாற்றுத்திறனாளி உதவியாளர்கள், 20 திருநங்கைகள் என சராசரியாக 86,340 பேர் வீதம் இதுவரை 3.53 கோடி பெண்கள் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ள பட்டுள்ளனர்.
குறிப்பாக மகளிர் கட்டணமில்லா பேருந்தை எளிதில் அடையாளம் காணும் வகையில் அதுகுறித்த வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லையும் பேருந்தின் முகப்பில் ஒட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தினந்தோறும் கூலி வேலை, பணிநிமித்தமாக வெளியூர் செல்லும் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இத்திட்டம் பேருதவியாக உள்ளதால் பெண்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டத்தின் கீழ் அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரி டம் கனிவுடனும், பேருந்து நிறுத்தத்தில் எத்தனை பெண்கள் காத்திருந்தாலும் அவர்களை நிறுத்தி பேருந்தில் ஏற்றவும் பேருந்து நடத்துனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகளிரின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவிடும் வகையில் முதலமைச்சர் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதால், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு புதுக்கோட்டை மாவட்ட பெண்கள் அனைவரும் நன்றியினை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்து கொண்டனர் என கலெக்டர் தெரிவித்தார்.
- வேட்டியில் தீப்பிடித்து முதியவர் இறந்தார்.
- புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்
புதுக்கோட்டை
விராலிமலை தாலுகா கொடும்பாளூர் இடையபட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி (வயது 80). இவர், புகைபிடிக்கும் பழக்கம் உடையவர். இந்நிலையில், நேற்று முன்தினம் இவர், வீட்டில் இருந்தபோது `சிகரெட்' பிடிப்பதற்காக தீப்ெபட்டியில் இருந்து தீக்குச்சியை எடுத்து பற்றவைத்து விட்டு குச்சியை கீழே போட்டுள்ளார். அப்போது தீக்குச்சி எதிர்பாராதவிதமாக அவரது வேட்டியில் பட்டு மளமளவென தீப்பிடித்தது. இதையடுத்து அவர் கீழே விழுந்து புரண்டு அலறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் ஓடி வந்து தீக்காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முதியவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்சாரம் பாய்ந்து பெய்ண்டர் உயிரிழந்தார்
- பணி செய்து கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வாழாமங்களம் பகுதியை சேர்ந்தவர் ராசு மகன் கார்த்திக் (வயது 26) பெயிண்டர். இவர் அதே பகுதியை சேர்ந்த சபரிராஜன் உட்பட 4 பேர் அன்னவாசல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு சென்றனர்.
வீட்டின் பின்புறத்தில் கார்த்திக் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை பார்த்த சபரிராஜன் அவரை காப்பாற்ற முற்பட்டார். இதில் கார்த்திக் அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். சபரிராஜன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். உடனே சக பணியாளர்கள் சபரிராஜனை மீட்டு அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகனத்தில் வந்த பெண் மீது மிளகாய் பொடி தூவி நகை, பணத்தை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்
- பூப்பு நீராட்டு விழாவிற்கு சென்று வந்த போது நடந்தது
புதுக்கோட்டை:
புதுக்காட்டை அருகே இருச்சக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் மீது மிளகாய் பொடி தூவி, கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் மற்றும் செல்போன் பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா சம்மன்தான்பட்டியை சேர்ந்தவர் சிதம்பரம் மனைவி ரஞ்சிதா(வயது26). இவர் காயம்பட்டியில் நடந்த பூப்பு நீராட்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு தனதுஇரு சக்கர வாகனத்தில் வீடு நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.
ஆன்டிபட்டி மேல கன்மாய் பாலம் அருகே வந்த போது, மர்ம நபர்கள் 2 பேர் திடீரென் ரஞ்சிதா மீது மிளகாய் பொடியை தூவி, கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஏழுரை பவுன் தங்க சங்கிலியையும், வைத்திருந்த பணம் பத்தாயிரத்தையும், மொபைல் போனையும் பறித்து கொண்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து நமணசமுத்திரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாசகன் வழக்குபதிவு செய்து நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளையும் பார்த்து விசாரனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பொன்னமராவதியில் கபாடி போட்டி நடைபெற்றது
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே ஆலவயல் பெரியஊரணி விநாயகர் கோயில் திடலில் 3 - ஆண்டு கபாடிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல் , கரூர் ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த அணி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றிபெற்ற அணியினருக்கு ஒன்றியக்குழுத்தலைவர் சுதாஅடைக்கலமணி, துணைசேர்மன் தனலெட்சுமிஅழகப்பன், ஊராட்சித்தலைவர் சந்திராசக்திவேல், ஆகியோர் வெற்றிக்கோப்பை மற்றும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
- முத்துமாரியம்மன் கோவிலில் உற்சவ விழா நடந்தது
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் 50ம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 28-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் தினந்தோறும் அம்மன் ராஜராஜேஸ்வரி, மீனாட்சி, சிவலிங்க பூஜை, ஆண்டாள், அன்னபூரணி,. சந்தானலெட்சுமி, கஜலெட்சுமி, மஹிசாசுரமர்த்தினி, சரஸ்வகி என பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்பு போடும் நிகழ்ச்சி விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று ஊஞ்சல் உற்சவ விழா நடைபெற்றது. விழாவில் மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இந்த விழாவையொட்டி நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடைபெற்றது. கொடையாளர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் த.ஜெயலலிதா மற்றும் கோயில் பூஜகர்கள் செய்திருந்தனர்.
- தம்பதியிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்
புதுக்கோட்டை
திருச்சி, பாலக்கரை மல்லிகைபுரத்தை சேர்ந்த சண்முகம் மகன் பழனியப்பன் (வயது 41). இவர் தனது மனைவியுடன் விராலிமலை அருகே உள்ள பாம்பாலம்மன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். விராலிமலை-திருச்சி சாலையில் உள்ள தனியார் பஞ்சுமில் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பழனியப்பன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி கணவன்-மனைவி இருவரையும் மிரட்டி அவர்களிடமிருந்து செல்போன், பணம் மற்றும் நகை ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பழனியப்பன் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் இவ்வழக்கில் தொடர்புடைய 2 பேர் இருப்பதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விராலிமலை போலீசார் திருநெல்வேலி மாவட்டம், மானூர் தாலுகா திருமலாப்புரத்தை சேர்ந்த சுடலை மகன் பெரியசாமி (38), ஆலங்குளம் ரோடு மாறாந்தை பகுதியை சேர்ந்த சங்கரன் மகன் பேச்சிமுத்து (27) ஆகிய 2 பேரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து தம்பதியிடம் பணம்-நகையை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
- விராலிமலை முருகன் கோவிலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நவராத்திரி நிறைவு நாளையொட்டி நடந்தது
புதுக்கோட்டை
விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து மலைமேல் உள்ள நவராத்திரி கொழு மண்டபத்தில் விதவிதமான அலங்காரங்களுடன் கூடிய கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்ற வந்தது. தினமும் முருகன் மற்றும் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமியை முன்னிட்டு நேற்று முருகபெருமாள் சமேத வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து அம்புஎய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விராலிமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- வீட்டின் பீரோவை உடைத்து நகை-பணம் திருட்டு போனது
- மாட்டை அவிழ்ப்பதற்காக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையை சேர்ந்தவர் அம்சவள்ளி (வயது 57). இவரது வீட்டில் மருமகள் உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அம்சவள்ளியின் மருமகள் வீட்டை பூட்டி விட்டு மாட்டை அவிழ்ப்பதற்காக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்திருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அறையின் கதவு உடைக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. அதில் இருந்த துணிகள் உள்ளிட்ட பொருட்கள் தரையில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 1 பவுன் நகை, ரூ.33 ஆயிரம், முக்கிய ஆவணங்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்."
- லாட்டரி டிக்கெட் விற்றபவர் கைது செய்யப்பட்டார்
- போலீசாருக்கு வந்த தகவலின்படி நடவடிக்கை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வம்பன் பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்தித பாண்டேக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழகரும்பிரான்கோட்டை சேர்ந்த சிவசாமி மகன் கருணாநிதி (வயது 51) என்பவர் வம்பன் குளக்கரையில் லாட்டரி டிக்கெட் விற்றதை பார்த்த தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மூன்று எண் உள்ள நோட்டு ஐந்து மற்றும் ரூபாய் 18,990 பறிமுதல் செய்தனர்.
- சட்ட விரோதமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- 12 மது பாட்டில்கள் பறிமுதல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மேலநெம்மக்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சண்முகசுந்தரம் (வயது 35)இவர் பாத்தம்பட்டி சாலை அண்ணாநகர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததை பார்த்த தனிப்படை போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் ஆய்வாளர் அழகம்மை மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலத்தின் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது.
- விபத்தில் மீரா சரண் மற்றும் அவரது கணவர் பிஜய்குமார் சரண் ஆகியோர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை:
சென்னை அடையார் காந்தி நகரை சேர்ந்தவர் பிஜேஸ்வரன் மகன் பிஸ்வாராஜன் (வயது 38). வங்கி ஊழியர். இவர், தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிஜய்குமார் சரண் (75), இவரது மனைவி மீரா சரண் (67).
பிஸ்வாராஜன் வேலை பார்க்கும் வங்கியில் வேலை பார்க்கும் சுஜித் சுதாகரன் மனைவி அஞ்சனா (32). இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் ஒரு காரில் கேரளாவிற்கு சென்று கொண்டிருந்தனர். காரை பிஸ்வாராஜன் ஓட்டினார்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்து விராலூர் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பாலத்தின் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது.
இந்த விபத்தில் மீரா சரண் மற்றும் அவரது கணவர் பிஜய்குமார் சரண் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். பிஸ்வாராஜன் மற்றும் அஞ்சனா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.






