என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டின் பீரோவை உடைத்து நகை-பணம் திருட்டு
- வீட்டின் பீரோவை உடைத்து நகை-பணம் திருட்டு போனது
- மாட்டை அவிழ்ப்பதற்காக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையை சேர்ந்தவர் அம்சவள்ளி (வயது 57). இவரது வீட்டில் மருமகள் உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அம்சவள்ளியின் மருமகள் வீட்டை பூட்டி விட்டு மாட்டை அவிழ்ப்பதற்காக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்திருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அறையின் கதவு உடைக்கப்பட்டு பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. அதில் இருந்த துணிகள் உள்ளிட்ட பொருட்கள் தரையில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 1 பவுன் நகை, ரூ.33 ஆயிரம், முக்கிய ஆவணங்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்."
Next Story






