என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கள்ளச்சந்தையில் மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்
    • மது பாட்டில்கள் பறிமுதல்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் எதிரில் அமைந்துள்ள சாந்தநாத புரம். பஸ் நிலையம் அருகில் இருப்பதால் இங்கு ஏராளமான தங்கும் விடுதி கள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

    இந்த பகுதியில் மட்டும் 5 மதுபானகடைகள் உள்ளன. பார் வசதிகளுடன் கூடிய இந்த கடைகளில் எப்போதும் கூட்டம் அலை மோதும்.2 கடைகள் அருகருகே அமைந்துள்ளதால் மதுபான பிரியர்களை தங்கள் பாருக்கு இழுக்க போட்டியும் நடப்பதுண்டு.

    இந்த நிலையில் நேற்று மிலாடி நபியை முன்னிட்டு மதுபானம் விற்க தடைவிதிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    ஆனால் சாந்தநாதபுரம் பகுதியில் டாஸ்மாக் பார்களில் விற்பனை படு ஜோராக நடந்தது. இதை போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கடைகள், பார்கள் அரசு விடுமுறை நாட்களில் தடையை மீறி இயங்கின.

    432 பாட்டில் பறிமுதல்

    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இச்சடி அருகே சட்ட விரோத விற்பனைக்காக காரில் கொண்டு செல்லப்பட்ட 432 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கைது

    இதேபோல் கணேஷ் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மச்சுவாடி பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட வசந்தகுமார் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 18 மது பாட்டில்கள், ஒரு செல்போனையும், புதுக்கோட்டை நகர காவல் சரகத்திற்கு உட்பட்ட பிஎஸ்என்எல் ஆபீஸ் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பாலு என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அங்கு சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட ஜெயச்சந்திரன் என்பவரையும் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 91 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    தனிப்படை போலீசார் இன்று அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு இதுவரை சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நால்வரை கைது செய்துள்ளதோடு அவர்களிடமிருந்து சுமார் 600 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.எனினும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கூட்டங்களில் தொடர்ந்து சட்ட விரோத மது விற்பனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • மாவடட செயலாளரும், அமைச்சருமான எஸ்.ரகுபதி அழைப்பு தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது
    • மாவடட செயலாளரும், அமைச்சருமான எஸ்.ரகுபதி அழைப்பு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்பின்னர் நடக்கும் முதல் பொது உறுப்பினர் கூட்டம் நாளை புதுக்கோட்டை மாலையீட்டில் உள்ள கற்பக விநாயகா திருமண மகாலில் காலை 10 மணிக்கு நடக்கின்றது.

    தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ரகுபதி தலைமையில் நடைப்பெறும் கூட்டத்தில் அமைச்சர் பெருமக்கள், முன்னாள் - இந்நாள் சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக முன்னோடிகள் அனைவரும் தவறாது கலந்துக் கொள்ள வேண்டும் என தனது அறிக்கையில் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டதுறை அமைச்சருமான எஸ்.ரகுபதி அழைப்பு விடுத்துள்ளார்.

    • புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • தொடர் கனமழையால் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து நாளை அரசு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

    இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தொடர் கனமழையால் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

    • மாநில அளவிலான கபடிபோட்டி நடந்தது
    • மாநில அளவிலான கபடிபோட்டி நடந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகரில் இளைஞர்களால் நடத்தப் பட்ட மாநில அளவிலான கபடிபோட்டியில் தமிழக த்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அணியினர் பங்கேற்றனர். ஒவ்வொரு போட்டியிலும் கபடி வீரர்கள் ஆக்ரோசத்துடன் சீறிப்பாய்ந்து விளையாடினர். வீரர்களின் ஆக்ரோஷத்தை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். மிகவும் ஆக்ரோஷமாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பரிசை கல்லணையை சேர்ந்த அணியினரும், இரண்டாவது பரிசை ஆலங் குடி அணியினரும், மூன்றாவது பரிசை சிவகங்கை அணியினரும், நான்காவது பரிசை புதுக்கோட்டை மாவட்ட அணியினரும் தட்டிச் சென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்கப்பரிசும், சுழற் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

    • அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு நடந்தது
    • 251 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை

    ஆலங்குடி ஐயப்பன் நகரில் எழுந்தருளி உள்ள அருள்பாலித்து வரும் ஐயப்பன் கோவிலில் புரட்டாசி கமிட்டி தாரர்களால் நடத்தப்படும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஐயப்பனுக்கு பால், பன்னீர் உட்பட பல வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்ட ன. பின்னர் சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சந்நிதானத்தில் பதினெட்டு படிகளுக்கு இருபுறத்திலும் 251 சுமங்கலி பெண்கள் அமர்ந்து திரு விளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜைக்கு பின் பெண்களுக்கு மாங்கல்ய கயிறு குங்கு மம் ஆகிய மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர் அன்னதான கமிட்டியாரால் அருசுவை உணவு வழங்கப்பட்டது.

    • தந்தை வீட்டில் இருந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்
    • குடும்ப தகராறில் நடந்த விபரீதம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை காமராஜபுரம் 1ம் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது58). இவரது மகள் வித்யா(27).

    இவருக்கு, புதுக்கோட்டை மாவட்டம் ராசாபட்டி தாலுகாவை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கர் என்பவருடன் 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. சங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வருமாம்.

    அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைப்பார்களாம்.

    இந்நிலையில் கடந்த 7-ந் தேதி கணவனுடன் தகராறு ஏற்பட்டதில் கோபித்து கொண்டு புதுக்கோட்டை காமராஜபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வித்யா வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேன் ஊக்கில் தனது சால்வையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மகள் தூக்கில் பிணமாக இருப்பதை பார்த்த பழனிச்சாமி மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.

    இச் சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் கனேஷ்நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம் வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை சரக டிஎஸ்பி ராகவி விசாரனை நடத்தி வருகிறார். திருமணம் முடிந்து 6 மாதத்தில் பெண் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்த காரணத்தினால் புதுக்கோட்டை ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.

    • பூட்டியிருந்த வீட்டில் நகை- பணம் கொள்ளை நடந்துள்ளது
    • அழகர் கோவிலுக்கு சென்றிருந்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மச்சுவாடி டிரைவர் காலணி 3-வது தெருவை சேர்ந்தவர் பொன்னையா. மரவேலைகள் செய்து வருகிறார். இவரது மனைவி சந்திரா(வயது40).

    இவர்கள் குடும்பத்துடன் மதுரை அருகே அழகர்கோவிலுக்கு வீட்டை பூட்டி விட்டு சென்று, பின்னர் இன்று திரும்பி வந்தனர்.

    வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கிரில் கேட் உடைக்கப்பட்டு ே இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உள்ளே புகுந்து பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த ஒன்றரை பவுன் தங்கநகை மற்றும் 470 கிராம் வள்ளிப் பொருட்களை திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சந்திரா கொடுத்த புகாரின் பேரில் கனேஷ்நகர் காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மனோகர் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றார்.

    • 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறை பாய்ந்தது
    • போக்சோ வழக்கில் கைதானவர்கள்


    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 33), இவர் கடந்த மாதம் 6-ந் தேதி 1 கிலோ 100 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திரு ந்தபோது, அறந்தாங்கி காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இதே போல் கீரனூர் அருகே குளத்தூர் தாலுகா நெடுதாம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38), இவர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கீரனூர் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

    இவர்கள் இருவரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே பரிந்துரையின் பெயரில், மாவட்ட கலெக்டர் கவிதாராமு உத்தரவின் பெயரில் இவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களை காவல்த்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    புதுக்கோட்டை:

    அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட அம்புராணி மேல தெருவை சேர்ந்தவர் அய்யாவு (வயது 30), விவசாயி. இவர் தனது நண்பரான சிவா (31) உள்ளிட்ட 5 பேருடன் அங்குள்ள அன்னதான கொட்டகை கீழே கல்தளம் அமைப்பதா? அல்லது சிமெண்டு தளம் போடுவதா? என்பது பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த கணபதி மகன் சங்கர் உள்ளிட்ட 3 பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சிவாவை வெட்ட முயன்றுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அய்யாவு அவர்களை தடுத்து உள்ளார். இதில் அய்யாவு கையில் வெட்டு விழுந்தது. இதனை தொடர்ந்து சங்கர் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து, அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அய்யாவுவை அருகே இருந்தவர்கள் மீட்டு கே.புதுப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இந்த சம்பவம் தொடர்பாக கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சங்கர் உள்ளிட்ட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்."

    • மாநில கல்வி கொள்கை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை

    மாநிலகல்விக் கொள்கையின் கலந்தாய்வுக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், பெற்றோர்கள் கலந்து கொண்டு மாநில கல்விக் கொள்கையில் இடம் பெற வேண்டிய தங்களது கருத்துகளை மனுவாக அளித்தும், கோரிக்கை வைத்தும் பேசினர். கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள், மனுக்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் கூறினார். கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    • மதுபோதையில் பள்ளி வேனை ஓட்டிய டிரைவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
    • அறந்தாங்கி மணிவிலான் தெருவை சேர்ந்தவர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளை நேற்று வகுப்பு முடிந்து ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே சென்றபோது வேன் தாறுமாறாக சென்றதால் அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் அந்த வேனை தடுத்து நிறுத்தினர். அப்போது டிரைவர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கீரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மது போதையில் வேனை ஓட்டிய டிரைவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் அறந்தாங்கி மணிவிலான் தெருவை சேர்ந்த அப்துல் ரியாஸ் (வயது 36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பள்ளி வேன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வக்கீலை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
    • தந்தை கொடுத்து வந்த ஜீவனாம்சத்தை தடுக்க வாதாடினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருவாப்பூர் அம்பாள்புரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி பரமே ஸ்வரன் தனது மனைவிக்கு மாதந்தோறும் ரூ. 3000 மகன் யோகேஸ்வரனுக்கு மாதந்தோறும் ரூ. 1500 ஜீவனாம்சமாக கொடுத்து வந்தார்.

    இதில் யோகேஸ்வரன் மைனராக இருந்தபோது நீதிபதி ரூ. 1500 ஜீவனா ம்சமாக கொடுக்க உத்த ரவிட்டார். இப்போது அவர் மேஜராக மாறிவிட்டதால் மகனுக்கு கொடுத்து வந்த ஜீவனாம்சத்தை நிறுத்த பரமேஸ்வரன் முய ற்சித்தார்.

    வக்கீல் மீது தாக்குதல்

    பின்னர் இது தொடர்பாக புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோவில்பட்டி ரோடு முனி கோவில் தெருவை சேர்ந்த ராஜா(வயது 51) என்ற வக்கீலின் உதவியை பரமேஸ்வரன் நாடினார். அவரும் யோகேஸ்வரனுக்கு கொடுத்து வந்த ஜீவனாம்சத்தை நிறுத்த கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் யோகே ஸ்வரனுக்கு வக்கீலின் மீது கடும் கோபம் ஏற்பட்டது. இதை யடுத்து புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் அசோசியேஷனில் இருந்த வக்கீல் ராஜாவை யோகேஸ்வரன் கையால் அடித்து உதைத்து விட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வக்கீல் ராஜா புதுக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வக்கீலை தாக்கிய யோகேஸ்வரனை கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.

    ×