என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • கோவிலில் தாலிக்கட்டி காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
    • பெற்றோர்கள் எதிர்ப்பு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி திருப்பதி நரைச்சேர்ந்த வர் சொக்கலிங்கம் மகள் பிரியா (வயது 21 )இவர் பிஏ பட்டதாரி ஆவார்.

    இதே பகுதி கேவிஸ் தெருவைச்சேர்ந்த சுப்பையா மகன் சிவாஜி (29). இவர்கள் இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்த இவர்கள், தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

    பெற்றோர்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் நெம்மக்கோட்டை சித்திவிநாயகர் கோவிலில் மாலை திருமணம் செய்து கொண்டனர்.

    தங்கள் திருமணத்தால் உறவினர்களிடமிருந்து எதிர்ப்பு வரும் என்ற அச்சதுடன் பாதுகாப்பு கருதி, ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

    மேலும் பிரியா கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர்சிறப்பு உதவி ஆய்வாளர் கவிதா வழக்கு பதிவு செய்து இரு பெற்றோர்களையும் வரவழைத்து பேசினார். ஆனால் இவர்களை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததால்,

    வயதை காரணம் காட்டி போலீசார் இருவரையும் சமதானப்படுத்தி காதல் ஜோடிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    • சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் அப்பகுதில் சோதனை நடத்தினர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்தது. தகவலின் படி, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார் மற்றும் போலீசார் அப்பகுதில் சோதனை நடத்தினர். அப்போது வெண்ணவால்குடி ரெங்கசாமி மகன் குமார் (வயது 47), கல்லுக்குண்டு கரையைசேர்ந்த கோவிந்தசாமி மகன் முருகேசன் ( 51) ஆகியோர் மது விற்பனைசெய்து கொண்டிருப்பதை பார்த்த போலீசார், அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த 104 மது பாட்டில்களும் மற்றும் ரூபாய் 3,970 பறிமுதல் செய்து ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை வழக்கு பதிவு செய்தவிசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்தி திணிப்பு தமிழகத்தில் ஒரு நாளும் வெற்றி பெறாது என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்தார்.
    • யார் வேண்டுமானாலும் தேவர் நினைவிடத்துக்கு வரலாம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் மற்றும் திருச்சி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பிறகு திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு பிரதமர் வருவது என்பது அவருடைய முடிவு. யார் வேண்டுமானாலும் தேவர் நினைவிடத்துக்கு வரலாம்.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் எந்த அணியையும் சாராமல் நடுநிலைமையாகத்தான் உள்ளனர். பிரசாரத்துக்கு வரும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்பது என்பது அந்தந்த நிர்வாகிகளின் முடிவை பொருத்தது.

    மத்திய அரசு இந்தியை மீண்டும் திணிக்க முயற்சி செய்வது கண்டனத்துக்குரியது. இந்தி திணிப்பு தமிழகத்தில் ஒரு நாளும் வெற்றி பெறாது. அவ்வாறு முயற்சி செய்தால் போராட்டம் வெடிக்கக்கூடிய சூழல் ஏற்படும்.

    சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வினருக்கு இருக்கை ஒதுக்குவது தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் என்ன முடிவு எடுக்க உள்ளார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாவட்ட வளர்ச்சி 

    • பெரியார் நகரில் உள்ள பாண்டித்துரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் நடந்து வரும் சோதனை அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. அரசு ஒப்பந்ததாரரான இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் ரிப்லெக்ட் விளக்குகள், செடிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஒப்பந்தம் எடுத்தார். இதில் பல கோடி முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று திருச்சி மற்றும் மதுரையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பெரியார் நகரில் உள்ள பாண்டித்துரை வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் சோதனை நடந்து வருகிறது. இங்கு பாண்டிதுரையின் வீடு மற்றும் அலுவலகம் ஒரே வளாகத்தில் உள்ளது. இதில் தனித்தனி குழுக்களாக சென்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த சோதனையில் கைப்பற்றப்படும் ஆவணங்களின் அடிப்படையில் பாண்டித்துரையின் முறைகேடுகள் பற்றிய முழு விவரம் வெளிவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் நடந்து வரும் இந்த சோதனை அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உயர் மின் கோபுர விளக்கு எரிய வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரசடிப்பட்டியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் நிதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்ப–ட்டது. இதனால் அப்பகுதியில் போதிய வெளிச்சம் இருந்தா–ல் பொதுமக்களும் பெண்களும் அச்சமின்றி நடமாடி வந்தனர். இந்நிலை–யில் நீண்ட காலமாக அந்த விளக்கு எரிவதில்லை. இதனால் நான்கு ரோடுகள் சந்திக்கும் பகுதியில் இருள் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் போதிய வெளிச்சம் இன்றி அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட நிர்வாகம் பழுதடைந்த உயர் கோபுரமின்விளக்கை சீரமைக்குமாறு பொது–மக்கள் கோரிக்கை எடுத்து–ள்ளனர்.

    • சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது
    • உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அரசுமருத்து–வமனையில் உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு ஆலங்குடி பேரூராட்சி மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து சிறப்பு மருத்துவ முகாமை நடத்தியது.

    முகாமை ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் துவக்கி வைத்தார். மருத்துவர் டாக்டர் ஜோதிராஜன், சித்த மருத்துவர்டாக்டர் மணிவண்ணன், செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி, சுகாதார ஆய்வாளர் ஜேம்ஸ் மற்றும் பேரூராட்சி மேற்பார்வையாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை யில் முகாம் நடைபெற்றது.

    முகாமில் வீடற்றோர் மற்றும் முதியோர்களுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் சூரணம் மற்றும் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும் பொடி மற்றும் பூஸ்டர் ஊசி இலவசமாக வழங்கப்பட்டது.

    • அரசு பெண் ஊழியரிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்துள்ளது
    • தலைக்கவசம் அணிந்து மர்ம நபர்கள் கைவரிசை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா தச்சமல்லி பகுதியை சேர்ந்தவர் கலைமதி (வயது35). இவர் தச்சமல்லியில் மக்கள் நலப்பணியாளராக பணியாற்றி வருகிறார். கணவர் சிவக்குமார் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.

    கோட்டையூரில் வாடகை வீட்டில் வசித்து வரும் கலைமதி, தனது இரண்டு பிள்ளைகளையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு தச்சமல்லிக்கு வேலைக்கு வந்து சென்றுள்ளார்.

    அதே போன்று நேற்று தனது இரண்டு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஏம்பல்விச்சூர் சாலையில் சென்று கொண்டிருக்கையில் அங்கே இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2மர்ம நபர்கள் கலைமதியின் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து ஏம்பல் காவல் நிலையத்தில் கலைமதி புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்த காவல்த்துறையினர் சிசிடிவி ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பகல் நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்து 5 சவரன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • உள்ளாட்சி தொழிலாளர்கள் சங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    புதுக்கோட்டை:

    உள்ளாட்சித் தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி தொழிலாளர் சங்கம்(சிஐடியு) சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் முகமதலிஜின்னா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் அன்புமணவாளன், துணை செயலாளர் மாரிக்கண்ணு, ஒருங்கிணைப்பாளர் சி.முத்தையா உள்ளிட்டோர் பேசினர்.

    ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு அறிவித்துள்ளபடி குறைந்தபட்ச ஊதியம் ரூ.600 வழங்க வேண்டும். மாதம் 5-ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்துள்ள வருங்கால வைப்புநிதி மற்றும் கூட்டுறவு சங்கத்திற்காக பிடித்தம் செய்துள்ள தொகைகளை தாமதமின்றி வழங்க வேண்டும். தீபாவளி முன்பணமாக நிரந்தர ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம், ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்துத்தரப்பு முன்களப் பணியாளர்களுக்கும் அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகை ரூ.15- உடனடியாக வழங்க வேண்டும்.

    நகராட்சியில் பயன்படுத்தப்படும் தள்ளுவண்டி மற்றும் பேட்டரி வண்டியை பழுதுநீக்கித் தருவதோடு, தரமான வண்டிகளை கூடுதலாக வழங்க வேண்டும். கிருமி நாசினி, முகக்கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை கூடுதலாக வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலார்கள் பேராடிப்பெற்ற வாரவிடுப்பு, விழாக்கால விடுப்புகளை அமுல்படுத்த வேண்டும். குப்பைகளைப் பிரிப்பதற்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.

    • கம்யூனிஸ்ட்டு கட்சி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
    • ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு

    புதுக்கோட்டை

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆவுடையார்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ஜெபமாலைபிச்சை தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தில்

    100 நாள் வேலை திட்டத்தில் காலை 7 மணிக்கு பணிக்கு செல்ல வேண்டும் என்பதை மாற்றி 9 மணிக்கு பணிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்,100 நாள் வேலை திட்டத்தில் புதிய செயலியை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது அதை நீக்க வேண்டும்,100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடக்கூடிய விவசாய தொழிலாளர் சங்க குழுமங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் ஆறு லட்சத்தில் 400 சதுர அடியில் வீடு கட்டி கொடுக்க வேண்டும்,மாதம் 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார்.
    • காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தார்

    புதுக்கோட்டை

    விராலிமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 27). இவர் நேற்று முன்தினம் விராலிமலை அருகே மலைக்குடிபட்டியில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு இலுப்பூர்- விராலிமலை சாலையில் திரும்பி சென்று கொண்டிருந்தார். ராஜகிரி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். அதில் பலத்த காயமடைந்த யோகேஸ்வரனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி யோகேஸ்வரன் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • மழையில் நனைந்து நெல்மணிகள் வீணாகி வருகின்றன.
    • விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    புதுக்கோட்டை

    நெல் அறுவடை

    கறம்பக்குடி தாலுகாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் குறுவை நெல் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை விவசாயிகள் ஏற்கனவே செயல்பட்டு வந்த கொள்முதல் நிலையங்களில் குவியலாக கொட்டி வைத்துள்ளனர். ஆனால் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படாததால் தற்போது நெல் குவியல்கள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.கறம்பக்குடி, வெள்ளாளவிடுதி, அம்புக்கோவில், மழையூர், திருமணஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் குவியலாக வைக்கப்பட்டு உள்ளது.தற்போது சில பகுதிகளில் அறுவடை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர். 

    • விராலிமலை பகுதிகளில் நாளை மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • பராமரிப்பு பணி காரணமாக

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் வடுகப்பட்டி துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் விராலிமலை, விட்டமாபட்டி, நம்பம்பட்டி, ராஜாளிபட்டி, பொய்யாமணி, சீத்தப்பட்டி, செட்டியபட்டி, தேன்கனியூர், கொடும்பாளுர், மாதுராபட்டி, ராமகவுண்டம்பட்டி, கவரப்பட்டி, செவல்பட்டி, விராலூர், வானதிராயன்பட்டி, ராஜகிரி, மலைக்குடிபட்டி, கோத்திராபட்டி, கட்டகுடி, பாப்பாவயல் ஆகிய பகுதிகளிலும்,வடுகப்பட்டி துணைமின் நிலையங்களிலிருந்து மின்வினியோகம் பெறும் அனைத்து கம்பெனிகள், வேலூர், கத்தலூர், முல்லையூர், புதுப்பட்டி, சூரியூர், மதயானைப்பட்டி, திருநல்லூர், சாத்திவயல், பேராம்பூர், கல்லுப்பட்டி, ஆலங்குடி, சீத்தப்பட்டி, வளதாடிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என விராலிமலை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    ×