என் மலர்
நீங்கள் தேடியது "கம்யூனிஸ்ட்டு"
- போலி செய்திகளை பரப்பினாலும் நாம் ஒற்றுமையாய் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
- போலி செய்திகளை பரப்பினாலும் நாம் ஒற்றுமையாய் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எழுச்சித்தமிழர் திருமாவை விட நீங்கள் பெரிய தியாகம் செய்துவிட்டிர்களா இபிஎஸ்?.
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) 'தமிழ்நாடு 26வது மாநில மாநாடு' நடந்து வருகிறது. "வெல்க ஜனநாயகம்" என தலைப்பிடப்பட்ட இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதில் சிபிஐ முன்னாள் மாநில தலைவர் முத்தரசன், இந்தநாள் தலைவர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், கருப்பும் சிவப்பும் சேர்ந்ததுதான் திராவிடர் கழகம். எங்களில் பாதி நீங்கள். கொள்கை முரண்கள் எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது.
சமூகத்திற்கு தேவையான நமது கொள்கை வலுவாக இருப்பதால் தான் நமது நட்பும் வலுவாக இருக்கிறது. சேலத்தில் தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும். அதன் பணிகள் நாளையே தொடங்கப்படும். முத்தரசன் வைத்த கோரிக்கையை தட்டிக்கழிக்க முடியுமா!..
நாடு கடுமையான சூழலை எதிர்கொண்டு வரும் தருணத்தில் நாம் கொள்கை உறவோடு சேர்ந்திருக்கிறோம். சதி செய்தாலும் போலி செய்திகளை பரப்பினாலும் நாம் ஒற்றுமையாய் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கம்யூனிஸ்டுகள் மீது திடீர் பாசம் வந்துள்ளது.
கம்யூனிஸ்டுகளை விட நீங்கள் பெரிய தியாகம் செய்து விட்டீர்களா, எழுச்சித்தமிழர் திருமாவை விட நீங்கள் பெரிய தியாகம் செய்துவிட்டீர்களா இபிஎஸ்?.
அடிமைத்தனத்தை பற்றி எடப்பாடி பேசலாமா? அவருக்கு பேச என்ன உரிமை உள்ளது. திராவிட, கம்யூனிஸ்ட் கொள்கைகளை பற்றி தெரியாத இபிஎஸ் வாய்க்கு வந்தததை பேசி வருகிறார். ரெய்டு மூலம் நம்மை மிரட்ட நினைத்தவர்கள் தற்போது மிரண்டு போயிருக்கின்றனர்.
எப்படியாவது கூட்டணியை கலைத்துவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் நமது லட்சியம் பெரிது. அதற்காகத்தான் நாம் அனைவரும் ஒன்றாகி இருக்கிறோம். கூட்டணியில் இருந்தாலும் விமர்சனங்களை முன்வைக்க கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் தவறியதில்லை" என்று தெரிவித்தார்.
- கம்யூனிஸ்ட்டு கட்சி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
- ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு
புதுக்கோட்டை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தின் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆவுடையார்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ஜெபமாலைபிச்சை தலைமை வகித்தார். ஆர்பாட்டத்தில்
100 நாள் வேலை திட்டத்தில் காலை 7 மணிக்கு பணிக்கு செல்ல வேண்டும் என்பதை மாற்றி 9 மணிக்கு பணிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்,100 நாள் வேலை திட்டத்தில் புதிய செயலியை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது அதை நீக்க வேண்டும்,100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடக்கூடிய விவசாய தொழிலாளர் சங்க குழுமங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் ஆறு லட்சத்தில் 400 சதுர அடியில் வீடு கட்டி கொடுக்க வேண்டும்,மாதம் 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.






