அரசு பெண் ஊழியரிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

அரசு பெண் ஊழியரிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்துள்ளது தலைக்கவசம் அணிந்து மர்ம நபர்கள் கைவரிசை
அரசு பெண் ஊழியரிடம்  5 பவுன்   சங்கிலி பறிப்பு
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா தச்சமல்லி பகுதியை சேர்ந்தவர் கலைமதி (வயது35). இவர் தச்சமல்லியில் மக்கள் நலப்பணியாளராக பணியாற்றி வருகிறார். கணவர் சிவக்குமார் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.

கோட்டையூரில் வாடகை வீட்டில் வசித்து வரும் கலைமதி, தனது இரண்டு பிள்ளைகளையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு தச்சமல்லிக்கு வேலைக்கு வந்து சென்றுள்ளார்.

அதே போன்று நேற்று தனது இரண்டு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஏம்பல்விச்சூர் சாலையில் சென்று கொண்டிருக்கையில் அங்கே இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த 2மர்ம நபர்கள் கலைமதியின் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து ஏம்பல் காவல் நிலையத்தில் கலைமதி புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்த காவல்த்துறையினர் சிசிடிவி ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பகல் நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்து 5 சவரன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com