என் மலர்
புதுக்கோட்டை
- போலீஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
- செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், கே.புதுப்பட்டி அருகே தெக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மாங்குடி. கடந்த மாதம் 20-ந் தேதி 10 பேர் கொண்ட கும்பலால் மாங்குடி வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும் கொலை செய்யப்பட்ட மாங்குடி மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு, லாட்டரி விற்பனை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் கொலை செய்யப்பட்ட மாங்குடியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது அவரது செல்போனுக்கு கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வந்த ராணி ரமாதேவி என்பவர் மாங்குடி சம்பந்தப்பட்ட வழக்குகள் குறித்த குறுந்தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து மாங்குடி கொலை செய்யப்பட்ட மறுநாளே ராணி ரமாதேவி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு அதிகாரிகள் கொடுத்த அறிக்கையின் படி ராணி ரமாதேவியை பணியிடைநீக்கம் செய்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டார்.
- வாலிபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
- வழிப்பறி வழக்கில் தேடப்பட்ட
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிகரெட் கம்பெனி வாகனத்தை காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பகுதியில் 9 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் மேற்பார்வையாளரை தாக்கி ரூ. 11 லட்சத்தை கடந்த 6-ந் தேதி கொள் ளையடித்து சென்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காரைக்குடி டிஎஸ்பி வினோஜி உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இதில் சில பேர் கைதான நிலையில், மேலும் 6 நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய காளையார் கோவிலை சேர்ந்த குட்லக் கார்த்தி என்பவர் ஆலங்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்னிலையில் சரணடைந் தார். இவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதியின் உத்தரவையடுத்து அவர் புதுக்கோட்டை கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
- காரில் கடத்தி வரப்பட்ட 48 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்
- வாலிபரை கைது செய்தனர்.
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிசானத்தூர் விளக்கு ரோடு அருகில் வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது கந்தர்வகோட்டையை சேர்ந்த குமார் மகன் கனகவேல் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து 48 கிலோ புகையிலை பொருட்களையும், காரையும் பறிமுதல் செய்து, கனகவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- கல்குவாரியில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் பறிமுதல் செய்தனர்
புதுக்கோட்டை
கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி அரசு புறம்போக்கு இடத்தில் கல் குவாரி இயங்குவதாக கீரனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த பகுதிக்கு சென்ற போது கல்குவாரியில் இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். பின்னர் அங்கு சோதனை நடத்தியபோது பாறைகளை உடைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்களான ஜெலட்டின் குச்சி 78 பாக்கெட் மற்றும் ஜெலட்டின் குச்சி 11 வயர் 50 மீட்டர் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் விசாரணை நடத்தியதில் 1 ஏக்கர், 35 சென்ட் பரப்பளவு உள்ள பாறையில் வெடி மருந்துகள் வைத்து பாறைகளை தகர்த்து வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- மனநிலை பாதிக்கப்பட்டவர் மாயமானார்
- மனநிலை பாதிக்கப்பட்டவர் மாயமானார்
புதுக்கோட்டை:
ஆலங்குடி கம்பர் தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் ரமேஷ் (வயது 47) மன நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த இவர், சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குபதிவு செய்து காணாமல் போன ரமேஷை தேடி வருகின்றனர்.
- டீக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது
- ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
புதுக்கோட்டை :
மாவட்டம் பொன்னமராவதி சந்தை வீதியில் முத்துலட்சுமி பாண்டியன் என்பவர் அப்பகுதியில் 15 ஆண்டு காலமாக டீக்கடை நடத்தி வருகிறார். அண்மையில் சந்தை கட்டுமான பணி நடைபெற்று வருவதால் சுப்பையா கோயில் மலையான் ஊராணி கரை என்னும் இடத்திற்கு மூன்று மாதத்திற்கு முன்னதாக கடையை மாற்றி வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் நள்ளிரவில் தீரென கடையில் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த கடை உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் கடை முழுவதும் எரிந்தது. இதில் கடையில் இருந்த இரண்டு மர சோக்கேஸ், அலமாறி, பிரிட்ஜ்,கூல் டிரிங்ஸ், கேஸ் அடுப்பு உள்ளிட்ட சுமார் ரூ 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 1,137 பயனாளிகளுக்கு ரூ.80.06 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- கலெக்டர் முன்னிலையில் நடந்தது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கடியாபட்டி ஊராட்சி, பனங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் தமிழக அரசு பல்வேறு அரசுத் துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
இம்முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில், 1,137 பயனாளிகளுக்கு ரூ.80.06 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் கவிதா ராமு தலைமையில், அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கி பேசினார்.
இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, வருவாய் கோட்டாட்சியர் கணேசன் (பொ), வேளாண் இணை இயக்குநர் (பொ) சக்திவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளார் ராஜேந்திர பிரசாத், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (பொ) மாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ராமலிங்கம், வட்டாட்சியர் பிரவீணா ேமரி, ஊராட்சிமன்றத் தலைவர் உமாமகேஸ்வரி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
- தனித்தனி குழுக்களாக சென்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- ஆவணங்களின் அடிப்படையில் பாண்டித்துரையின் முறைகேடுகள் பற்றிய முழு விவரம் வெளிவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. அரசு ஒப்பந்ததாரரான இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் ரிப்லெக்ட் விளக்குகள், செடிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஒப்பந்தம் எடுத்தார்.
இதில் பல கோடி முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நேற்று காலை முதல் திருச்சி மற்றும் மதுரையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பெரியார் நகரில் உள்ள பாண்டித்துரை வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இங்கு பாண்டிதுரையின் வீடு மற்றும் அலுவலகம் ஒரே வளாகத்தில் உள்ளது. இதில் தனித்தனி குழுக்களாக சென்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் கைப்பற்றப்படும் ஆவணங்களின் அடிப்படையில் பாண்டித்துரையின் முறைகேடுகள் பற்றிய முழு விவரம் வெளிவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஒப்பந்ததாரர் பாண்டித்துரைக்கு சொந்தமான 5 இடங்களில் இரண்டாவது நாளாக இன்று சோதனை நடைபெற்று வருகிறது. இதில், ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.50 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- போலீசார் விசாரணையில் கணவர் வீரானந்தம், வீட்டு செலவிற்காக ஜெயபாரதிக்கு பணம் அனுப்பாமல் இருந்துள்ளார்.
- மன விரக்தியில் இருந்த ஜெயபாரதி, மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பொன்னமராவதி:
திருச்சி மாவட்டம் பாலகுறிச்சி அருகே உள்ள பெத்தக்கோன் பட்டியை சேர்ந்தவர் ஜெயபாரதி (வயது 36). இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரானந்தம் (42) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று. இவர்களுக்கு 8 வயதில் ஹரி என்ற மகன் உள்ளார்.
வீரானந்தம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் ஜெயபாரதி தனது மகனுடன் பொன்னமராவதியில் உள்ள வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர்களது வீடு கடந்த சில தினங்களாக பூட்டியே கிடந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தாயும், மகனும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்களின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கணவர் வீரானந்தம், வீட்டு செலவிற்காக ஜெயபாரதிக்கு பணம் அனுப்பாமல் இருந்துள்ளார். இதனால் மன விரக்தியில் இருந்த ஜெயபாரதி, மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ஜெயபாரதி எழுதி வைத்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றினர்.
அதில் எங்கள் முடிவிற்கு யாரும் காரணமில்லை. என் குடும்ப சூழ்நிலை. எனது உடல்நிலை, எனது மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை தேடிக்கொண்டேன். எனது உடலை எனது தகப்பனாரிடமோ, கணவரிடமோ ஒப்படைக்க வேண்டாம். செத்த பிறகு கூட நான் யாருக்கும் செலவு வைக்க விரும்பவில்லை.
8 வருடமாக எனது கணவர் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. என் மகனுக்கும் அவர் தந்தையாகவோ, எனக்கு கணவராகவோ அவர் இருந்ததில்லை. என்னுடைய மகனிடம் நீ போய் உங்கப்பாவிடம் இரு என சொன்னேன், ஆனால் அவன் கேட்காமல் என் கூடவே விஷமருந்தி விட்டார். இந்த வீட்டில் இருந்து ஒரு குண்டூசிகூட எனது கணவருக்கோ, தகப்பனார் வீட்டிற்கோ போகக்கூடாது என எழுதி வைத்துளாளர்.
தாயும், மகனும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சில மாணவர்களும் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை கோரி குறுந்தகவல் அனுப்பியிருக்கின்றனர்.
- மாணவன் கலெக்டருக்கு நன்றி தெரிவித்து... உங்களை மறக்கமாட்டேன்... நீங்கள் ஒரு தேவதை என குறுந்தகவல் அனுப்பி தனது நன்றியை தெரிவித்திருக்கிறார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்த நிலையில் கடந்த 9-ந் தேதி பலத்த மழை பெய்தது. அன்றைய தினம் இரவிலும் மழை நீடித்தது. இந்த நிலையில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறைகள் முடிந்த பின் கடந்த 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் அதற்கு முந்தைய நாளில் இரவிலும் மழை நீடித்ததால், மறுநாள் மழை பெய்யலாம் என சூழ்நிலை காணப்பட்டது.
இந்த நிலையில் மழையின் காரணமாக கடந்த 10-ந் தேதி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் கவிதாராமு கடந்த 9-ந் தேதி இரவு அறிவித்தார். அதன்படி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.
இந்த நிலையில் பள்ளிக்கு விடுமுறை விடக்கோரி மாணவர்கள் தரப்பில் இருந்து தனக்கு இன்ஸ்டாகிராமில் பல குறுந்தகவல்கள் (மெசேஜ்) வந்ததாக கலெக்டர் கவிதாராமு நேற்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் மாணவர்கள் அனுப்பிய குறுந்தகவல்களையும் அதில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் ஒரு மாணவர், மேம் பிளீஸ்.... நாளைக்கு ஒரு நாள் மட்டும் லீவு விடுங்க... லீவு இல்லன்னா பைத்தியம் ஆயிருவேன் போல... பிளீஸ்... பலத்த மழை பெய்யுது... லீவ் மட்டும் விடுங்க... உங்களுக்கு கோவில் கட்டுகிறேன் என் மனசுலே... படிச்சு... படிச்சு... பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு'' என அனுப்பியுள்ளார்.
இதேபோல மற்றொரு மாணவர், ''மார்க் வாங்கல மேம்... நாளை எல்லாரும் கேட்பாங்க... உங்களையே நம்பியிருக்கேன். எனக்காக மட்டுமில்லை. அனைவருக்கும் சேர்த்து தான்'' என குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல சில மாணவர்களும் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை கோரி குறுந்தகவல் அனுப்பியிருக்கின்றனர். ஒருவர் செல்லமே...லீவு விடுங்க செல்லமே... என அன்பாகவும் கேட்டிருக்கிறார். மாணவர்களின் கோரிக்கைகளை பார்த்த கலெக்டர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு வந்த பின் அதில் ஒரு மாணவன் கலெக்டருக்கு நன்றி தெரிவித்து... உங்களை மறக்கமாட்டேன்... நீங்கள் ஒரு தேவதை என குறுந்தகவல் அனுப்பி தனது நன்றியை தெரிவித்திருக்கிறார்.
இந்த குறுந்தகவல்களை கலெக்டர் பகிர்ந்துள்ள நிலையில் அதனை பலரும் லைக் செய்து தங்களது கருத்துகளை முகநூலில் பதிவு செய்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட கடந்த 10-ந் தேதி பகலில் ஒரு துளிகூட மழை இல்லை. கடும் வெயில் அடித்தது என்பது வேறுகதை.
- படத்திறப்பு விழா நடைபெற உள்ளது
- நாளை மறுநாள் நடைபெறுகிறது
புதுக்கோட்டை
சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் முதன்மை இயக்குனர் ஏ.சி.ரவிச்சந்திரன் தாயார் சந்திரா அம்மாள் படத்திறப்பு விழா குடுமியான்மலையில் நாளை மறுநாள் நடக்கிறது.
சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனரும் முதன்மை செயலாக்க திட்ட இயக்குனருமான ஆன்மீக ரத்னா டாக்டர் ஏ.சி.ரவிச்சந்திரனின் தாயாரும், அருள்தாஸின் மனைவியுமான சந்திரா அம்மையார் சமீபத்தில் உயிர் நீத்தார்.
அம்மையாரது 30-வது நாள் நினைவு அனுசரிப்பும் , அம்மையாரின் படத்திறப்பு விழாவும் நாளை மறு நாள் (வெள்ளிக் கிழமை) காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகின்றது.
தொடர்ந்து அங்குள்ள திருமண மண்டபத்தில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்நிகழ்வில் சர்வக்கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் செல்லர்கள், கோ- செல்லர்கள், அடிசனல் பண்டர்கள், பயனாளர்கள்ஏ ராளமானோர் பங்கேற்க உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை மேலாண்மை
இயக்குனர் ஏ.சி.ரவிச்சந்திரன் ஆலோசனையின் பேரில் குடுன்பத்தினரும், அறக்கட்டளை நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.
- மரத்தில் கார் மோதி 2 பேர் பலியாகினர்
- டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள அகரபட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் கபடி வீரர் சேகர்(வயது 42), இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த திருப்பதி(30), சரவணன் (36), மதி(35), ஆனந்த் (37), வெள்ளைச்சாமி (33), மாரிமுத்து, கண்ணன் ஆகிய 8 பேர் ஒரு காரில் விராலிமலை வழியாக புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
கார் சாங்கிராபட்டி அருகே சென்று கொண்டிருந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். மேலும் காயமடைந்தவர்கள் மணப்பாறை, புதுக்கோட்டை மற்றும் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிசைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சரவணன் என்பவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. இது குறித்து தகவலறிந்த இலுப்பூர் போலீசார் நிகழ்விடம் சென்று வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






