என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • பனங்குளம் வடக்கு கிராமத்தில் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • ஆடுகள் கத்தியதால் தூங்கியவர்கள் எழுந்து பார்த்த போது ஒரு கருப்பு நிற காரில் ஆட்டை தூக்கி வைத்துக் கொண்டு அறந்தாங்கி சாலையில் வேகமாக சென்றுள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் ஆடுகள் திருட்டு தொடர்ந்து கொண்டே உள்ளது. அதேபோல பனங்குளம் வடக்கு கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீரமுத்து மகன் சிவக்குமார் (வயது 40) என்பவர் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    அப்போது ஆடுகள் கத்தியதால் தூங்கியவர்கள் எழுந்து பார்த்த போது ஒரு கருப்பு நிற காரில் ஆட்டை தூக்கி வைத்துக் கொண்டு அறந்தாங்கி சாலையில் வேகமாக சென்றுள்ளனர்.

    இதையடுத்து அவர்களை ஒரு மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்றும் அந்த காரை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு மருத்துவ பணியாளர்களுக்கான கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள மருத்துவ பணியாளர்களுக்கு ஈவு தொகை சரியாக வழங்கப்படவில்லை
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையில் பழைய அரசு மருத்துவமனை முன்பு நேற்று மருத்துவத்துறை ஊழியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் அரசு மருத்துவ பணியாளர்களுக்கான கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள மருத்துவ பணியாளர்களுக்கு ஈவு தொகை சரியாக வழங்கப்படவில்லை எனவும், இதனை கண்டித்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மறியலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தபின் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

    • சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனரும், முதன்மை செயலாக்க திட்ட இயக்குனருமான டாக்டர் ஏ.சி.ரவிச்சந்திரனின் தாயாரும், அருள்தாஸின் மனைவியுமான சந்திரா அம்மையாரின் 30-வது நாள் நினைவு அனுசரிப்பு மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி குடுமியான்மலையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை மேலாண்மை இயக்குனர் ஏ.சி.ரவிச்சந்திரன் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்று பேசினார்

    புதுக்கோட்டை ,

    புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனரும், முதன்மை செயலாக்க திட்ட இயக்குனருமான டாக்டர் ஏ.சி.ரவிச்சந்திரனின் தாயாரும், அருள்தாஸின் மனைவியுமான சந்திரா அம்மையாரின் 30-வது நாள் நினைவு அனுசரிப்பு மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி குடுமியான்மலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை மேலாண்மை இயக்குனர் ஏ.சி.ரவிச்சந்திரன் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் சந்திரா அம்மையாரின் திருவுருவ படத்தினை சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற ஜோசப் பீட்டர் தன்ராஜ் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் டேனியல் ஜான் கென்னடி, முன்னாள் அரசு வக்கீல் ரவிச்சந்திரன், புதுக்கோட்டை ஜாபர் அலி, பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ், கைவிலிப்பட்டி எம்.சுப்பையா, திருக்களம்பூர் பழனிசாமி, எஸ்.நல்லகுமார், எஸ்.ராமையா, தோப்பட்டி ஜெயசீலன், ஆர்.மாரியபன் மற்றும் சர்வக்கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் உள்பட 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை மேலாண்மை இயக்குனர் ஏ.சி.ரவிச்சந்திரன் ஆலோசனையின் பேரில் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மேட்டுச்சாலையில் மதர் தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
    • மதர் தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் 9-வது பட்டமளிப்பு விழா நாளை (16-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மேட்டுச்சாலையில் மதர் தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பொறியியல் பிரிவில் மெக்கானிக்கல், சிவில், இ.இ.இ., இ.சி.இ., சி.எஸ்.இ., ரோபோட்டிக் மற்றும் ஆட்டோமேஷன் பாடங்களும், பி.டெக். பிரிவில் ஆர்ட்டிபீசியல் இண்டலிஜன்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பிசினஸ் சிஸ்டம், எம்.இ. பிரிவில் வி.எல்.எஸ்.ஐ. டிசைன், எம்.எப்.ஜி. என்ஜினீயரிங், சி.எஸ்.இ., ஸ்ட்ரக்‌ஷரல், பவர் சிஸ்டம்ஸ் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.

    பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் சாதனையாளர்களை உருவாக்கிய பெருமை கொண்ட மதர் தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் 9-வது பட்டமளிப்பு விழா நாளை (16-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. விழாவில், இந்திய விண்வெளி மைய (இஸ்ரோ) முன்னாள் துணை இயக்குநரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப பேரவையின் துணைத்தலைவருமான பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    • பெண்ணை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
    • குடும்பதகராறு ஏற்பட்டபோது சம்பவம்

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் நிம்புனேஸ்வரம் கருப்பையா (வயது 55). கூலி தொழிலாளி. மனைவி மாணிக்கம். கணவன்-மனைவி டையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து சமரசம் செய்து வைப்பது வழக்கம். இந்நிலையில் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த மாரிமுத்து மனைவி பெரிய நாயகி (50). கருப்பையாவை தட்டி கேட்டு விளக்கிவிட சென்றதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கருப்பையா வீட்டில் இருந்த அரிவாளால் பெரியநாயகியின் கழுத்தில் சரமாரிாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது
    • நாகுடியில் நீர்வளத்துறை சார்பில்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் நீர்வளத்துறை சார்பில் விவசாயிகளுடனான கலந்தாய்வு மற்றும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

    தமிழக அரசு சார்பில் கல்லணைக்கால்வாயை விரிவாக்கம் செய்தல், புணரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அக்கினி ஆற்றிலிருந்து மும்பாலை வரையிலான 2ம் கட்ட விரிவாக்கம் மற்றும் நவீன மயமாக்குதல் பணிகளை மேற்கொள்ளுவதற்கு கல்லணை க்கால்வாய்கடைமடை பகுதி விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    இதற்காக நீர்வளத்துறை சார்பில் நாகுடியில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினர். மேலும் தங்கள் பகுதி ஏரி கண்மாய்கள் தூர்வாரப்பட வேண்டும், சறுக்கைகள் மற்றும் மடைகளை பழுதுபார்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

    அப்போது கூட்டத்தில் தலைமை கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்து விவசாயிகளின் கருத்து மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளித்தனர். கல்லணை முதல் கடைமடை மும்பாலை வரை மொத்தமுள்ள 239 கிலோ மீட்டர் தூரம் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றால் அப்பகுதியில் உள்ள 694 ஏரி, கண்மாய்கள் நிரப்பப்பட்டு சுமார் 2 லட்சத்து 27 ஆயிரத்து 472 ஏக்கர் விளை நிலங்கள் நல்ல முறையில் நீர் பாசன வசதி பெற்று செழிப்படையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் பாண்டியன், திலீபன், உதவிப் செயற்ப்பொறியாளர் சண்முகம், புஷ்பராணி, செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், பிரசன்னா, கல்லணைக்கால்வாய் கடைமடை பகுதி பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ், நிர்வாகிகள் பொன்கணேசன், பிஎம் பெரியசாமி, கல்யாணசுந்தரம், வீரப்பன், ராமசாமி, கோவிந்தராஜ் உள்ளிட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
    • நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் கடன் பெறும் விவசாயிகள் அனைவரும் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

    நடப்பு சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் 15 -ந் தேதி ஆகும். எனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் பயிர் காப்பீடு பதிவு செய்து இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிலிருந்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.

    எனவே, விவசாயிகள் இறுதிநேர நெரிசலை தவிர்ப்பதற்கும், தங்களுடைய விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பதிவு செய்த விபரங்களை சரிபார்ப்பதற்கும், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், காப்பீட்டு பிரிமீயத் தொகையை செலுத்தி தங்களது நெற்பயிரை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக்கொ ள்ளப்படுகிறார்கள்.

    கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தினையோ அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தினையோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய சாதாரண கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • ஒன்றியக்குழு தலைவர் தலைமையில் நடைபெற்றது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரணக் கூட்டம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் பரணி கார்த்திக்கேயன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், அந்தந்த பகுதி ஒன்றியக்குழு உறுப்பினர்கள்,தங்கள் பகுதிக்கு வேண்டிய குறை நிறைகளை முன்வைத்தனர். கூட்டத்தில் 9 தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்று பின்பு நிறைவேற்றப்பட்டது.

    அப்போது மும்பாலை ஒன்றியக்குழு உறுப்பினர் நீலாவதி பேசுகையில், வடக்கு அம்மாபட்டினம் முருகன்கோவில் சாலை, வடக்கு மணமேல்குடி அம்மன்கோவில் சாலை மற்றும் அம்பால் நகரில் மின்மாற்றியை சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதே போன்று கரகத்திகோட்டை ஒன்றியக்குழு உறுப்பினர் கணேசன் பேசுகையில், கொடிக்குளம் கண்மாயிலிருந்து கரகத்திகோட்டை வரை சுமார் 30கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பழுதடைந்துள்ளது அதனை சரிசெய்ய வேண்டும் என்றார்.

    கட்டுமாவடி ஒன்றியக்குழு உறுப்பினர் கணேசன் பேசுகையில் தங்கள் பகுதியில் அனைத்து தார்ச்சாலைகளை செப்பனிட்டு தர வேண்டும் என கூறினார். இதற்கு பதிலளித்த ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் அனைத்து கோரிக்கைகளும் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நிறைவேற்றித்தரப்படும் என தெரிவித்தார்.

    • புதுக்கோட்டையில் தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம் நடந்தது
    • இந்தி திணிப்புக்கு எதிராக

    புதுக்கோட்டை,

    ஒரே நாடு, ஒரே மொழி என்ற அடிப்படையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு கல்வி, வேலை வாய்ப்பு, அரசு நிர்வாகத்தில் இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்தும் வகையில், இந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் திணிக்க முயற்சிப்பதை கண்டித்து, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

    அதன்படி புதுக்கோட்டையில் மாவட்ட இளைஞரணி சார்பில் திலகர்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுற்றுசுழல் துறை அமைச்சர் மெய்யநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் எம்எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. கவிதைபித்தன், அவைதலைவர் வீரமணி, நகரச் செயலாளர் செந்தில், மாவட்ட பொருளாளர் லியாகத்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை.தமிழ்ராஜா, கொள்கை பரப்பு துணை செயலாளர் புதுகை விஜயா, மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் முத்துகருப்பன், மாவட்ட கவுன்சிலர் ராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நடராஜன், நகர இளைஞரணி அமைப்பாளர் கணேஷ், நகராட்சி கவுன்சிலர்கள் சுப.சரவணன், சந்தோஷ், மதியழகன், பழனிவேலு, செந்தாமாரைபாலு, வளர்மதி சாத்தையா, கார்த்திகைசெல்விகுமார், பால்ராஜ், ராஜேஸ்வாரி, வழக்கறிஞலடகள் செந்தில்குமார், செல்லத்துரை, பூங்குடி சிவா, தென்னலூர் பழனியப்பன், கறம்பகுடி கருப்பையா, உட்பட ஏராளமானோர்கலந்து கொண்டனர்

    • மரத்தில் ஏறி இறங்க மறுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
    • சமாதானமாக பேசி கீழே இறக்கி கணவரிடம் ஒப்படைத்தனர்

    புதுக்கோட்டை

    கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கண்ணன். இவரது மனைவி சித்ரா (வயது 40). நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள வவ்வால்கள் அடையும் பெரிய ஆலமரத்தில் ஏறி நின்று கொண்டு இறங்க மறுத்துள்ளார். அப்பகுதியினர் சென்று அவரை இறங்கச் சொன்ன போது தன்னை அடிக்கிறார்கள், சொத்துப் பிரச்சினை என்று முன்னுக்குப்பின் முரணாக பேசிக் கொண்டு இறங்க மறுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை இறங்க சொன்ன போதும் அவர் இறங்கவில்லை. இதனால் போலீசார் கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து நிலைய அலுவலர் ராஜராஜசோழன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தில் ஏறி நின்ற சித்ராவிடம் சமாதானமாக பேசி அவரை பத்திரமாக மீட்டு கீழே இறக்கி அவரது கணவரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • எனது வாக்கு எனது உரிமை’ குறித்த ஓவியப்போட்டி நடைபெற்றது
    • அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    புதுக்கோட்டை

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி எனது வாக்கு எனது உரிமை ஒரு வாக்கின் சக்தி என்ற கருவினை மையமாக கொண்டு விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் தாலுகா அளவிலான ஓவியப்போட்டி இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியினை இலுப்பூர் தாசில்தார் வெள்ளைச்சாமி தொடங்கி வைத்தார். இதில் திரளான மாணவிகள் கலந்துகொண்டு ஓவியங்கள் வரைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்"

    • அரசு ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
    • 5 இடங்களில் வருமான சோதனை நடத்தினர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் பாண்டிதுரை (வயது 47). நெடுஞ்சாலைத்துறை அரசு ஒப்பந்ததாரர். 20 ஆண்டுகளுக்கு முன் இவரது தந்தை மாணிக்கம் நெடுஞ்சாலை துறையில் ரோடு ரோலர் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். பணியின் போது அவர் உயிரிழந்ததை தொடர்ந்து வாரிசு அடிப்படையில் பாண்டிதுரை நெடுஞ்சாலை துறையில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் புதுக்கோட்டையில் நெஞ்சாலைத்துறை உதவி கோட்ட அலுவலகத்தில் உதவியாளராக பணி உயர்வு பெற்றார். அப்போது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சாலையோரம் உள்ள மரங்களுக்கு வர்ணம் பூசும் பணியை டெண்டர் எடுத்து கொடுத்து வந்தார்.

    பின்னர் பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் எடுக்க வாய்ப்பு கிடைத்ததால் தனது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று நெடுஞ்சாலை துறையில் அரசு ஒப்பந்ததாரராக பணி செய்ய தொடங்கினார். ெநடுஞ்சாலை துறையில் சாலையில் பதிக்கக்கூடிய ஒளி பிரதிபலிப்பான், சாலையில் வைக்கக்கூடிய பிரதிபலிப்பு பலகைகள் உள்ளிட்டவைகளை ஒப்பந்தம் எடுத்து வந்தார்.

    இந்நிலையில் புதுக்கோட்டையில் உள்ள இவரது பிரதான அலுவலகத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் 2 கார்களில் திடீரென வந்து அலுவலகத்தில் இருந்த ஒவ்வொரு அறையையும் சோதனை செய்தனர்.

    மேலும் அவரது அலுவலகத்தின் அருகே உள்ள அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமாக புதுக்கோட்டை மச்சுவாடி அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வரும் ஒரு தொழிற்சாலை, சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலை, கீழ 2-ம் வீதியில் உள்ள கட்டிட அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் முழுவதும் சோதனை நடந்தது.

    அதை தொடர்ந்து நேற்று 2-வது நாளாக இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் மட்டும் அவரது வீடு, அலுவலகம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட 5 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. 

    ×