என் மலர்
புதுக்கோட்டை
- பூ வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்
- மதுவிற்கு அடிமையாகியுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி இந்திரா நகரில் உள்ள புள்ளி காரன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் முருகையா என்ற முருகேஷ் (வயது32). பூ வியாபாரியான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. மதுவிற்கு அடிமையான முருகேஷ் சம்பவத்தன்று வீட்டில் தனது மனைவி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ் தேச மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம் நடந்தது
- மத்திய அரசை கண்டித்து நடைபெற்றது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து தமிழ் தேச மக்கள் முன்னணி கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அமைப்பாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தை மாவட்ட அமைப்பாளர் கலைச்செல்வன் தொடங்கி வைத்தார். தமிழ் தேச மக்கள் முன்னணி தலைவர் பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தலைமை குழு உறுப்பினர் கென்னடி | தாமரைச்செல்வன், உதயகுமார், கவியரசன், கோவிந்தராஜ், கிருஷ்ணவேணி, பீர்முகமது, மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
- அரசு பள்ளி மாணவர்களுக்கு
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம்ஆலங்குடி அருகே உள்ள மழையூர் அரசு மேல்நிலை பள்ளியில், ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையில், பள்ளி வளாகத்தில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது பற்றிய செயல் முறை விள க்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது.
பிறகு இவர் கூறுகையில், தற்போது தீபாவளி நெருங்கி வருவதை முன்னிட்டு மாணவ, மாணவிகள் விபத்தில்லா தீபாவளி கொண்டாடவே ண்டுகிறேன். பட்டா சுவெடிக்கும்போது நம்மிடையே முன்னெச்சறிக்கையாக கையில் வைத்து கொள்ளவேண்டியது மணல், நூல் சாக்கு ,தண்ணீர், இ வைகளை நாம் பாதுகாத்து வைத்துகொண்டு பட்டாசு வெடிக்க வ ண்டும் என்றார்.
தீயணைப்பு மீட்பு பணியாளர்கள் வெடிகள் வெடிப்பது குறித்து பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் துண்டு பிரசுரம் வழங்கி பாதுகாப்புடன் தீபாவளியை கொண்டாடுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- அரசு மருத்துவமனையில் உலக மயக்கவியல் மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது.
- சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
புதுக்கோட்டை:
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக மயக்கவியல் மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு தலைமை மருத்துவர் பெரிசாமி தலைமை வகித்தார். மருத்துவர் அருண்குமார் முன்னிலை வகித்தார், மருத்துவர் லிபர்த்தி வரவேற்று பேசினார். இதில் கொரானா காலத்தில் சிறப்பாக பணி புரிந்த மருத்துவ ர்கள், செவிலியர்கள், மருத ்துவமனை ஊழி யர்கள் பாராட்டி சிறப்பிக்கப்பட்டா ர்கள்.
இம்மருத்துவமனையில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்து சிறப்பாக செயல்பட்ட செவிலியர் செல்வகுமாரி, விண்ணரசி, கீதா ஆகியோருக்கு மயக்கவியல் தின சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் தலைமை மருத்துவர் பெரிசாமி பேசும் போது;
மயக்கவிய ல் தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ந் தேதி கொண்டா டப்படுகிறது. 1846 ஆம் ஆண்டு வலி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்த நாளாகும். இதன்பிறகே அறுவைசிகிச்சை மிகவும் பாதுகாப் பாகவும்,நோய் தீர்க்கும்
ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேரில் சுமார் 11 சதவீதம் மக்கள் அனஸ்தீசிய சிகிச்சை முறைக்கு உட்படுத்தப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார்கள். இதில் 30 முதல்49 வயதினரே அதிகம் உள்ளனர். மயக்கவியல் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மட்டுமின்றி , தீவிர சிகிச்சையிலும் மகத்தான பணியாற்றிவருகின்றனர்.ஆகவே அவ ர்கள் பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என்றார்.
இதில் மருத்துவர் மணிவண்ணன், செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி , செவிலியர்கள் வேலுமணி, கலைச்செல்வி, ஜான், திவ்யா, ஆறுமுகம், சிவசங்கரி, சக்கரவர்த்தி, லட்சுமி பிரபா, பூபாலன் மோனாபாய் மற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர். டாக்டர் லதா நன்றிகூறினார்.
- ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு வாகன பேரணி நடந்தது
- பேரூராட்சி தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
புதுக்கோட்டை:
ஆலங்குடி பேரூராட்சி அலுவலக வாசல்முன்பு ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் கொடியசைத்து துவக்கி வைத்தார். திருவரங்குளம். குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர் அனுப்பிரியா, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத்தொடர்ந்து ஊட்டச்சத்து வார விழா விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பேரூராட்சி ராஜேந்திரன் அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
- புதுக்கோட்டையில் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
- தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்க
புதுக்கோட்டை
தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது புதிய ஆடை, பட்டாசு, இனிப்பு தான். பண்டிகையை கொண்டாட இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பண்டிகைக்கான பொருட்கள் வாங்க புதுக்கோட்டையில் பொதுமக்கள் கடைவீதியில் குவிய தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கீழ ராஜ வீதி, மேல ராஜ வீதி உள்ளிட்ட கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் பலர் புதிய ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்கி சென்றதை காண முடிந்தது.பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதில் கீழ ராஜ வீதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டன. கூட்டநெரிசலையொட்டி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.பண்டிகையையொட்டி மேலும் பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், புறக்காவல் நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை போலீசார் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- சாராயம் தயாரித்து விற்றவர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே வாராப்பூர் பகுதியில் சாராயம் தயாரித்து விற்பனை செய்வதாக செம்பட்டிவிடுதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அப்பகுதியில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாராப்பூர் ஊராட்சி நெருஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கணேசன் (வயது 43) என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில் சாராய ஊறல் வைத்து பானையில் தயார் செய்துள்ளார். போலீசார் வருவதை பார்த்தும் கணேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அங்கிருந்த 3 லிட்டர் சாராயத்தை போலீசார் கைப்பற்றினர். மேலும் தப்பியோடிய கணேசனை செம்பட்டி விடுதி போலீசார் கைது செய்து, அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைந்தனர்"
- துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற்றது
- உரிய காலத்தில் ஊதியம் வழங்காததை கண்டித்து
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் 167க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் நிரந்தர தொழிலாளர்களுக்கு பணிமூப்பு அடிப்டையில் ஊதியமும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ 385 வீதம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
மாதத்தின் முதல் வாரத்தில் ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று 17 தேதி ஆகியும் கடந்த மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லையென கூறப்படுகிறது. எனவே வருகின்ற தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு, கடந்த மாதத்திற்கான ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி 167 ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுபட்டனர்.
மேலும் 120க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தினை தொடந்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
போராட்டத்தில் சிஐடியூ ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கர்ணா, சிஐடியு உள்ளாட்சி செயலாளர் மாணிக்கம்,சிபிஎம் நகரச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
- சாலை விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது
- மரத்தின் மீது மோதினார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கீழப்பனையூரை சேர்ந்தவர் கருப்பையா மகன் பரிமளம் ( வயது 45). இவர் நேற்று கறம்பக்குடிக்கு சென்று பட்டாசுகளை வாங்கி தனது மோட்டார் சைக்கில் பின்புறத்தில் கட்டி வைத்து ஆலங்குடி நோக்கி வந்துள்ளார். ஆலங்குடி அருகே உள்ள அய்யனார்புறம் வரும்போது சாலையோரம் நின்ற மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பரிமளத்தை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத் துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் காவல் ஆய்வாளர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- விராலிமலையில் ஆட்டு சந்தை களை கட்டியுள்ளது
- வர்த்தகம் ஒரு கோடியை தாண்டியது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தை அப்பகுதிகளில் மிகவும் பிரபலமாகும். அதிகாலை தொடங்கும் இந்த ஆட்டு சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் முதல் நாள் இரவே லோடு வாகனங்களில் விராலிமலைக்கு வந்து தங்கி இருந்து ஆடுகளை வாங்கி செல்லுவது வழக்கம்.
அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில் இருந்தும் வியாபாரிகள் வந்து விராலிமலை சந்தையில் ஆடுகளை வாங்கி செல்வது என்பது விராலிமலை ஆடுகளின் தனி சிறப்பாகும். இயற்கையான முறையில் மட்டுமே வளர்க்கப்படும் இந்த ஆடுகளை இறைச்சி கடைக்காரர்கள் மாமிசமாக விற்கும் போது மக்கள் அதிகளவில் விரும்பி வாங்கி செல்வதாக இறைச்சிக்கடைக்காரர்கள் கூறுகின்றனர். பல்வேறு சிறப்புகள் பெற்ற விராலிமலை வார சந்தை வழக்கம் போல் இன்று அதிகாலை கூடியது. ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வர தொடங்கியதை தொடர்ந்து வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஆடுகளின் விலையைப் பொறுத்தவரை சராசரியான தொகைக்கே ஆடுகள் விற்கப்பட்டன. காலை 7:30 மணி நிலவரப்படி ஒரு கோடியையும் தாண்டி வர்த்தகம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
- மேய்ச்சலுக்கு வந்த மு ஆட்டுக்குட்டி ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது.
- தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் ஆட்டு குட்டியை மீட்டனர்.
புதுக்கோட்டை :
ஆலங்குடி அருகே அய்யனார்புரத்தில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான 40 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணறு உள்ளது. இந்நிலையில் அங்கு மேய்ச்சலுக்கு வந்த முத்து மாரி என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது.
இதனை அறிந்த அப்பகுதியினர் இது குறித்து ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
- சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை–யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- விராலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா விராலூர் கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
இதில் விராலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமயத்தில் பழமை வாய்ந்த குடவரை கோவிலான சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைெபற்றது. முன்னதாக சத்தியமூர்த்தி பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.






