என் மலர்
புதுக்கோட்டை
- குற்றமில்லாத சமூகத்தை உருவாக்குவது ஒவ்வொரு போலீஸ்காரரின் கடமை என்று ஐ.ஜி. செந்தில்குமாரி தெரிவித்தார்.
- புதுக்கோட்டையில் பயிற்சி நிறைவு விழா
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற 185 போலீசாருக்கு பயிற்சி நிறைவு விழா ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் பயிற்சி மைய முதல்வரும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுமான வந்திதா பாண்டே வரவேற்று பேசினார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் ஐ.ஜி. செந்தில்குமாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மேலும் பயிற்சி முடித்த காவலர்களின் அணிவகுப்பு மரியாதை அவர் ஏற்றுக்கொண்டார். பயிற்சியில் சிறந்த 3 போலீசாருக்கு பதக்கங்களையும், சான்றிதழையும் அவர் வழங்கினார்.
குற்றமில்லாத சமூகம்
தமிழகத்தில் போலீஸ் துறையில் பல பணிகள் இருந்தாலும் காவலர் பதவி என்பது மிக முக்கியமானது. மக்களோடு, மக்களாக உறவாடி, மக்களின் நலன் மீது அக்கறை கொண்டு, பொதுமக்களின் அமைதியான வாழ்வுக்கு பாதுகாப்பு அளித்து, குற்றமில்லாத சமூகத்தை உருவாக்குவது ஒவ்வொரு போலீஸ்காரரின் கடமையாகும். ஒவ்வொரு இளம் காவலரும் இதனை மனதில் பதிய வைத்து ஆற்றலோடும், துணிவோடும் பணியாற்ற வேண்டும். காவல்துறை மக்களின் நண்பன் என்பதை நீங்கள் உறுதிபடுத்த வேண்டும். காவல்துறை மக்களின் நன்மதிப்பை பெற கடின உழைப்பு, தன்னலமற்ற சேவை, தியாக உணர்வு, ஊக்கத்தோடு பணியாற்றுவீர்கள் என நம்புகிறேன்.
மழையால் பாதிப்பு
இங்கு பயிற்சி பெற்ற காவலர்களில் 58 பேர் என்ஜினீயர்கள், 77 பேர் பட்டதாரிகள், 17 பேர் முதுநிலை பட்டதாரிகள் ஆவார்கள். இந்த 7 மாத பயிற்சியானது மனம், உடல் திறன் காவல்துறைக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பயிற்சி முடித்த போலீசாரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யோகா, மல்யுத்தம், கராத்தே ஆகிய சாகசங்கள் நடைபெற்றது.
- கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் கடைவீதியில் ரோந்து சென்றார்
புதுக்கோட்டை
நாகுடி கடைவீதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து மற்றும் போலீசார் நாகுடி கடைவீதியில் ரோந்து சென்றார். அப்போது கஞ்சா விற்பனை செய்த தங்கராஜ் (வயது 23), சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த முத்தழகன் (24), சிறுகவயலை சேர்ந்த கவிமாறன் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 310 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- கோரிக்கைகளை வலியுறுத்தி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் ஈஸ்வரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பொது செயலாளர் முகமது அலிஜின்னா முன்னிலை வகித்து கண்டனவுரையாற்றினார். அப்போது ஊராட்சியில் வேலை செய்யும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மோட்டார் ஆப்பரேட்டர்கள் மற்றும் தூய்மைப்பணியா ளர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படி உயர்வுடன் சம்பளம் வழங்க வேண்டும்,
வேலையில் சேர்ந்து 3 ஆண்டுகள் முடிந்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்து ஊராட்சி மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தின் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.
ஆர்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத்துணை தலைவர் சுப்பிரமணியன், சிபிஎம் தாலுகா செயலாளர் நெருப்பு முருகேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- வீட்டில் இருந்த 7 ஆடுகள் மாயமானது
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல்குடி ஊராட்சி சூத்தியன்காடு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 56) இவரது 2 ஆடும்'அதே பகுதியை சேர்ந்த வடக்கு அக்ரஹாரம் அடைக்கலம் மகன் பார்த்திபன் ( 44) இவரது 5 ஆடுகள் என மொத்தம் 7 ஆடுகளை வீட்டின் பின்புறத்தில் கட்டி வைத்திருந்தனர். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது ஆடுகளை காணமால் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆலங்குடி போலீசில் புகார் கொடுத்தனர். புகாரி ன் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல்போன ஆடுகளை தேடி விசாரித்து வருகின்றனர்.
- விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
- துண்டு பிரசுரங்கள் வழங்கினர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் படேல் நகர் நம்பன்பட்டி, ஆகிய பள்ளிகளில் ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவண குமார் தலைமையில் மீட்பு குழுவினர், மாணவ, மாணவிகளுக்கு விபத்தி ல்லா தீபாவளி கொண்டாடுவது பற்றிய விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொ ண்டனர்.
- கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.
- தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருவது மீனவ மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 97 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இந்திய கடல் எல்லை பகுதியான நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அத்துமீறி வந்து எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ரத்தீஸ் (வயது 38) என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் அதில் இருந்த மீனவர்கள் அருள் (36), அய்யப்பன் (30), சுந்தரம் (26) ஆகிய 3 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
மேலும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களிடம் இலங்கையில் உள்ள காங்கேசன் துறையில் உள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.
இதையடுத்து கடந்த 3-ந்தேதி அங்குள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்ட 8 மீனவர்களும் நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில்தான் இன்று அதிகாலை மேலும் 3 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளனர். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருவது மீனவ மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அதற்கு முன்பாக மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுத்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை மீட்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
- போதை ஊசி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
- போதை ஊசி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஆன்லைன் லாட்டரி விற்பனை, போதை ஊசி விற்பனையை தடுக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் மாவட்டத்தில் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மச்சுவாடி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசி வைத்திருந்த சின்னதுரையை (வயது 27) கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 80க்கும் மேற்பட்ட மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு பதியப்பட்டது
- கடனை திருப்பி கேட்டதால் சம்பவம்
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே உள்ள கே ராசியமங்கலத்தை சேர்ந்த ஆரோக்கியமேரி (வயது 43 ) இவர் அதே கிராமத்தை சேர்ந்த ரோஸ்மேரி என்பவருக்கு ரூ 50.ஆயிரம் கட னாக கொடுத்துள்ளார். பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் திருப்பி தராததால், ஆரோக்கியமேரி அவரிடம் சென்று பணத்தை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் ஆரோக்கியமேரியை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஆரோக்கியமேரி வடகாடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரா ஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
- அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாப்பாப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த சுமார் 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்ப மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின். காரணமாக அடுத்தடுத்து அங்கு வசிக்க முடியாத சூழலில் மாற்று இடத்திற்கு தற்காலிகமாக குடிபெயர்ந்தனர். தொடர்ந்து தற்காலிக இடத்தில் அவர்கள் வசித்து வரும் நிலையில் அவர்களின் பூர்வீக இடமான 3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை தற் போது,வருவாய் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் வேறு நபர் களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து பாப்பாபட்டி பொதுமக்கள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதனை அறிந்து அங்கு வந்த ஆலங்குடி தாசில்தார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.
- தீபாவளி பட்டாசு விற்பனை ரூ. 1 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- கலெக்டர் கவிதா ராமு தகவல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கூட்டுறவு மெகா பட்டாசுக் கடையினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு திறந்து வைத்து, முதல் விற்பனையினை துவக்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் சென்ற ஆண்டு ரூ.80 லட்சம் பட்டாசு விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு பட்டாசு விற்பனை இலக்கு ரூ.1 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் கூட்டுறவு மெகா பட்டாசுக் கடையில் தரமான பட்டாசுகளை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்தார்
- அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- ஜல்ஜீவன் திட்டத்தில் வழங்கப்படும்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள ெசய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஜல் ஜீவன் மிஷன் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டமாகும்.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு ஒருநபருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் வீதம் பாதுகாப்பான தூய குடிநீர் வழங்கி, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதை 2024 ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்து தன்னிறைவு பெற்ற மாவட்டமாக அறிவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டிற்கு 146 கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட 579 குக்கிராமங்களில் குடிநீர்குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கென சமூக பங்களிப்பாக ரூ.5.006 கோடி வசூல் செய்ய வேண்டியுள்ளது. ஜல் ஜீவன் மிஷன் 2022 - 23 ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் 45 ஊராட்சிகளுக்குட்பட்ட 81 குக்கிராமங்களில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கென மொத்த மதிப்பீட்டில் சமூக பங்களிப்பாக ரூ.1.09 கோடி மதிப்பில் பெற வேண்டியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட குக்கிராமங்களில் வசித்துவரும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பங்களிப்பினை அந்தந்த கிராம ஊராட்சிமன்ற அலுவலகத்தில் செலுத்திட தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பொதுமக்களிடம் சமூக பங்களிப்பு பெறுவது தொடர்பாக சம்மந்தப்பட்ட ஊராட்சிகளிலுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் போன்ற அமைப்புகள் பங்கெடுத்து பொதுமக்களிடமிருந்து சமூக பங்களிப்பு பெறுவதற்கான உரிய விழிப்புணர்வை ஏற்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.






