என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் குடியேறும் போராட்டம்
- தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
- அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாப்பாப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த சுமார் 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்ப மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின். காரணமாக அடுத்தடுத்து அங்கு வசிக்க முடியாத சூழலில் மாற்று இடத்திற்கு தற்காலிகமாக குடிபெயர்ந்தனர். தொடர்ந்து தற்காலிக இடத்தில் அவர்கள் வசித்து வரும் நிலையில் அவர்களின் பூர்வீக இடமான 3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை தற் போது,வருவாய் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் வேறு நபர் களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து பாப்பாபட்டி பொதுமக்கள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதனை அறிந்து அங்கு வந்த ஆலங்குடி தாசில்தார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.