என் மலர்
புதுக்கோட்டை
- தீபாவளி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை:
ஆலங்குடி தீயணைப்பு துறை காவல் துறை பேரூராட்சி, லயன்ஸ் சங்கம் இணைந்து விபத்து இல்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ேபரணியை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆலங்குடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணகுமார் லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவர் விஜயபாரத ஆலங்குடி முன்னாள் தாசில்தார் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் பட்டாசு வெளிப்புறத்தில் வைத்து வெடிக்கவும், ராக்கெட் வெடிகளை தவிர்க்கவும், ஒருமுறை ெவடித்த பட்டாசுகளை அப்படியே விட்டு விடுங்கள். வீடு அருகில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள் என பதகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தீய ணைப்பு மீட்பு குழுவினர்கள் காவல்துறையினர், லயன்ஸ் சங்க நிர் வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொ ண்டனர்.
- ஆலங்குடியில் தீபாவளி விற்பனை களையிழந்து காணப்படுகிறது.
- கலக்கத்தில் வியாபாரிகள்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சுமார் 20, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடலை மில்களும், நெல் அரவை மில்களும் அதிக அளவில் இ ங்கி வருகின்றன. இதனால் வெளியூர்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்க னோர் இங்கு கூலி வேலைக்கு வந்து செல்கின்றனர். இதனால் ஆலங்குடியில்
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி அதிக அளவில் வியா பாரம் நடைபெறும் என்று மளிகை, ஜவுளிஇ பட்டாசு வியபாரிகள் அதிகளவில் முதலீடு செய்து பொருகளை இறக்குமதி செய்து இருந்தனர்.
ஆனால் தீபாவளிக்க ஒரு நாளே மீதமுள்ள நிலையில் முக்கிய சாலைகள் வெறிச்சோடிகிடக்கின்றன. மேலும் எதிர்பார்த்த அளவில் வியாபாரம் நடைபெறாததால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். கடைகளில் பொருட்களை வாங்க ஆட்கள் யாருமின்றி வியபாரிகள் வழி மேல் விழி வைத்து காத்துள்ளனர்.
தீபாவளி வியாபாரம் அதிகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் வட்டிக்கு பணம் வாங்கி முதலீடு செய்தவர்கள் எவ்வாறு பணத்தை திருப் பிக் கொடுப்பது என்று கலக்கமடைந்துள்ளனர். கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகையின்போது அதிக அளவில் வியாபாரம் நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு வியாபாரம் இல்லாமல் போனதால் காரணம் புரியாமல் வியாபாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளிக்கு மற்ற இடங்களில் வியாபாரம் களைகட்டியுள்ள நிலையில் ஆலங்குடியில் வழக்கத்தைவிட வியாபாரம் குறைந்துள்ளதால் வியாபாரிகள் என்ன செய்வதென்றே புரியாமல் தவித்து வருகின்றனர்.
- சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
புதுக்கோட்டை
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில இணை செயலாளர் சாவித்திரி தலைமை தாங்கினார். கொரோனா தடுப்பு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணிபுரிந்த முன்கள பணியாளர்களான சுகாதார செவிலியர்களுக்கு விடுபட்ட ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அஞ்சலை, மாவட்ட செயலாளர் பிரேமா உள்பட சங்கத்தை சேர்ந்த செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்."
- அடையாளம் தெரியாத முதியவர் பிணம் கிடந்தது
- கட்டளை மேட்டு வாய்க்காலில்
புதுக்கோட்டை
திருச்சி கே.கே.நகரில் இருந்து உடையான்பட்டி வழியாக கட்டளை மேட்டு வாய்க்கால் விராலிமலை ஒன்றியம் மாத்தூர் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளின் நுழைந்து சூரியூர் வரை செல்கிறது. இந்த வாய்க்காலில் கே.கே.நகர் உடையான்பட்டி அருகே நேற்று முன்தினம் காலை 60 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்து வந்ததாகவும் அந்த உடலானது வாய்க்காலில் உள்ள முள்ளில் சிக்கி இருப்பதாக அப்பகுதியினர் மாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் நேற்று காலை வந்து வாய்க்காலில் தேங்கியிருந்த அடையாளம் தெரியாத முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மாத்தூர் போலீசார் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் அந்த முதியவரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் திருச்சி அண்ணா நகரில் உள்ள பொது மயானத்தில் அடக்கம் செய்தனர்.
- இடி தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
- ரூ.4 லட்சத்திற்கான காசோ–லையை வருவாய் கோட்டா–ட்சியர் வழங்கினார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம் விடுதி ஊராட்சி மணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மனைவி கோகிலா (வயது 35). இவர் இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த நிலையில் இடி தாக்கி இறந்த கோகிலாவின் கணவர் மற்றும் குழந்தை–களிடம் அரசின் பேரிடர் கால குடும்ப நிவாரண உதவித்தொகை ரூபாய் 4 லட்சத்திற்கான காசோ–லையை புதுக்கோட்டை மாவட்ட வருவாய் கோட்டா–ட்சியர் முருகேசன் வழங்கினார். நிகழ்வின் போது கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை வட்டாட்சியர் ராஜேஸ்வரி சங்கம் விடுதி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ஆலங்குடி பகுதிகளில் சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்
- மக்கள் பாதுகாப்பை கருதி
புதுக்கோட்டை:
ஆலங்குடியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா அனைத்தும் பழுதாகி நின்றது. இனிவரும் காலங்கள் திருவிழா நிறைந்த காலங்களாக இருப்பதினால் நகரில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நகரில் பாதுகாப்பற்ற தன்மை நிலவி வருவதை ஒட்டி பொதுமக்கள் காவல்துறைக்கு கோரிக்கைவைத்ததனர்.அதன்படி ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை தலைமையில் போலீசார் ஆலங்குடியில் மக்கள் அதிகமாக கூடும் முக்கிய பகுதிகளான காமராஜர் சிலை, அரசமரம் பஸ் ஸ்டாப், வடகாடு முக்கம், மற் றும் பல்வேறு இடங்களில் கேமரா பொருத்து பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் மக்கள் கூட்ட ம் நகரில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கண்காணிக்கும் வகையிலும், கூட்ட நெரிசலை கட்டுப் படுத்தும் விதமாக பெண்கள் ஆண்கள் நகைகள் அணிந்து வருவது பொதுமக்கள் இளைஞர்கள் இருசக்கர வாகனங்கள் வைப்பது மற் றும் திருட்டு, குற்ற சம்பவங்கள் திருவிழா காலங்களில் சம்பவங்க ளை தடுக்கும் விதமாக சிசிடிவி முன்னெசரிக்கை நடவடிக் கையாக கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
- முன்மாதிரி தொகுதியாக திருமயத்தை மாற்ற வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
- அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் சட்டமன்ற தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் எஸ்.ரகுபதி முன்னிலையில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில், நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது :-
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற வித்தியாசம் பாராமல், அனைத்து தொகுதிகளிலும் உள்ள பொதுமக்களின் நீண்டநாள் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில், சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து தொகுதி வாரியாக கோரிக்கைகள் பெறப்பட்டு, மாவட்ட கலெக்டர் வழியாக அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இதன்மூலம் பொதுமக்களுக்கு தேவையான அரசின் திட்டங்கள் விரைவாக சென்றடைவதுடன், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய பாசன திட்டங்களை உருவாக்கவும், பொதுமக்களின் வசதிக்காக புதிய வருவாய் கோட்டம், வட்டம் மற்றும் பேரூராட்சி, நகராட்சிகளை அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு அமைத்திட உரிய கருத்துருக்களை அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
திருமயம் தொகுதிக்குட்பட்ட மக்களின் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசிய தேவைகளை நிறைவேற்றுவது குறித்த கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கியுள்ளேன். இக்கோரிக்கைகளை அனைத்தும் பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் திருமயம் தொகுதியை அனைத்து வசதிகளுடன் கூடிய முன்மாதிரி தொகுதியாக மாற்ற அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட கலெக்டரின் நர்முக உதவியாளர் (பொது) தங்கவேல் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- மின்னல் தாக்கி பெண் பலியானார்.
- பசுமாடும் செத்தது
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை அருகே மனப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி கோகிலா (வயது 42). இவர் நேற்று தனக்கு சொந்தமான பசு மாட்டை மேய்ப்பதற்காக நிலப்பகுதிக்கு ஓட்டி சென்றார். மதியம் 3 மணி அளவில் பலத்த இடி சத்தத்துடன் மின்னல் விழுந்தது. அப்ேபாது அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த கோகிலாவையும், அவரது பசு மாட்டையும் மின்னல் தாக்கியது. இதில் கோகிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பசுமாடும் செத்தது. இதுகுறித்து ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு பள்ளியில் பயின்று மருத்துவம் படிக்க தேர்வான மாணவ, மாணவிகளை பொதுமக்கள் வாழ்த்தினர்.
- கறம்பக்குடி, கந்தர்வகோட்டையில்
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி ஊராட்சிக்கு உட்பட்ட பட்டமாவிடுதி என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் கருப்பைா-தேவிகா தம்பதியரின் மகள் சுபாஷினி. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி சுபாஷினி தனது தொடக்கபள்ளிக் கல்வியை அருகிலுள்ள செவ்வாய்பட்டியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
ஆறாம் வகுப்பு முதல் கறம்பக்குடி அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் பயின்ற சுபாஷினி பிளஸ்-2 பொதுத்தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்றார். மேலும் நீட் தேர்வில் 293 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.
மாணவி சுபாஷினிக்கு, ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததால் அரசு வழங்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் சேர சீட்டு கிடைத்துள்ளது. இதனை அறிந்த இவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் கிராம பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர். கிராமத்திற்கு பஸ் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத போதிலும் தொடக்க கல்விக்கு மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்றும், மேல்நிலை கல்விக்கு ஐந்து கிலோ மீட்டர் சென்றும் படிக்க வேண்டிய சூழ்நிலையில் மாணவி சுபாஷினிக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அடைவதாக பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இதுபற்றி மாணவி கூறும்போது, நான் எனது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய ஒத்துழைப்போடு மருத்துவ படிப்பை படித்து முடித்து ஏழைப் பெண்களின் சுகாதார தரத்தை உயர்த்துவேன் என்றும், அனைத்து பொதுமக்களுக்கும் இலவசமாக மருத்துவம் பார்ப்பேன் என்றும் கூறினார்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லாக்கோட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர் காளிதாஸ் மற்றும் மாணவி ஷாலினி ஆகியோருக்கு அரசின் 7.5 இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிப்பதற்கான இடம் கிடைத்துள்ளது.
காளிதாசுக்கு திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஷாலினிக்கு திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரியிலும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்லாக்கோட்டை பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்ததை முன்னிட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழு, வளர்ச்சி குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும், கிராம பொதுமக்கள் பாராட்டினார்கள். கடந்த ஆண்டும் இந்த பள்ளியில் பயின்ற மூன்று மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
- வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது
- தீபாவளி பண்டிகையைெயாட்டி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் வாராவாரம் வியாழன் தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கமாகும்.
தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டதை ஒட்டி நேற்று ஆலங்குடி சந்தை கூடியது. அதன்படி சந்தையில் காய்கறிகள், வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும கோழி உள்ளிட்டவற்றை வாங்க பொதுமக்கள் முண்டி அடித்தனர்.
தீபாவளிப் பலகாரங்களுக்குத் தேவையான மாவு, மளிகைப் பொரு ட்கள் காய்கறிகள் என அனைத்து பொருட்களும் அமோகமாக விற்ப னை ஆனதால் வியாபாரிகளும் உற்சாகத்துடன் வியாபாரம் செய்தனர்.
மாலை வேலையில் சாரல் மழை வந்ததால் வியாபாரம் சற்று மந்த மாகி இருந்தாலும், இந்த வாரம் ஆலங்குடி சந்தையில் கடுமையான வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக் கின்றனர்.
- இரும்பு கதவை திருடி சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள திருநாலூர் வடக்கு மேல குடியிருப்பை சேர்ந்தவர் கருணாநிதி மகன் அஜித்குமார் (வயது 27). அறந்தாங்கி அண்ணா நகர் பள்ளிவாசல் தெரு சைய து முகமது மகன் ஹாஜா சாகுல் ஹமீது (வயது 52). இவர்கள் இருவரும் நான்க சக்கர வாகனத்தில் நம்பம்பட்டியில் உ ள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மோட்டார் ரூமிற்கு வந்து அங்கிருந்த இரும்பு கதவை உடைத்து அதனை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களை பிடித்து ஆலங்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீ திமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி அவர்கள் இருவரையும் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
- பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
- போலீஸ் நிலையத்தின் முன்பு நடந்தது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பனங்குளத் தை சேர்ந்தவர் கனகசிவம் இவரது மகன் விக்கிரமாதித்தன் வயது 21 இவருக்கும் குலமங்கலத்தைச் சேர்ந்த செல்லையா என்பவருக்கும் தகராறு ஏற் பட்டுள்ளது. தகராறு அடிதடியாக மாறியதால் ரத்த காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கீரமங்கலம் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் விக்ரமாதித்தனை தேடி சென்ற போலீசார் அவரது அம்மா விஜயாவின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து கொண்டு வந்து விட் டதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் 17 ஆம் தேதி நடைபெற்ற இந்த பிரச்சனையின் காரணமாக பரிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் இதுவரை திரு ப்பி கொடுக்கப்படவில்லை.
இது குறித்து விஜயா கீரமங்கலம் காவல் நிலையத்திற்கு பலமுறை சென்று கேட்டதாகவும் அவர்கள் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த விஜயா நேற்று கீரமங்கலம் காவல் நிலையத்தின் முன்பு தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித் தார்.
இதனை கண்ட போலீசார் அதனை தடுத்து நிறுத்தி விஜயாவை காப்பாற்றினர். இதனால் கீரமங்கலம் காவல் நிலையத்தில் பெரு ம் பரபரப்பு ஏற்பட்டது.






