என் மலர்

  நீங்கள் தேடியது "MODEL BLOCK"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முன்மாதிரி தொகுதியாக திருமயத்தை மாற்ற வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
  • அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

  புதுக்கோட்டை,

  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் சட்டமன்ற தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசியத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் எஸ்.ரகுபதி முன்னிலையில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில், நடைபெற்றது.

  இக்கூட்டத்தில் அமைச்சர் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது :-

  இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற வித்தியாசம் பாராமல், அனைத்து தொகுதிகளிலும் உள்ள பொதுமக்களின் நீண்டநாள் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில், சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து தொகுதி வாரியாக கோரிக்கைகள் பெறப்பட்டு, மாவட்ட கலெக்டர் வழியாக அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

  இதன்மூலம் பொதுமக்களுக்கு தேவையான அரசின் திட்டங்கள் விரைவாக சென்றடைவதுடன், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய பாசன திட்டங்களை உருவாக்கவும், பொதுமக்களின் வசதிக்காக புதிய வருவாய் கோட்டம், வட்டம் மற்றும் பேரூராட்சி, நகராட்சிகளை அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு அமைத்திட உரிய கருத்துருக்களை அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

  திருமயம் தொகுதிக்குட்பட்ட மக்களின் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசிய தேவைகளை நிறைவேற்றுவது குறித்த கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கியுள்ளேன். இக்கோரிக்கைகளை அனைத்தும் பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் திருமயம் தொகுதியை அனைத்து வசதிகளுடன் கூடிய முன்மாதிரி தொகுதியாக மாற்ற அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

  இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

  இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட கலெக்டரின் நர்முக உதவியாளர் (பொது) தங்கவேல் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

  ×