என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goat rescue"

    • மேய்ச்சலுக்கு வந்த மு ஆட்டுக்குட்டி ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது.
    • தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் ஆட்டு குட்டியை மீட்டனர்.

    புதுக்கோட்டை :

    ஆலங்குடி அருகே அய்யனார்புரத்தில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான 40 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணறு உள்ளது. இந்நிலையில் அங்கு மேய்ச்சலுக்கு வந்த முத்து மாரி என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

    இதனை அறிந்த அப்பகுதியினர் இது குறித்து ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    ×