என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  புதுக்கோட்டையில் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம்
  X

  புதுக்கோட்டையில் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதுக்கோட்டையில் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
  • தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்க

  புதுக்கோட்டை

  தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது புதிய ஆடை, பட்டாசு, இனிப்பு தான். பண்டிகையை கொண்டாட இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பண்டிகைக்கான பொருட்கள் வாங்க புதுக்கோட்டையில் பொதுமக்கள் கடைவீதியில் குவிய தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கீழ ராஜ வீதி, மேல ராஜ வீதி உள்ளிட்ட கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் பலர் புதிய ஆடைகள் மற்றும் பொருட்கள் வாங்கி சென்றதை காண முடிந்தது.பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதில் கீழ ராஜ வீதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டன. கூட்டநெரிசலையொட்டி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.பண்டிகையையொட்டி மேலும் பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், புறக்காவல் நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை போலீசார் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.

  Next Story
  ×