என் மலர்
உள்ளூர் செய்திகள்

டீக்கடையில் தீ விபத்து
- டீக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது
- ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
புதுக்கோட்டை :
மாவட்டம் பொன்னமராவதி சந்தை வீதியில் முத்துலட்சுமி பாண்டியன் என்பவர் அப்பகுதியில் 15 ஆண்டு காலமாக டீக்கடை நடத்தி வருகிறார். அண்மையில் சந்தை கட்டுமான பணி நடைபெற்று வருவதால் சுப்பையா கோயில் மலையான் ஊராணி கரை என்னும் இடத்திற்கு மூன்று மாதத்திற்கு முன்னதாக கடையை மாற்றி வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் நள்ளிரவில் தீரென கடையில் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த கடை உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் கடை முழுவதும் எரிந்தது. இதில் கடையில் இருந்த இரண்டு மர சோக்கேஸ், அலமாறி, பிரிட்ஜ்,கூல் டிரிங்ஸ், கேஸ் அடுப்பு உள்ளிட்ட சுமார் ரூ 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






