என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  1,137 பயனாளிகளுக்கு ரூ.80.06 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
  X

  1,137 பயனாளிகளுக்கு ரூ.80.06 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 1,137 பயனாளிகளுக்கு ரூ.80.06 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
  • கலெக்டர் முன்னிலையில் நடந்தது

  புதுக்கோட்டை

  புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கடியாபட்டி ஊராட்சி, பனங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

  இம்முகாமில் தமிழக அரசு பல்வேறு அரசுத் துறைகளின் வாயிலாக மேற்கொள்ளப்படும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

  இம்முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில், 1,137 பயனாளிகளுக்கு ரூ.80.06 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் கவிதா ராமு தலைமையில், அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கி பேசினார்.

  இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, வருவாய் கோட்டாட்சியர் கணேசன் (பொ), வேளாண் இணை இயக்குநர் (பொ) சக்திவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளார் ராஜேந்திர பிரசாத், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (பொ) மாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ராமலிங்கம், வட்டாட்சியர் பிரவீணா ேமரி, ஊராட்சிமன்றத் தலைவர் உமாமகேஸ்வரி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×