என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PADDY BEADS GET WET IN THE RAIN AND GO TO WASTE"

    • மழையில் நனைந்து நெல்மணிகள் வீணாகி வருகின்றன.
    • விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    புதுக்கோட்டை

    நெல் அறுவடை

    கறம்பக்குடி தாலுகாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் குறுவை நெல் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை விவசாயிகள் ஏற்கனவே செயல்பட்டு வந்த கொள்முதல் நிலையங்களில் குவியலாக கொட்டி வைத்துள்ளனர். ஆனால் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படாததால் தற்போது நெல் குவியல்கள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன.கறம்பக்குடி, வெள்ளாளவிடுதி, அம்புக்கோவில், மழையூர், திருமணஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் குவியலாக வைக்கப்பட்டு உள்ளது.தற்போது சில பகுதிகளில் அறுவடை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர். 

    ×