என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுபோதையில் பள்ளி வேனை ஓட்டிய டிரைவர் போலீசில் ஒப்படைப்பு
    X

    மதுபோதையில் பள்ளி வேனை ஓட்டிய டிரைவர் போலீசில் ஒப்படைப்பு

    • மதுபோதையில் பள்ளி வேனை ஓட்டிய டிரைவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
    • அறந்தாங்கி மணிவிலான் தெருவை சேர்ந்தவர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளை நேற்று வகுப்பு முடிந்து ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே சென்றபோது வேன் தாறுமாறாக சென்றதால் அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் அந்த வேனை தடுத்து நிறுத்தினர். அப்போது டிரைவர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கீரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மது போதையில் வேனை ஓட்டிய டிரைவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் அறந்தாங்கி மணிவிலான் தெருவை சேர்ந்த அப்துல் ரியாஸ் (வயது 36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பள்ளி வேன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×