என் மலர்
உள்ளூர் செய்திகள்

தந்தை வீட்டில் இருந்த புதுப்பெண் தற்கொலை
- தந்தை வீட்டில் இருந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்
- குடும்ப தகராறில் நடந்த விபரீதம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை காமராஜபுரம் 1ம் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது58). இவரது மகள் வித்யா(27).
இவருக்கு, புதுக்கோட்டை மாவட்டம் ராசாபட்டி தாலுகாவை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கர் என்பவருடன் 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. சங்கருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக தெரிகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வருமாம்.
அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைப்பார்களாம்.
இந்நிலையில் கடந்த 7-ந் தேதி கணவனுடன் தகராறு ஏற்பட்டதில் கோபித்து கொண்டு புதுக்கோட்டை காமராஜபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வித்யா வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேன் ஊக்கில் தனது சால்வையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகள் தூக்கில் பிணமாக இருப்பதை பார்த்த பழனிச்சாமி மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.
இச் சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் கனேஷ்நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம் வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை சரக டிஎஸ்பி ராகவி விசாரனை நடத்தி வருகிறார். திருமணம் முடிந்து 6 மாதத்தில் பெண் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்த காரணத்தினால் புதுக்கோட்டை ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.






