என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    75 கிராமங்களில் கிராம சபை கூட்டம்
    X

    75 கிராமங்களில் கிராம சபை கூட்டம்

    • 75 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடந்தது
    • அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. அண்டனூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் மஞ்சம்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

    அதேபோல் கந்தர்வகோட்டை கிராம சபை கூட்டம் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையிலும், பழைய கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் ராணி முருகேசன் தலைமையிலும், காட்டு நாவல் ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் ஆரஞ்சு பாப்பா குணசேகரன் தலைமையிலும், பல்லவராயன் பட்டி ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் கவிதா மணிகண்டன் தலைமையிலும் அரவம்பட்டி ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் சிவரஞ்சனி சசிகுமார் தலைமையிலும், கோமாபுரம் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு தலைமையிலும் நடைபெற்றது.

    அறந்தாங்கி

    அறந்தாங்கி அருகே மேலப்பட்டு ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. மூக்கணாங்குடியிருப்புகிராமத்தில் ஊராட்சிமன்ற தலைவர் அயூப்கான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிராமபொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கறம்பக்குடி

    கறம்பக்குடி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளிலும் அதன் தலைவர்கள் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. குழந்திரான் பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றன. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரை கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பற்றி பேசினார்.

    மேற்கண்ட அனைத்து கிராம சபை கூட்டங்களிலும் அரசு பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததுடன், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×