என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோ -ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இலக்கு ரூ.130 லட்சம்
- கோ -ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை இலக்கு ரூ.130 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- கலெக்டர் கவிதா ராமு தகவல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை புதிய பேருந்துநிலைய வளாகத்தில் அமைந்துள்ள முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தொடங்கிவைத்தார்.
பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:
புதுக்கோட்டை விற்பனை நிலையத்தில் தீபாவளி 2021 பண்டிகை காலத்தில் ரூ.94 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது தீபாவளி 2022 -க்கு ரூ.130 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், 'கனவு நனவு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 11-வது மற்றும் 12-வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20 சதவீதம் அரசு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தொpவித்தார்.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், முருகேசன், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக குழு உறுப்பினர் லெனின், மண்டல மேலாளர் அம்சவேணி, மேலாளர் கூடுதல் பொறுப்பு அய்யப்பன், விற்பனை நிலைய மேலாளர்கள் பாண்டியன், ராஜ்முகமது மற்றும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.






