search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கறம்பக்குடியில் அரசு பேருந்து மீது அறுந்து விழுந்து விழுந்த மின் கம்பி
    X

    கறம்பக்குடியில் அரசு பேருந்து மீது அறுந்து விழுந்து விழுந்த மின் கம்பி

    • பஸ் கரம்பக்குடி புதுக்குளம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்கு ஓரமாக பேருந்தை டிரைவர் நிறுத்தினார்.
    • அப்போது மேலே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த மின் கம்பி பேருந்தின் மேற்கூறையில் அறுந்து விழுந்தது.

    புதுக்கோட்டை :

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து கரம்பக்குடிக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் கரம்பக்குடி புதுக்குளம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்கு ஓரமாக பேருந்தை டிரைவர் நிறுத்தினார்.

    அப்பொழுது மேலே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த மின் கம்பி பேருந்தின் மேற்கூறையில் அறுந்து விழுந்தது. அது தீப்பொறியாக பறந்தன. இதனைக் கண்டதும்பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளும் பஸ்சை விட்டு இறங்கி தப்பியோடினர்.

    மின் கம்பி அறுந்து விழுந்தவுடன் அதிர்ஷ்டவசமாக மின்தடை ஏற்பட்டதால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்த மின்சார துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் கம்பியை சீரமைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×