என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருமுறை செப்பேட்டு கோவில் கட்டுமான பணி தீவிரம்
  X

  திருமுறை செப்பேட்டு கோவில் கட்டுமான பணி தீவிரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருமுறை செப்பேட்டு கோவில் கட்டுமான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
  • சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட உள்ளது

  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் சத்திரத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் திருமுறை செப்பேட்டுக் கோவில் அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தக் கோவில், வேறெங்கும் இல்லாத வகையில் 12 திருமுறைகளில் உள்ள 18,000 பாடல்களை செப்பேடுகளில் இடம் பெற செய்து, கருவறையில் சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட உள்ளது.

  உலகத்திலேயே இது போன்ற கோவில் வேறெங்கும் இல்லாத வகையில் அமைய உள்ளதை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில், சேக்கிழார் சுவாமிகள் அருளிய திருத்தொண்டர் மாக்கதை திருவிழா வரும் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

  இது தொடர்பாக புதுக்கோட்டையில் திலகவதியார் திருவருள் ஆதீனத் தலைவர் தயானந்த சந்திர சேகர சுவாமிகள் கூறியதாவது:

  கொடும்பாளூர் நாயனார் அவதரித்த இடமாகும். இதனால், அந்த இடத்தை தேர்வு செய்து திருமுறை செப்பேட்டு கோவில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், 12 திருமுறைகளில் உள்ள 18,000 பாடல்களும் செப்பேட்டில் எழுதி சிவலிங்கம் வடிவில் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு செப்பேடுகளும் தலா ஒரு கிலோ எடையில் மொத்தம் 5 டன் எடையில் செய்யப்பட்டு வருகின்றன.

  மேலும் இந்த கோவில் வளாகத்தில் அறுபத்து மூவர் சித்திர கூடம், அருங்காட்சியம், நூலகம், தியானமண்டபம் ஆகியன அமைக்கப்பட உள்ளன. எத்தகைய இயற்கை பேரிடர் வந்தாலும் செப்பேட்டில் எழுதிய எழுத்துக்கள் ஒரு போதும் அழியாது. இது வருங்கால சந்ததியினர் நம்முடைய தொன்மையையும், நம் பாரம்பரியத்தையும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். இதை பொது மக்கள் மத்தியில் எடுத்து ெ சால்லும் நோக்கத்துடன் பெரிய புராண திருவிழா என்ற பெயரில் திருமுறை குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி விராலிமலையில் வரும் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது என்றார்.

  Next Story
  ×