என் மலர்
புதுக்கோட்டை
- வேங்கைவயல் விவகாரம் தொடர்பான பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது
- அம்பேத்கர் மக்கள் இயக்கம் செயல் தலைவர் கண்டனம்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மர்ம ஆசாமிகள் அசுத்தம் செய்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் இது வரை கைது ெசய்ய வில்லை.
வேங்கைவயல் பிரச்சனை தொடர்பாக அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பாக செயல் தலைவர் இளமுருகு முத்து தலைமையில் கீரனூரில் வரும் 19-ந் தேதி (ஞாயிற்று கிழமை) நடக்கவிருந்த கண்டன பொது கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இதற்கு கண்டம் தெரிவித்ததுடன் இதனை தொடர்ந்து அம்பேத்கர் மக்கள் இயக்கம் இன்று உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளது என செயல் தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
- முடி திருத்துவோர் நல சங்கம் மாவட்ட தலைவர் கிரு ஷ்ணமூர்த்தி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
- கோவில் முடி எடுக்கும் தொழிலாளர்களையும் தவில் இசை கலைஞ ர்களையும் அரசு ஊழியர்களாக நியமிக்க வலியுறுத்தல்
ஆலங்குடி,
ஆலங்குடியில் மருத்துவர் சமூக நல சங்கத்தினர் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாத னிட ம் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச் சருமான சிவ.வீ.மெய்யநாதனிடம் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்துவோர் நல சங்கம் மாவட்ட தலைவர் கிரு ஷ்ணமூர்த்தி தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
கோரிக்கைகளான....எங்கள்சமூகத்தை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பி ல் சேர்க்க வேண்டும். ஆந்திர பிரதேச அரசு வழங்கி உள்ளது போல் நமது அரசும் பிசிஆர் ஆக்ட் வழங்க வேண்டும்.
கோவில் முடி எடுக்கும் தொழிலாளர்களையும் தவில் இசை கலைஞ ர்களையும் அரசு ஊழியர்களாக நியமிக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அப்போது மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் ஆலங்குடி நகர நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் இணைந்து மனு அளித்தனர்.
- அன்னதானத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
- பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி சுமந்து வந்து சாமி தரிசனம் செய்தனர்
புதுக்கோட்டை
திருவப்பூர்முத்துமாரியம்மன் திருவிழா பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி உள்ளிட்டவைகளை தலையில் சுமந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்காக ஆயிரக்கணக்கான நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது. பானக்கம், கஞ்சி , நீர் மோர், பழங்கள் மற்றும் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திருக்கோகர்ணம் இல்லத்தில் நடந்த அன்னதானத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை .முத்துராஜா, ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
- கறம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது
- கல்லூரியில் பயின்று வரும் மாற்று திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன் விடுதியில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கல்லூரியில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியை கல்லூரியின் முதல்வர் முனைவர் சந்திர வதனம் மலர்கள் அனைத்தும் மலர்ந்து மனம் வீசுவது போல் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல அவர்களும் போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்று கூறி விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில் கல்லூரியில் பயின்று வரும் அனைத்து துறையை சேர்ந்த 20 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் முனைவர் சுலோக்சனா தமிழ் துறை தலைவர் ரவி ஆங்கிலத் துறை தலைவர் முனைவர் கிருஷ்ணசாமி உடற்கல்வி இயக்குனர் மற்றும் பேராசிரியர்கள் தமிழ்ச்செல்வி சத்தியமூர்த்தி உமா மகேஸ்வரர் பாண்டி மாரியம்மாள் சுதாகர் மற்றும் அனைத்து துறை மாணவ மாணவியர்கள் கல்லூரி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- விராலிமலை செக்போஸ்டில் முகாம் நடைபெற்றது
- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை செக்போஸ்டில் சிவிபி அறக்கட்டளை மற்றும் ஜோசப் ஆரஞ்ச் கண் பரிசோதனை மையம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.இந்த முகாமை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தனது சிவிபி அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்திருந்தார்.இதில் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு கண்புரை, சக்கரைநோய், மற்றும் கண்நீர் அழுத்த நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற நோய்களுக்கு இலவச சிகிச்சை அளித்தனர்.இதில் கலந்துகொண்ட கண் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் கண் குறைபாடுகள் உள்ள பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை முதல் மருந்துகள் வரை முழுவதுமே இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் சேர்மன் பழனியாண்டி, மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, ஒன்றிய செயலாளர் நாகராஜ், விராலிமலை ஊராட்சி மன்ற துணை தலைவர் தீபன் சக்ரவர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் மணிகண்டன்,கல்குடி அய்யப்பன், ஆவின் ராஜா, ஐடி விங்க் அப்பு மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
- குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
- வெள்ள பாதிப்பு நிவாரண நிதி ரூ.23 கோடி வழங்க உள்ளதாக தகவல்
அறந்தாங்கி ,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கோட்டாட்சியர் சொர்ணராஜ் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதி குறை நிறைகளை கோரிக்கையாக முன்வைத்தனர்.அப்போது தமிழ்நாடு மாநில தென்னை விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் செல்லத்துரை பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தாண்டு அறுவடை நேரத்தில் பெய்த தொடர்மழையால் நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதமானது, இதனை அதிகாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களை உரிய கணக்கெடுத்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரூ23 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது, அதற்கு விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,அதே சமயத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.அதனை தொடர்ந்து கல்லணைக்கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க துணைச் செயலாளர் தென்றல் கருப்பையா கூறுகையில்,பெருமகளூர் ஏரிக்கு தெற்கு வரத்து வாரியில் முடியனாறு பிரிவில் சருக்கை கட்ட வேண்டும், இதனால் ராயன்வயல், ஆவுடையாணி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்க ஏதுவாக இருக்கும் என்றார். தொடர்ந்து ஏரி பாசன சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பு சங்க தலைவர் சுப்பையா பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வறட்சிக்கு காரணமான தைல மரங்களை அகற்ற வேண்டும் என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வாயிலாக தடை உத்தரவு பெறப்பட்டும் இதுவரை அவ்வகையான மரங்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்தி தைல மரங்களை அடியோடு அகற்ற வேண்டும், மேலும் வேலி கருவை மரங்களையும் அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.இதே போன்று விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு அந்தந்த துறை அதிகாரிகள் விளக்கமளித்தும் ,எதிர்வரும் காலங்களில் நிலைமை சரி செய்யப்படும் என உறுதியளித்தனர்.கூட்டத்தில் வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன், வில்லியம்மோசஸ், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மோசடி தொடர்பாக 22க்கும் மேற்பட்ட வழக்கு
- 4 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை
ஆலங்குடி.
புதுக்கோட்டை மாவட்டம்ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஆலங்குடி ஆண்டிகுளத்தைச் சேர்ந்த நெல்லைமகன் பன்னீர் செல்வம்(வயது 60).இவர் மீது 22க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ள நிலையில் இன்று ஆண்டிக்குளத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீடு, அவரது அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களிலும் சென்னை வீட்டிலும் சோதனை நடைபெற்றது.சென்னை குற்றப் பிரிவு உதவி காவல் ஆணையர் ஜான் விக்டர் தலைமையில் மூன்று இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்ற னர். மோசடி வழக்கு தொடர்பாக இந்த, அதிரடி சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் பங்கேற்பு
- சிறப்பு அழைப்பாளராக திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டார்
ஆலங்குடி,
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திரு வரங்குளம் மேற்கு ஒன்றியம் ஆலங்குடி பேரூர் கழக சார்பில் ஆலங்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் செல் வம் அனைவரையும் வரவேற்றார் . திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கேபிகேடி தங்கமணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், சிறப்பு அழைப்பாளராக திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப வீரபாண்டியன் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசும் போது,அழியாநிலையில் 40 கோடி மதிப்பீட்டில் 40 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குடோன் அமைக்கப்பட்டுள்ளது. ஆலங்குடியில் 15 கோடி மதிப்பீட்டில் செட்டிகுளம், கல்லுக்குண்டு கரை குளம், தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. புறவழிச்சாலைக்கு 75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த புறவழிச்சாலை பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.அமைச்சர் ரகுபதி பேசும் போது,ஆன்லைன் சூதாட்டத்தால் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு குடும்பங்களை சீரழித்து வரும் ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதற்கான சட்ட மசோதா வை சட்டசபையில் நிறைவேற்றி மீண்டும் அனுப்ப உள்ளோம். இன்னும் 50 ஆண்டுகளுக்கு தி.மு.க.வை யாரும் அசைத்துக்கூட பார்க்க முடியாது என்றார்.கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர் ஞான இளங்கோவன், மு ன்னாள் எம்எல்ஏ கவிதைபித்தன், திருவரங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல், மாவட்ட கவுன்சிலர் உஷா செல்வம், தி ஒன்றிய குழு பெருந்தலைவர் வள்ளியம்மை, பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், துணைத்தலைவர் ராஜேஸ்வரி பழனிகுமார், கீரமங்கலம் பேரூராட்சி சிவக்குமார், ஆலங்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள், நகரத்துணை செயலாளர் செங்கோல், ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட பலர் கல ந்துகொண்டனர். நகரச்செயலாளர் பழனிகுமார் நன்றி கூறினார்.
- இரும்பாநாடு பட்டியல் இன மக்கள் கலெக்டரிடம் அளித்தனர்
- விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் இரும்பாநாடு பட்டியல் இன மக்கள், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் வீரையா ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில் , நாங்கள் ஆவுடையார்கோவில் தாலுகா, அரிமளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரும்பாநாடு கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 1987-ஆம் ஆண்டு இந்திராகாந்தி கூட்டுக் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் 20 காலனி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இந்த வீட்டிற்கான வீட்டுவரி, மின் கட்டணங்களை தொடர்ந்து செலுத்தி வருகிறோம். இந்த வீட்டு முகவரியில்தான் எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பெற்றுள்ளோம்.நாங்கள் வசிக்கும் காலனி வீடுகளுக்கு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த 2004-ஆண்டு முதல் தொடர்ச்சியாக மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனுக்கொடுத்து வலியுறுத்தி வருகிறோம். இதுநாள் வரை எங்களுக்கு மனைப்பட்டா வழங்கப்படவில்லை.இந்நிலையில் நாங்கள் குடியிருக்கும் வீட்டுமனைக்கான இடம் தற்பொழுது வேறொரு தனிநபரின் பெயரில் பட்டா ஏற்பட்டுள்ளது. மேற்படி வேறொரு தனிநபரின் பட்டாவை உடனடியாக ரத்து செய்வதோடு 35 ஆண்டுகளாக குடியிருந்து வரும் எங்களின் பெயரில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.மனுவைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
- முதியோர் மற்றும் மகளி ருக்கான வலி மற்றும் வாத சிகிச்சைக்கான இலவச மூலிகை பிசி யோதெரபி மருத்துவ முகாம்
- 200க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்
ஆலங்குடி,
ஆலங்குடியில் பிசியோதெரபி மையத்தில் முதியோர் - மகளிருக்கான வலி மற்றும் வாத சிகிச்சைக்கான இலவச மூலிகை பிசியோதெரபி மருத்துவ முகாம் நடைபெற்றது.விழாவில் இயன்முறை மருத்துவர் கோவிந்தசாமி வரவேற்றார். மருத்துவ முகாமிற்கு வாசகர் வட்டத் தலைவர் பாபுஜான் முன்னிலை வகித்தார்.ஓய்வு பெற்ற வட்டாச்சி யர் ராஜசேகரன் ஆரோக்கி ய வாழ்வு குறித்து பேசி னார். ஆலங்குடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் மணிவண்ணன் பேசுகையில், நவீன உலகில் சுகாதாரம் கேள்விக் குறியாய் இருக்கிறது.முருங்கையும் முடக்கத்தானும் சாப்பிட்ட நம் முன்னோர்கள் போன்று இன்று மனித ஆரோக்கியம் இல்லை. எனவே துரித உணவுதான் இன்றைக்கு உடம்பிற்கு பல்வேறு நோய்களை உண்டாக்கி மனிதனை ஆரோக்கிய மற்றவனாக மாற்றுகிறது. இயற்கை உணவையும் மூலிகை மருந்துகளையும் உண்டாலே நோய்நொடியின்றி நீடித்து வாழலாம் என்று பேசினார். வம்பன் சிவகு மார், அப்பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.மருத்துவர்கள் கோவிந்தசாமி, சரண்யா ஆகியோர் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். சமூக ஆர்வலர்கள் கணபதி, பெர்ணான்டஸ்,அந்தோ ணிசாமி, சுப்பிரமணியன், தைலா, முரளி, அபினேஷ் உள்ளிட் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக ராஜேந்திரன் நன்றி கூறினார்.
- லியோனி கலந்து கொண்டு பேசினார்
- ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்பு
ஆலங்குடி,
புதுக்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு,க சார்பில் செம்பட்டிவிடுதியில், கழகத் தலைவர் தமிழக முதல்வர் தளபதி 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்கூட்டத்திற்கு நகைச்சுவைத் தென்றல் மற்றும் கொள்கை பரப்பு செ யலாளர் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ. திண்டுக்கல் ஐ.லி யோனி உரையாற்றியானார். நிகழ்வில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கவிச்சுடர். கவிதைப்பித்தன். புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் ராஜேஸ்வரி ஒன்றியச் செயலாளர்கள் ராமகிருஷ்ணன் தவ.பாஞ்சாலன் சாமிநாதன் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- சிறப்பு ேஹாமம் பாலாலையம் நடத்தப்பட்டது
- மஞ்சள் கலந்த புனித நீர் சிவாச்சார்யார்களால் தெளிக்கப்பட்ட பின்னர் பூமி பூஜை நடைபெற்றது
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடி கிராமம் கலிபுல்லா நகர் காலனியில் உள்ள செல்வகணபதி ஆலயம் கட்டுவதற்கு ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு யாகங்கள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. அதன் பின்னர் பூமி பூஜை தொடங்கியது. இதற்காக பெண்கள் மஞ்சள் நீர் எடுத்து வந்தனர். சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்கி மஞ்சள் நீரை தெளித்து பூமி பூஜையை நடத்தினர்.இந்த தொடக்க விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் மலர் பழனிச்சாமி, ஒன்றிய குழு கவுன்சிலர் பிரகதா ரத்தினவேல், திமுக மாவட்ட பொதுகுழு உறுப்பினர் தலைவர் நாராயணன், கல்லாலங்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.






