என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • காதலை ஏற்க மறுத்ததால் கடும் விரக்தியில் இருந்துள்ளார் துரைக்கண்ணு.
    • பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவரை அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் துரைக்கண்ணு (வயது 35) என்பவர் காதலித்துள்ளார். ஆனால் முறைதவறிய காதல் என்பவதால் அவரை திருமணம் செய்ய பவித்ரா விரும்பவில்லை. துரைக்கண்ணுவுக்கு பவித்ரா மகள் முறை வேண்டும். அத்துடன் துரைக்கண்ணுவைவிட பவித்ராவுக்கு 15 வயது குறைவு. தனது காதலை பவித்ரா ஏற்க மறுத்ததால் கடும் விரக்தியில் இருந்துள்ளார் துரைக்கண்ணு.

    இந்நிலையில் இன்று பவித்ராவின் வீட்டுக்கு சென்ற துரைக்கண்ணு, தனியாக இருந்த பவித்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்ததுடன், வீட்டுக்கு சென்று தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. நிதியில் கட்டப்பட்டது
    • ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருப்பதை எம்எல்ஏ சின்னத்துரை திறந்து வைத்தார்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, பள்ளி சுற்றுச்சுவர், கலையரங்கம், மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை எம்எல்ஏ சின்னத்துரை திறந்து வைத்தார்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கந்தர்வ கோட்டை கோமாபுரம் தச்சங்குறிச்சி, காட்டு நாவல், அண்டனூர், அரியாணிப் பட்டி, மஞ்ச பேட்டை. நெப்புகை, புதுநகர் உள்ளிட்ட ஊராட்சி களில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகள், பயணியர் நிழற்குடை, கலையரங்கம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.கோட்டாட்சியர்செல்வி முன்னிலையில் கந்தர்வ கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சின்னத்துரை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா, ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், வட்டாட்சியர் ராஜேஸ்வரி ஆணையர்கள் திலகவதி, நளினி, நகரச் செயலாளர் ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி, ஆரஞ்சு பாப்பா குணசேகரன், அன்பு, இளங்கோவன், முல்லை ஆறுமுகம், முருகேசன், மணிகண்டன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாரதி பிரியா அய்யாதுரை, கலிய பெருமாள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    • வேளாண் இயக்குனர் விளக்கம்
    • புதுகோட்டையில் கோடை காலத்தில் தென்னையை தாக்கும் வண்டு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 493 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. தென்னையில் காண்டா மிருக வண்டுகள் தாக்கு தல் ஜூன் முதல் செப்டம்பர்மாதம் வரை அதிகமாக இருக்கும். நடவு செய்யப்பட்ட தென்னை முதல் வளர்ந்த அனைத்து வயதுடைய தென்னை மரங்களையூம் காண்டமிருக வண்டுகள் தாக்கி சேதம் விளைவிக்கும்.இதனை கட்டுப்படுத்து வது குறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இயக்குனர் பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.தென்னந்தோப்பினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.எருக்குழிகளில் உள்ள காண்டா மிருக வண்டின் முட்டைகள், புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை சேகரித்து அழிக்கவும். மேலும் எருக்குழிகளில் மெட்டாரைசியம் எனும் பச்சை மஸ்கார்டைன் எனப்படும் பூசனம்தெளித்து அதன் புழுப் பருவத்தைக் கட்டுப்படுத்தலாம்.மரத்தின் குருத்து பாகத்தில் வளர்ந்த வண்டுகள் இருந்தால் கம்பி (அல்லது) சுளுக்கியால் அதனைக் குத்தி வெளியில் எடுத்து கொன்றுவிட வேண்டும்.கோடை மற்றும் மழை காலங்களில் அந்தி நேரங்களில் விளக்குப் பொறியினை தென்னந்தோப்பினில் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.ரைனோலியூ ர்இன க்கவர்ச்சி பொறியினை 2 எக்டருக்கு 1 எண் வீதம் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.வேப்பங்கொட்டை தூளுடன், மணலை 1 : 2 என்ற விகிதத்தில் கலந்து மரம் ஒன்றிற்கு 150 கிராம் வீதம் நடுக்குருத்தின் மூன்று மட்டை இடுக்குகளில் வைக்க வேண்டும்.ஒரு மண்பானையில் 5 லிட்டர்நீருடன் ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கு சேர்ந்த கலவையை தோப்பில் வைத்து வண்டுகளை கவர்ந்தழிக்கலாம்.புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திட உதவும் மெட்டாரைசியம் எனும் பச்சை மஸ்கார்டைன் எனப்படும் பூசனம், வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது எனஅவர் தெரிவித்துள்ளார்.

    • சாலையில் கிடந்த 45 ஆயிரம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்
    • காவல்துறையினர், பொது மக்கள் பாராட்டு

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடி பகுதியைச் சேர்ந்தவர் அமுதாராணி (55).விவசாயக் கூலி வேலை பார்க்கும் இவர் தனது பேரக்குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக, ஆயிங்குடி யிலிருந்து அறந்தாங்கி பேருந்தில் சென்றுள்ளார்.கட்டுமாவடி முக்கம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கி சாலையில் நடந்துள்ளார். அப்போது கட்டு கட்டாக பணம் கிடப்பதை அவர் கண்டுள்ளார். யாரும் இல்லாத நிலையில், சாலையில் கிடந்த பணத்தை எடுத்து, அருகே இருந்த பெட்டிக்கடை ஒன்றில் கொடுத்துள்ளார். பணத்தை தவற விட்டவர்கள் வந்து கேட்டால் ஒப்படைத்து விடுமாறு கூறிச் சென்றுள்ளார்.மீண்டும் மருத்துவமனை யிலிருந்து திரும்பி வந்த அவர் பெட்டிக்கடைக்கு சென்று யாரேனும் வந்தார்களா என கேட்டு உள்ளார். அதற்கு யாரும் வரவில்லையென பெட்டிக்கடைகாரர் கூறிய தையடுத்து, அவரிடமி ருந்து 45 ரொக்கப் பணத்தை வாங்கிய அமுதாராணி அறந்தாங்கி காவல்நிலையத்தில் சென்று ஒப்படைத்துள்ளார்.ஏற்கனவே அறந்தாங்கி எல்என்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் (45) என்பவர் கடைவீதிக்கு செல்லு ம்போது தான் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.45 காணவில்லையென புகார் கொடுத்துள்ளார்.அவரை வரவழைத்த காவல்துறையினர், பணம் தொலைந்த நேரத்தையும், கண்டெடுக்கப்பட்ட நேரத்தையும் ஒப்பிட்டு பார்த்து விசாரணைக்கு பிறகு 45 ஆயிரம் ரொக்கப் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர். கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தும் பெண்மணியாக இருந்தாலும் அடுத்தவ ர்களின் பணத்திற்கு ஆசை படாத பெண்மணியை காவல்துறையினரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.




    • ரூ.4.86 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள்
    • அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

    ஆலங்குடி.

    ஆலங்குடி அருகே உள்ள நகரம் ஊராட்சியில் ரூ.34.86 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் துவக்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது,

    அரசுப் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிக ளில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் நலத்திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர தெரிவித்தார்.

    இந்நிகழ்வில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர்.வள்ளியம்மை தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கள் ஆயிஷாராணி கோகுலகிருஷ்ணன், உள்ளாட்சி திமுக பிரதிநிக ள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
    • 2,150 கிலோ பறிமுதல்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே கல்லூரை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 58). இவர் தனது சரக்கு ஆட்டோவில் வம்பரம்பட்டி பகுதியில் 2,150 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி சென்றுள்ளார். அப்போது புதுக்கோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்து, சரக்கு ஆட்டோ மற்றும் கடத்திய ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    • பழமையான கோவில்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன
    • திருச்சி எம்.பி.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் திருச்சி எம்.பி.திருநாவுக்கரசர் தெரிவித்ததாவது,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பில் உள்ள கோவில்களை சீரமைக்கவும், வேலி அமைக்குமாறும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில், கீரனூர் உத்தமநாதர் சுவாமி கோவிலில் சிதிலம் அடைந்திருந்த அனைத்துப் பகுதிகளும் ரூ.8.98 லட்சத்தில் புனரமைக்ககும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இரும்பநாடு சவுந்தராஜ பெருமாள் கோவில் ரூ.23.98 லட்சத்திலும், வாராப்பூர் சிவன் கோவில் ரூ.24.95 லட்சத்திலும், குடுமியான்மலை சிக்கந்தர் சுவாமி கோவில் ரூ.24.89 லட்சத்திலும், அங்குள்ள குளம் ரூ.24.3 லட்சத்திலும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் லட்சுமணப்பட்டியில் உள்ள சமணர் கோவில் ரூ.12.33 லட்சத்திலும், ஆலங்குடிப்பட்டி தீர்த்தங்கரர் சிலையை சுற்றிலும் ரூ.5.16 லட்சத்தில் வேலி அமைக்கு பணியும் நடைபெற்று வ ருகின்றன. கடந்த நிதி ஆண்டில் மாவட்டத்தில் ரூ.1.22 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    • வை.முத்துராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • வாகவாசல் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வட்டாரம் ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட வாகவாசல் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா துவக்கி வைத்து கர்ப்பிணி ப்பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்ட கங்களை வழங்கினார்.

    புதுக்கோட்டை துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் ச.ராம்கணேஷ் வரவேற்புரை ஆற்றினார். வட்டார மருத்துவ அலுவலர் பொன்.சரவணன் திட்ட விளக்க உரை ஆற்றினார். மேலும் வாகவாசல் ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா முத்தையா தலைமை வகித்தார் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் சின்னையா, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ்,

    ஊராட்சி மன்றத் துணை தலைவர் பாஸ்கர், மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேல், உதவி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

    • லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது
    • ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர் சுப்பையா. இவர் 2009-ல் பச்சமுத்து என்பவருக்கு ரேஷன் கார்டு வழங்கலாம் என பரிந்துரை செய்வதற்கு ரூ.500 லஞ்சம் பெற்றுள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் சுப்பையா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட சுப்பையாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    • வாலிபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
    • சிறுமிக்கு பாலியல் வன் கொடுமை

    புதுக்கோட்டை:

    கிருஷ்ணகிரிைய சேர்ந்தவர் அரசு (வயது 22). இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு தனியார் பேக்கரியில் வேலை செய்து வந்தார். கடந்த 2020-ல் 15 வயது சிறுமியை திருமணம் செய்து ெகாள்வதாக கூறி அவரை கடத்திச் ெசன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து திருமயம் அனைத:து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அரசை கைது செய்தனர். புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், பாலியல் வன்கொடுமை செய்த அரசுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.2.5 லட்சம் அபராதமும் விதித்து அபராதத் தொகைகயை சிறுமிக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    • பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்திற்கு தே.மு.தி.க.வின் ஆதரவு எப்போதும் உண்டு.
    • ஜனநாயகத்திற்கு முற்றிலுமாக ஒரு தேர்தல் நடந்தது என்றால் அது ஈரோடு இடைத்தேர்தல் தான்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆவின் பால் பிரச்சினைக்கு எதிர்க்கட்சி மேல் பழியை போடாமல் அமைச்சர் நாசர் மற்றும் தமிழக அரசுதான் விவசாயிகள் பிரரச்சினையை தீர்த்து ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்திற்கு தே.மு.தி.க.வின் ஆதரவு எப்போதும் உண்டு. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

    தேர்தல் நேரத்தில் நீட் தேர்வு ரத்து ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று கூறிய உதயநிதி தற்போது அனிதா பெயரில் மருத்துவமனையில் பெயர் பலகை திறந்தால் போதும் என்று நினைக்கிறார். இது கண்டனத்துக்குரியது.

    அகில இந்திய அளவில் நீட் தேர்வுக்கு ஆதரவு இருக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ரத்து செய்ய முடியுமா என்பது ஒரு கேள்விக்குறிதான். நீட் தேர்வை வைத்து அரசியல் செய்யாமல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை குழப்பாமல் தமிழக அரசு நீட் பிரச்சினையில் நிலையான, தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    ஈரோடு கிழக்கு தேர்தலில் போட்டியிட பயந்து பல கட்சிகள் இருந்தபோது தைரியமாக தே.மு.தி.க. போட்டியிட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேர்தலே கிடையாது. இதுவரை தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்களை மிஞ்சும் அளவிற்க்கு முறைகேடுகள் நடந்துள்ளது. தே.மு.தி.க. எவ்வளவோ இடைத்தேர்தலை சந்தித்துள்ளது.

    ஆனால் இதுபோன்ற இடைத்தேர்தலை நாங்கள் பார்த்தது இல்லை. மக்களை ஆடு, மாடுகள் போல பட்டியில் அடைத்து வைத்து கோடி கோடியாக செலவழித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தேர்ந்தெடுக்க வைத்துள்ளனர்.

    தற்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கேள்விப்படும்போது மனது வருத்தமாக உள்ளது. நான் போட்டியிடவில்லை, எனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவர் கூறியபோதும் வம்படியாக இளங்கோவனை தேர்தலில் நிற்க வைத்து உள்ளது தி.மு.க.

    ஜனநாயகத்திற்கு முற்றிலுமாக ஒரு தேர்தல் நடந்தது என்றால் அது ஈரோடு இடைத்தேர்தல் தான். தேர்தல் ஆணையம் உள்ளதா என்ற கேள்விக்குறி தற்போது எழுந்துள்ளது.

    சொந்த கட்சி நிர்வாகிகளே காவல் நிலையத்திற்குள் புகுந்து அடித்து நொறுக்குவது, சொந்த கட்சி எம்.பி. வீட்டையே தாக்குதலுக்கு உள்ளாக்குவது தான் திராவிட மாடல். கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்குமா? இதற்கு முதலமைச்சர் பதில் கூற வேண்டும்.

    ஏற்கனவே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியதுபோல் தற்போது புதுச்சேரியில் பெண் குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வைப்புத்தொகை அளிக்கப்படும் என்று கூறியுள்ளனர். அமைச்சர்கள் பலரும் மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு அவர்கள் நடவடிக்கை உள்ளது, இதுதான் திராவிட மாடல்.

    பேராசிரியர் ஒருவரை நடுரோட்டில் அடித்து இழுத்துச் சென்று அவர்களிடம் இருந்து நகைகளை பறித்து செல்லும் சம்பவமும் நடந்துள்ளது. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.

    அ.தி.மு.க. பிளவுபட்டு இருப்பது கட்சியை பலவீனப்படுத்தும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே தி.மு.க.வை வீழ்த்த முடியும். ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு அ.தி.மு.க., பா.ஜ.க. விமர்சனம் செய்து கொள்வது இரண்டு கட்சியின் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும்.

    பன்னிரண்டாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,000 மாணவர்களுக்கு மேல் தேர்வு எழுத வராதது குறித்து, அதுவும் தமிழ் தேர்வு எழுத வராதது குறித்து தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை வைத்து அரசியல் செய்யும் அனைத்து அரசியல்வாதிகளும், அரசும் இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மக்கள் மத்தியில் தேர்தல் குறித்த நம்பகத்தன்மை குறைந்து வருவது போல், மாணவர்கள் மத்தியில் தேர்வு குறித்த நம்பகத்தன்மை குறைந்து வருவதால் தான் தற்போது 12 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுது வராமல் உள்ளனர். அரசு 100 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திடீர் என அலுவலகத்திற்குள் புகுந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்
    • ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்தும் சோதனை நடைபெற்றது

    ஆலங்குடி.

    ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இதில், ஆய்வாளராக நல்லதம்பி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென இந்த அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜவகர் பாபு, பீட்டர் தலைமையிலான போலீசார் வந்து சோதனையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, ஆய்வாளர் வீட்டில் பூட்டை உடைத்து சோதனையில் ஈடுபட்டனர் மேலும். அலுவலக சோதனையில், சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்ப டுகிறது.

    ×