என் மலர்
புதுக்கோட்டை
- மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
- தேர்வு எழுத விருப்பமில்லாமல் விபரீதம்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள பனங்குளம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் தரணியா (வயது17). இவர் அறந்தாங்கியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், தேர்வு எழுத விருப்பமிலலை என்று கூறிவந்துள்ளார். தேர்வு இன்று (24-ந் தேதி) தொடங்க உள்ள நிலையில் நேற்று மாலை மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அரசு கல்லூரியில் செஸ் போட்டி நடைபெற்றது
- 9 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மன்னர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியை, கல்லூரி முதல்வர் திருச்செல்வம் தொடங்கி வைத்தார். 7 வயது முதல் மூத்தோர் வரை 9 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 200-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
- சட்டசபையில் மானியக்கோரிக்கையின்போது அறிவிக்க வேண்டும்
- மாநில ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்
விராலிமலை,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது:-கோரிக்கை வைத்தால் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை என் மீது மக்களுக்கு உள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மனுக்கள் என்பது வெறும் காகிதங்கள் அல்ல. மனுக்களை நிறைவேற்றுவது நம் கடமை என அவர் தெரிவித்துள்ளார். அவர் மீது நம்பிக்கை வைத்து ஒரு லட்சம் மனுக்களை பகுதிநேர ஆசிரியர்கள் அனுப்பி வருகிறோம்.மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து முதல்-அமைச்சர் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வார் என எதிர்பார்ப்போடு உள்ளார்கள். 10 ஆண்டு பணி என்பதையும் கடந்து 12-வது ஆண்டாக அரசு பள்ளிகளில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறோம். பெரும்பாலோர் 50 வயதை கடந்து விட்டார்கள்.பணி நிரந்தரம் செய்தால்கூட சிலகாலம் தான் பணியாற்ற முடியும். ரூ.10 ஆயிரம் என்ற குறைந்த சம்பளத்தில் பணி பாதுகாப்பு இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம். தி.மு.க. 181-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற, முதல்வர் தான் ஆணையிட வேண்டும்.பட்ஜெட்டில் எதிர்பார்த்திருந்த நிலையில், மானியக்கோரிக்கைலாவது பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உலக தண்ணீர் தினத்தை கிராமசபை கூட்டம் நடைபெற்றது
- கலெக்டர் கவிதா ராமு பங்கேற்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், ஒன்றியம், 9பி நத்தம்பண்ணை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, எம்.எல்.ஏ. முத்துராஜா கலந்து கொண்டனர்.உலக தண்ணீர் தினமான நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. நத்தம்பண்ணை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் கவிதா ராமு எம்.எல்.ஏ. முத்துராஜா கலந்து கொண்டனர்.கலெக்டர் பேசும் போது, பொதுமக்கள் அனைவரும் தண்ணீரின் அருமைகருதி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும், அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து கொண்டு அவற்றின் மூலம் பயனடைந்து, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இக்கூட்டத்தில் வருவாய் அலுவலர் செல்வி, ஊரக வளர் ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, ஒன்றியக்குழுத் தலைவர் சின்னையா, வருவாய் கோட்டட்சியர் முருகேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) பழனிச்சாமி, முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சம்பத், இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ராம்கணேஷ், துணை இயக்குநர் (தோட்டக்கலை) குருமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேலன், வட்டா ட்சியர் விஜயலெட்சுமி, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அலுவலலர்கள் கலந்து கொண்டார்கள்.
- 12ம் வகுப்பு படிக்கும் சிறுமி 6 மாத கர்ப்பம்
- போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மனோஜ்குமார் (வய து 22). டூவீலர் மெக்கானிக்கான இவர், அதே பகுதியில் உள்ள 12-ம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவரை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து. ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசாருக்கு வந்த புகாரை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி வழக்கு பதிவு ெசய்து போக்சோ சட்டத்தில் மனோஜ்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜ ர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
- காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கோஷம்
- அறந்தாங்கி குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் அருகே நடைபெற்றது
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.அறந்தாங்கி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சங்க வட்டாரதுணைத் தலைவர் இந்திராதேவி தலைமை வகித்தார்.பல வருடங்களாக காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும், பணிமாறுதல் கோரியுள்ள ஊழியர், உதவியாளர்களுக்கு உள்ளுர் பணிமாறுதல் உடனடியாக வழங்க வேண்டும். அரசு வழங்கிய கைபேசி காலாவதி ஆனதால் புதிய கைபேசியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.சி.ஜ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், சங்கமாவட்ட துணை தலைவர் பத்மா, வட்டார செயலாளர் செல்வி, வட்டாரதுணை தலைவர்கள் மேரி, முத்து, மாவட்ட துணைத் தலைவர் முத்துலெட்சுமி,ஆனந்தி உள்ளிட்ட ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
- கலெக்டரிடம், கவுன்சிலர் புகார் மனு
- 15க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து உள்ளதாக புகார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களுர் ஊராட்சி மன்ற உறுப்பினர் நாகராணிசின்னையா கடந்த 6ம் தேதி நடைப்பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில் தங்கள் பகுதியில் வெறி நாய் தொல்லையால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருவதாகவும், வெறி நாய் கடித்து 15க்கும் மேற்ப ட்டோர் காயமடைந்து உள்ள தாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் வெறிநாயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மீண்டும் அவர் மனு அளித்துள்ளார். அதில் வெறிநாயோடு தற்போது குரங்கு தொல்லையும் அதிகரித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
- மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அறிந்த மற்ற மீனவர்கள் அவசரம் அவசரமாக கிடைத்த மீன்களுடன் பாதியிலேயே கரை திரும்பினர்.
- இந்த மாதத்தில் மட்டும் புதுக்கோட்டையை சேர்ந்த 16 பேர் இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அறந்தாங்கி:
இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
கடந்த 11-ந்தேதி புதுக் கோட்டை, நாகை மாவட்ட மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். அதில் மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் படகுகள் அந்நாட்டின் அரசுடைமை ஆக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று கடலுக்கு சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேர் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 255 விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
இதில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 6 மீனவர்கள் ஒரு விசைப்படகிலும், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 6 மீனவர்கள் மற்றொரு படகிலும் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலையில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல் அதிவேகத்தில் மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தது.
இதைப்பார்த்ததும் அச்சம் அடைந்த மீனவர்கள் தங்களது வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். இருந்தபோதிலும் அந்த இரண்டு விசைப்படகுகளையும் சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் விசைப்படகுகளுக்குள் தாவிக்குதித்து ஏறினர்.
பின்னர் அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால், கணவாய் உள்ளிட்ட மீன்களை பறித்துக்கொண்டனர். மேலும் ரோந்து கப்பல் விசைப்படகுகளின் அருகில் வந்ததால் மீனவர்களின் வலைகளும் அறுந்து சேதமடைந்தன.
இதையடுத்து 2 விசைப்படகுகளில் இருந்த கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 42), கலையசரசன் (24), லோகேஸ்வரன் (24), சக்தி (25), பிரபு (35), சுந்தரமூர்த்தி (45), ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த முருகானந்தம் (42), பாரதிதாசன் (35), ரவி (25), சசிக்குமார் (40), விசாலிங்கம் (46), மயில்ராஜன் (23) ஆகிய 12 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்தனர். மேலும் தங்கள் கப்பலுடன் இணைத்து மீனவர்களின் விசைப்படகுகளையும் இழுத்து சென்றனர்.
பின்னர் அவர்களை இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள மயிலட்டி கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சென்ற படகில் 4 மீனவர்கள் மட்டுமே டோக்கன் வாங்கி சென்றதாகவும், மற்ற இரண்டு பேர் அனுமதியின்றி கடலுக்கு சென்றவர்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
இதற்கிடையே மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அறிந்த மற்ற மீனவர்கள் அவசரம் அவசரமாக கிடைத்த மீன்களுடன் பாதியிலேயே கரை திரும்பினர். மேலும் சக மீனவர்கள் மற்றும் கைதான மீனவர்களின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து கைதான புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மாதத்தில் மட்டும் புதுக்கோட்டையை சேர்ந்த 16 பேர் இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- பணி மாறுதல் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்
- குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அலுவலகம் முன்பு நடைபெற்றது
ஆலங்குடி,
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பி ல் திருவரங்குளம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆலங்குடி பெரியார் தெருவில் உள்ள அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க வட்டாரத் தலைவர் விஷாலாட்சுமி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிமேகலை புஷ்பவள்ளி ஜோதி ஸ்டெல்லாமேரி ரேகாநான்சி சேசுராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட செ யலாளர் செல்வி, மாநிலபொருளாளர்கள் தேவமணி, அன்னபூரணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காலியாக உள்ள பணியிடத்தை உடனடியாக நிரப்பிட வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களின் பணி சுமையை குறைத்திட வேண்டும். மாறுதல் கேட்டுள்ள ஊழியர்கள் உதவியாளர் உள்ளூர் பணி மாறுதல் உடனடியாக வழங்கிட வேண்டும். அரசு வழங்கிய செல்போன் காலாவதி ஆனதால் புதிய செல்போன் உடனடியாக வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங் கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண் டனர்.
- ஆலங்குடி அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது
- மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது என பெற்றோர் பாராட்டு
ஆலங்குடி,
ஆலங்குடி அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் விழிப்புணர்வு கொண்டாட்டம் நடைபெற்றது. மார்க்கிரேட் நிர்மலாமேரி அனைவரையும் வரவேற்றனர். இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் சூசைராஜ் தலைமை வகித்தார்.குழந்தைகள் தங்கள் கற்றல் திறனை வெளிப்படுத்த எண்ணும் எழு த்தும் கற்பித்தல் முறையில் பெற்றோர்கள் சிறந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. எண்ணும் எழுத்து கொண்டாட்டத்தில் பெற்றோர்க ளும், மாணவர்க ளும் இணைந்து வகுப்பறை செயல்பாடுகளில் பங் கேற்றுக்கொண்டனர்.பள்ளியின் இடைநிலை ஆசிரியை லூர்துமே ரி அனைவருக்கும் நன்றி கூறினார்.
- காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
- புதிய செல்போன் வழங்கிடவும் கோரிக்கை
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பாக நடைபெற்ற மாலை நேர ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். வட்டாரச் செயலாளர் கோகிலவாணி தொடக்க உரையாற்றினார். மணிமேகலை, செல்லம், வித்யா, கவிதா, ரசிதா, சசிகலா, வனிதா மலர், கஸ்தூரி, உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பல வருடங்களாக காலியாக உள்ள காலி பணியிடத்தை நிரப்பவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அங்கன்வாடி பணியாளர்களின் பணி சுமையை குறைக்கவும், பணி மாறுதல் கோரிக்கையை நிறைவேற்றவும் அரசு வழங்கிய கைபேசி காலாவதி ஆனதால் புதிய கைபேசியை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் வட்டார துணைச் செயலாளர் தேவி கோரிக்கை விளக்க உரையாற்றினார். சி ஐ டி யு ஒருங்கிணைப்பாளர் டேவிட் நிறைவு உரையாற்றினார். வட்டாரப் பொருளாளர் வனஜா நன்றி கூறினார்.
- கோவில் திருவிழாவினை முன்னிட்டு எல்கை பந்தயம் நடைபெற்றது
- வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.1.10 லட்சம் பரிசு, கோப்பை
அறந்தாங்கி,
அறந்தாங்கி தாலுகா கடையாத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரியநாயகி அம்மன் கோவில் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை,மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 47 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. 3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 7 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் 12 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 28 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன. அவற்றை பார்வையிட்ட பொதுமக்கள் கைத்தட்டி உற்சாகப்படுதினர்.பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர்.30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவினை கடையாத்துப்பட்டி இளைஞர்கள், கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.






