என் மலர்
உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கோஷம்
- அறந்தாங்கி குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் அருகே நடைபெற்றது
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.அறந்தாங்கி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சங்க வட்டாரதுணைத் தலைவர் இந்திராதேவி தலைமை வகித்தார்.பல வருடங்களாக காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும், பணிமாறுதல் கோரியுள்ள ஊழியர், உதவியாளர்களுக்கு உள்ளுர் பணிமாறுதல் உடனடியாக வழங்க வேண்டும். அரசு வழங்கிய கைபேசி காலாவதி ஆனதால் புதிய கைபேசியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.சி.ஜ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், சங்கமாவட்ட துணை தலைவர் பத்மா, வட்டார செயலாளர் செல்வி, வட்டாரதுணை தலைவர்கள் மேரி, முத்து, மாவட்ட துணைத் தலைவர் முத்துலெட்சுமி,ஆனந்தி உள்ளிட்ட ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.






