என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • 12ம் வகுப்பு படிக்கும் சிறுமி 6 மாத கர்ப்பம்
    • போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மனோஜ்குமார் (வய து 22). டூவீலர் மெக்கானிக்கான இவர், அதே பகுதியில் உள்ள 12-ம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவரை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து. ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசாருக்கு வந்த புகாரை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி வழக்கு பதிவு ெசய்து போக்சோ சட்டத்தில் மனோஜ்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜ ர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    • காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கோஷம்
    • அறந்தாங்கி குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் அருகே நடைபெற்றது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.அறந்தாங்கி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சங்க வட்டாரதுணைத் தலைவர் இந்திராதேவி தலைமை வகித்தார்.பல வருடங்களாக காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும், பணிமாறுதல் கோரியுள்ள ஊழியர், உதவியாளர்களுக்கு உள்ளுர் பணிமாறுதல் உடனடியாக வழங்க வேண்டும். அரசு வழங்கிய கைபேசி காலாவதி ஆனதால் புதிய கைபேசியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.சி.ஜ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், சங்கமாவட்ட துணை தலைவர் பத்மா, வட்டார செயலாளர் செல்வி, வட்டாரதுணை தலைவர்கள் மேரி, முத்து, மாவட்ட துணைத் தலைவர் முத்துலெட்சுமி,ஆனந்தி உள்ளிட்ட ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டரிடம், கவுன்சிலர் புகார் மனு
    • 15க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து உள்ளதாக புகார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களுர் ஊராட்சி மன்ற உறுப்பினர் நாகராணிசின்னையா கடந்த 6ம் தேதி நடைப்பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில் தங்கள் பகுதியில் வெறி நாய் தொல்லையால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருவதாகவும், வெறி நாய் கடித்து 15க்கும் மேற்ப ட்டோர் காயமடைந்து உள்ள தாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் வெறிநாயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மீண்டும் அவர் மனு அளித்துள்ளார். அதில் வெறிநாயோடு தற்போது குரங்கு தொல்லையும் அதிகரித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். 

    • மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அறிந்த மற்ற மீனவர்கள் அவசரம் அவசரமாக கிடைத்த மீன்களுடன் பாதியிலேயே கரை திரும்பினர்.
    • இந்த மாதத்தில் மட்டும் புதுக்கோட்டையை சேர்ந்த 16 பேர் இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    அறந்தாங்கி:

    இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

    கடந்த 11-ந்தேதி புதுக் கோட்டை, நாகை மாவட்ட மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். அதில் மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் படகுகள் அந்நாட்டின் அரசுடைமை ஆக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று கடலுக்கு சென்ற புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேர் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 255 விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    இதில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 6 மீனவர்கள் ஒரு விசைப்படகிலும், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 6 மீனவர்கள் மற்றொரு படகிலும் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலையில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல் அதிவேகத்தில் மீனவர்களின் படகுகளை நோக்கி வந்தது.

    இதைப்பார்த்ததும் அச்சம் அடைந்த மீனவர்கள் தங்களது வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். இருந்தபோதிலும் அந்த இரண்டு விசைப்படகுகளையும் சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் விசைப்படகுகளுக்குள் தாவிக்குதித்து ஏறினர்.

    பின்னர் அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால், கணவாய் உள்ளிட்ட மீன்களை பறித்துக்கொண்டனர். மேலும் ரோந்து கப்பல் விசைப்படகுகளின் அருகில் வந்ததால் மீனவர்களின் வலைகளும் அறுந்து சேதமடைந்தன.

    இதையடுத்து 2 விசைப்படகுகளில் இருந்த கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 42), கலையசரசன் (24), லோகேஸ்வரன் (24), சக்தி (25), பிரபு (35), சுந்தரமூர்த்தி (45), ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த முருகானந்தம் (42), பாரதிதாசன் (35), ரவி (25), சசிக்குமார் (40), விசாலிங்கம் (46), மயில்ராஜன் (23) ஆகிய 12 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்தனர். மேலும் தங்கள் கப்பலுடன் இணைத்து மீனவர்களின் விசைப்படகுகளையும் இழுத்து சென்றனர்.

    பின்னர் அவர்களை இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள மயிலட்டி கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சென்ற படகில் 4 மீனவர்கள் மட்டுமே டோக்கன் வாங்கி சென்றதாகவும், மற்ற இரண்டு பேர் அனுமதியின்றி கடலுக்கு சென்றவர்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

    இதற்கிடையே மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அறிந்த மற்ற மீனவர்கள் அவசரம் அவசரமாக கிடைத்த மீன்களுடன் பாதியிலேயே கரை திரும்பினர். மேலும் சக மீனவர்கள் மற்றும் கைதான மீனவர்களின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து கைதான புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த மாதத்தில் மட்டும் புதுக்கோட்டையை சேர்ந்த 16 பேர் இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • பணி மாறுதல் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்
    • குழந்தைகள் வளர்ச்சி திட்டம் அலுவலகம் முன்பு நடைபெற்றது

    ஆலங்குடி,

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பி ல் திருவரங்குளம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் ஆலங்குடி பெரியார் தெருவில் உள்ள அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க வட்டாரத் தலைவர் விஷாலாட்சுமி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிமேகலை புஷ்பவள்ளி ஜோதி ஸ்டெல்லாமேரி ரேகாநான்சி சேசுராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட செ யலாளர் செல்வி, மாநிலபொருளாளர்கள் தேவமணி, அன்னபூரணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காலியாக உள்ள பணியிடத்தை உடனடியாக நிரப்பிட வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களின் பணி சுமையை குறைத்திட வேண்டும். மாறுதல் கேட்டுள்ள ஊழியர்கள் உதவியாளர் உள்ளூர் பணி மாறுதல் உடனடியாக வழங்கிட வேண்டும். அரசு வழங்கிய செல்போன் காலாவதி ஆனதால் புதிய செல்போன் உடனடியாக வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங் கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண் டனர்.




    • ஆலங்குடி அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது
    • மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது என பெற்றோர் பாராட்டு

    ஆலங்குடி,

    ஆலங்குடி அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் விழிப்புணர்வு கொண்டாட்டம் நடைபெற்றது. மார்க்கிரேட் நிர்மலாமேரி அனைவரையும் வரவேற்றனர். இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் சூசைராஜ் தலைமை வகித்தார்.குழந்தைகள் தங்கள் கற்றல் திறனை வெளிப்படுத்த எண்ணும் எழு த்தும் கற்பித்தல் முறையில் பெற்றோர்கள் சிறந்த பயனுள்ளதாக அமைந்துள்ளது. எண்ணும் எழுத்து கொண்டாட்டத்தில் பெற்றோர்க ளும், மாணவர்க ளும் இணைந்து வகுப்பறை செயல்பாடுகளில் பங் கேற்றுக்கொண்டனர்.பள்ளியின் இடைநிலை ஆசிரியை லூர்துமே ரி அனைவருக்கும் நன்றி கூறினார்.




    • காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
    • புதிய செல்போன் வழங்கிடவும் கோரிக்கை

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பாக நடைபெற்ற மாலை நேர ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். வட்டாரச் செயலாளர் கோகிலவாணி தொடக்க உரையாற்றினார். மணிமேகலை, செல்லம், வித்யா, கவிதா, ரசிதா, சசிகலா, வனிதா மலர், கஸ்தூரி, உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பல வருடங்களாக காலியாக உள்ள காலி பணியிடத்தை நிரப்பவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அங்கன்வாடி பணியாளர்களின் பணி சுமையை குறைக்கவும், பணி மாறுதல் கோரிக்கையை நிறைவேற்றவும் அரசு வழங்கிய கைபேசி காலாவதி ஆனதால் புதிய கைபேசியை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் வட்டார துணைச் செயலாளர் தேவி கோரிக்கை விளக்க உரையாற்றினார். சி ஐ டி யு ஒருங்கிணைப்பாளர் டேவிட் நிறைவு உரையாற்றினார். வட்டாரப் பொருளாளர் வனஜா நன்றி கூறினார்.

    • கோவில் திருவிழாவினை முன்னிட்டு எல்கை பந்தயம் நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.1.10 லட்சம் பரிசு, கோப்பை

    அறந்தாங்கி,

    அறந்தாங்கி தாலுகா கடையாத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரியநாயகி அம்மன் கோவில் மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை,மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 47 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. 3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 7 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் 12 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 28 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன. அவற்றை பார்வையிட்ட பொதுமக்கள் கைத்தட்டி உற்சாகப்படுதினர்.பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர்.30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவினை கடையாத்துப்பட்டி இளைஞர்கள், கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.




    • பாஸ்பரஸ் எலி மருந்து பயன்படுத்த நிரந்தர தடை
    • புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் எச்சரிக்கை

    புதுக்கோட்டை,

    அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செ்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ெபாது மக்கள் நலன் கருதி அபாயகரமான மோனோ குரோட்டோபாஸ், ப்ரோபெனோபோஸ், அசிபேட், குளோர் பைரிபாஸ், ப்ரோபெனோ போஸ் 10 சைபர்மெத்ன், குளோர்பைரிபாஸ் 10 சைபர்மெத்ரின் ஆகிய 6 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகைள, கடந்த 1-ந் தேதி முதல் 60 நாட்களுக்க விற்பனை செய்வதற்கு தற்காலிக தடை விதித்தும், 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் எலி விஷ மருந்தை பயன்படுத்த நிரந்தர தடை விதித்தும் தமிழக அரசு உத்தரவிட்டது.இத்தகைய பூச்சிக் கொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பூச்சிக் கொல்லி மருந்து விற்பனையாளர்கள், 60 நாட்களுக்கு இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ தடை விதிக்கப்படுகிறது. ஆய்வின்போது, தடையை மீறியது கண்டறியப்பட்டாலோ அல்லது புகார் வரப் பெற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு
    • காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் குளத்தூர் தாலுகா மண்டையூர் கீழமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் எங்கள் பகுதியில் விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு வழங்கப்படும் மதிப்பு தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும். அல்லது எடுக்கப்பட்ட இடத்திற்கு ஏற்ப மாற்று இடம் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். நரிமேடு பகுதி அடுக்குமாடி குடியிருப்பை சோ்ந்த குடியிருப்புவாசிகள் அளித்த மனுவில், குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு தண்ணீர் ஏற்றுவதை தனிநபர்கள் மூலம் நிறுத்தப்படுகிறது. இதனால் தண்ணீர் இல்லாமல் அவதி அடைகிறோம். தண்ணீர் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். சத்தியமங்கலம் ஊாராட்சி சனையப்பட்டி கிராமத்தில் உள்ள குளத்தில் குழுமிமடை தூர்த்து போய் உள்ளது. இதனை பருவமழைக்கு முன்னதாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சார்லஸ் மனு அளித்தார்.


    • பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம்
    • சிறுமிக்கு ரூ.25 ஆயிரம் வழங்க அரசிற்கு உத்தரவு

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 43 வயதான கூலித்தொழிலாளி 9-ம் வகுப்பு படித்து வந்த தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது தாயாரிடம் அந்த சிறுமி கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.25 ஆயிரமும், அபராத தொகையையும் வழங்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்ட தொழிலாளியை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.


    • 25 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் சப்ளை இல்லை என்று குற்றச்சாட்டு
    • மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கரிமேடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் லெட்சுமி என்பவர் மனு அளிக்க வந்தார். இரண்டு மகள்களுடன் லெட்சுமி அளித்த மனுவில், குடியிருப்பு நலச்சங்கத்தினர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும், 25 நாட்களாக வீட்டிற்கு தண்ணீர் சப்ளை செய்ய மறுப்பதாகவும் அவர் தெரித்திருந்தார்.


    ×