search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய ஆசிரியர்கள்
    X

    கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய ஆசிரியர்கள்

    • கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் பணியாற்றினர்
    • தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து

    புதுக்கோட்டை:

    தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் கீழ நம்பியூர் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தினை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலே நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் கருப்பு சட்டை அணிந்து ஆசிரியர்கள் பணியாற்றினார்கள்.

    அதன்படி கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், அமைப்பு செயலாளர் முத்துக்குமார், செய்தி தொடர்பாளர் ரஹமத்துல்லா, மகளிர் அணி செயலாளர் கலைமணி, ஒன்றிய வட்டார தலைவர் ராஜேந்திரன், வட்டார செயலாளர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகளும், அனைத்து பள்ளி ஆசிரியர்களும் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர் .

    புதுக்கோட்டையில் மாவட்ட தலைவர் ராஜாங்கம், செயலாளர் நாயகம், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் ஒருங்கிணைப்பில் மூக்கம்பட்டி, கம்மங்காடு, கிளிக்குடி, திருமயத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முகேஷ் ஒருங்கிணைப்பிலும் பொன்னமராவதி, மேல தானியம் அரசு உயர்நிலைப்பள்ளி, அன்னவாசல், அறந்தாங்கி, விராலிமலை, மணமேல்குடி, கரம்பக்குடி, திருவரங்குளம் ஆவுடையார் கோவில், அரிமளம். குன்னாண்டார் கோவில், மணமேல்குடி ஆகிய ஒன்றியங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் எதிர்ப்பு கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினார்கள்.

    Next Story
    ×