என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • நஷ்டஈடு கேட்டு போராட்டத்தில் குதித்த விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம்
    • விவசாயிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உறுதி

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 3600 ஹெக்டர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர். இப்பகுதியில் போதிய பருவமழை பெய்யாததால் விவசாயம் செய்து 100 நாட்களிலேயே பயிர்கள் அனைத்தும் கருகி சருகானது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சென்று முறையிட்டனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு மேற்கொண்டு சுமார் 1763 ஹெக்டர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்ததாக கணக்கெடுத்துச் சென்றுள்ளனர்.இதற்கிடையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த நெற்பயிர்களுக்கு தமிழக அரசால் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பிற்கு முன்பே வறட்சியால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லையென வேதனை தெரிவித்த விவசாயிகள் உரிய நிவாரணம் கேட்டு மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர்.

    தகவலறிந்த வட்டாட்சியர் ராஜா, காவல்த்துறையினர் உள்ளிட்டோர் விவசாயிகளை அழைத்து மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி ஏக்கர் ஒன்றிற்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும், மேலும் பயிர் காப்பீடு செய்யப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைத்திட காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கொண்ட அதிகாரிகள் உங்களது கோரிக்கைகள் கலெக்டர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது, இன்னும் 1 மாத காலத்திற்குள் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பைத் தொடர்ந்து விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்து கலைந்து சென்றனர்.

    • அரசு கல்லூரி மாணவர்களின் நாட்டு நலதிட்ட பணி முகாம் கந்தர்வகோட்டையில் நடைபெற்றது
    • தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்கள்

    கந்தர்வகோட்டை,

    தொந்தரவு கோட்டை அருகே அரசு கல்லூரி மாணவர்களின் நாட்டு நடப்பனி முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த புதுப்பட்டி அரசு தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களின் நாட்டு நல பணி திட்ட முகாம் மட்டங்கால் கிராமத்தில் நடைபெற்றது. மட்டங்கால் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில், கருப்பு கோவில், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தூய்மைப்படுத்தி வர்ணம் அடித்து அழகுப்படுத்தினர்.. மேலும் கிராம மக்களிடம் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர் சங்க மாநில செய்தி தொடர்பாளர் முத்தையன் கலந்து கொண்டு பேரிடர் விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அசோக் ராஜன், முகாம் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர் சையது ஆலம், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • நாமபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் நெகிழ்ச்சி
    • பக்தர்களுக்கு குடிநீர் வழங்கிய இஸ்லாமியர்கள்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள த ர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோவில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலாகும். திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருஸ்தலத்திற்கு அடுத்தபடியாக இந்த கோவில் 2-வது குருஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு கோவிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்தது.இதை தொடர்ந்து கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு, சிவாச்சரியார்கள் பல்வேறு பூஜைகளை செய்து வந்தனர். மேலும் கும்பாபிஷேக விழாவிற்காக, ஆலங்குடி சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் மற்றும் அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. சிவாச்சாரியாகர்கள் மற்றும் பெண்கள் ஊர்வலமாக சீர்வரிசை எடுத்து வந்தனர். இதே போல் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அவற்றை கோவில் நிர்வாகத்தினர் பெற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில் யாக பூஜை நடைபெற்றன. இதையடுத்து பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேளதாளங்கள் முழங்க கோவிலின் ராஜகோபுரத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் வானில் கருட பகவான் வட்டமிட, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.பக்தர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது.மேலும் கும்பாபிஷேகத்திற்காக கோயிலுக்கு வரும் பக் தர்களுக்கு ஆலங்குடி பெரிய பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் தண்ணீர் பாட்டில் வழங்கியது மத ஒற்றுமை க்கு எடுத்துக் காட்டாக இருந்தது மட்டுமல்லாமல் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி - முருகானந்தம் செயல் அலுவ லர் பாலசுப்ரமணியன்.அரசு வருவாய்த்துறை அதிகாரிகள் அரசு அலுவலர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் சுற்று வட்டார பெருமக் கள் கிராம ஊர் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.300க் கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்னர் 'ஆலங்குடி தீயணை ப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையிலான மீட்பு குழுவி னர் தயார் நிலையில் வைக்கபட்டிருந்தன.

    • மாவட்ட கலெக்டர் கவிதா ராமு திறந்து வைத்தார்
    • இயற்கை சார்ந்த பனை பொருட்கள் வாங்கி பயன்பெற அழைப்பு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் (காதிகிராப்ட்) -ன் சார்பில், பனைப்பொருட்கள் விற்பனை நிலையத்தினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு திறந்து வைத்தார்.தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் (காதிகிராப்ட்), தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் சார்பில், இயற்கை சுவைநீர் பதநீர், பனை வெல்லம், பனங்கற்கண்டு, சுக்குகாபி, சுக்கு பனங்கற்கண்டு மிட்டாய், சில்லு கருப்பட்டி, பனம்பழச்சாறு, பனை ஓலைப் பொருட்கள், தூரிகை வகைகள், அழகிய பனை ஓலை விசிறிகள், கதர் கிராம கைத் தொழில் பொருட்கள், தேன் மற்றும் இயற்கை சார்ந்த பாரம்பரிய உடல் நலத்திற்கு மிகவும் தேவையான இயற்கை ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பனைப் பொருட்கள், கதர் கிராம கைத் தொழில் பொருட்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. எனவே இயற்கை சார்ந்த இத்தகைய பனைப் பொருட்கள் மற்றும் உணவுகளை அனைவரும் வாங்கி பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) து.தங்கவேல், உதவி இயக்குநர் (கதர் கிராமத் தொழில்கள்) கோபாலகிருஷ்ணன், புதுக்கோட்டை பனைப் பொருள் திட்ட அலுவலர் என்.ஆறுமுகம், கதர் அங்காடி மேலாளர் என்.கருப்பையா, பனைத் தொழில் வல்லூநர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • 62 கிலோ எடையில் கிராம மக்களால் செய்யப்பட்டுள்ளது
    • வெற்றி ஆண்டவர் அய்யானார் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஊர்வலம்

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடி வெற்றி ஆண்டவர் அய்யனார் கோயில் பங்குனி திருவிழா நேற்று காப்பு கட் டுதல் தொடங்கியது. அந்த பகுதிகளில் உள்ள 12 கிராமங்களுக்குச் சொந்தமான இந்த கோயிலில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று பங்குனி உத்திரத்தன்று நிறைவு பெறுவது வழக்கம். மழை வேண்டியும் அக்கி ராமத்தில் வேளாண்மை செழிக்கவும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்விழாவை முன்னிட்டு இந்தக் கோயிலில் இருந்து 62 கிலோ எடையில் வெள்ளி குதிரை வாகனம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் வெள்ளி குதிரை வாகனத்தை மாட்டு வண்டியில் ஊர்வலமா க எடுத்து சென்று கோயிலூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னாலான அய்யனார் சி லையை அந்த குதிரை வாகனத்தில் அலங்கரித்து அமர வைத்து அத னை மீண்டும் கிராம மக்கள் குப்பகுடி கொண்டுவந்தனர்.வெள்ளி குதிரையில் வீட்டில் இருந்த ஐம்பொன்னாலான அலங்கரி க்கப்பட்ட அய்யனார் சிலைக்கு மக்கள் வழிநெடுகிலும் சிறப்பு பூ ஜைகள் செய்து வழிபட்டனர்..மேலும் கோயிலில் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்த தங்க ஆப ரண பெட்டிகளையும் பலத்த பாதுகாப்போடு எடுத்து வந்த கிராம மக்கள் அதனை ஒவ்வொரு நாள் திருவிழாவின் போதும் அய்யனா ருக்கு அலங்கரித்து சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் ஆராதனை விழாக்களை மேற்கொள்ள உள்ளனர். இன்று தொடங்கிய விழா இன்னும் பத்து நாட்களுக்கு நடைபெறவு ள்ள நிலையில் நாள் தோறும் சுவாமி வீதியுலா காட்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் களைகட்ட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுக ளை 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    • கருங்காடு புலிக்குட்டி அய்யனார் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
    • திருவாடுதுறை ஆதீனம் பங்கேற்பு

    ஆவுடையார்கோவில்,

    கருங்காடு கிராமத்தில்உள்ள பூர்ணபுஷ்கலா அம்பிகை சமேத ஸ்ரீ புலிக்குட்டி அய்யனார், ஸ்ரீ கருங்காளியம்மன், ஸ்ரீ காத்தான் சாம்பான் ஆகிய சாமி ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அப்பகுதி கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 25ம் தேதி சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 3நாட்களாக 4கால யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் புலிக்குட்டி அய்யனார் சாமி அருள் பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • பொன்னமராவதி அமல அன்னை பள்ளியில் நடைபெற்றது
    • 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

    பொன்னமராவதி,

    பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கேஜி முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு அருள்சகோதரி லீமா ரோஸ் தலைமைவகித்தார். பள்ளியின் முதல்வர் ச.ம.மரியபுஷ்பம் வரவேற்றார். விழாவில் கேஜி முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்க்கு தொழிலதிபர் ஏ.பி.மணிகண்டன், மருத்துவர் ஆ.அழகேசன், ஊராட்சி மன்றத்தலைவர் தொட்டியம்பட்டி கீதா சோலையப்பன், கண்டியாநத்தம் செல்வி முருகேசன், கொப்பனாபட்டி மேனகா மகேஸ்வரன், வர்த்தகர் கழகத்தலைவர் எஸ்கேஎஸ்.பழனியப்பன் ஆகியோர் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினர். ஒலியமங்கலம் பங்குத்தந்தை ஏஎம்.லூர்துசாமி, புனித ஆரோக்கிய அன்னை ஆலய செயலர் யு.சிரில் ஞானராஜ் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. துணை முதல்வர் ஆர்.பிரின்ஸ் நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.ஆசிரியர்கள் செ.பாலமுரளி, ஜெ.வசந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆசிரியை ரிபினா நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் புத்தக அறிமுக விழா நடைபெற்றது
    • சிறுபான்மையினரின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கவிஞர் நந்தலாலா பேச்சு

    புதுக்கோட்டை,

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கவிஞர் நந்தலாலா எழுதிய "ஊறும் வரலாறு" புத்தகத்தின் அறிமுக விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் நந்தலாலா பேசியதாவது,ஒருவரை அவர் வாழ்நாளுக்குள் பாராட்டி விடுவதும், கொண்டாடிவிடுவதும் அவசியம். சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியத்தின் இருக்கிறோம்.பெண் படைப்பாளர்கள் எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது கணவர்கள் மனிதாபிமானத்தோடு துணை நிற்பதை காண்கிறேன். இந்த தொடரில் கவிஞர் வாலி பற்றி ஏன் எழுதவில்லை என கேட்டார்கள். வாலியைப் பற்றி யார் வேண்டுமானாலும் எழுதலாம். குமுதினி போன்றோரை எழுதத்தான் நந்தலாலா வேண்டும் என்றார்.விழாவிற்கு தமுஎகச மாவட்ட தலைவர் ராசி பன்னீர்செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் ஸ்டாலின் சரவணன் அறிமுக உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் நா.முத்துநிலவன் தொடக்கவுரையாற்றினார். ரமா ராமநாதன், உஷாநந்தினி ஆகியோர் கருத்துரை வழங்கினர். முன்னதாக கபார்க்கான் வரவேற்க, மாவட்ட பொருளாளர் கி. ஜெயபாலன் நன்றி கூறினார். சாமி கிரீஸ் தொகுத்து வழங்கினார்.

    • அரசு திட்டங்களை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அழைப்பு
    • அரசின் திட்டங்களை அரசு அலுவலர்கள் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என வேண்டுகோள்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ஆயுதப் படை திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 110 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தினை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.பின்னர் அவர் கூறியதாவது,தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்றத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்த நலத்திட்டங்கள் பெறும் பெண்கள் அனைவரும் இதனை தங்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை அரசு அலுவலர்கள் நல்ல முறையில் செயல்படுத்தி பெண்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. முத்துராஜா வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ் செல்வன், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) சியாமளா வட்டாட்சியர் விஜயலெட்சு, சமூக நலத்துறை தொழில் கூட்டுறவு அலுவலர் மனோகரன், விராலிமலை சந்திரசேகரன், எம்.எம்.பாலு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • காதல் திருமணம் ெசய்தவர்களை இரு தரப்பு பெற்றோர்கள் உதறினர்
    • அறிவுரை சொல்லி அனுப்பி வைத்த போலீசார்

    ஆலங்குடி.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் தர்மர் கோவில் சேர்ந்த ராஜேந்திரன் மகன் குமாரவேல் (வயது 33). கம்பி கட்டும் தொழில் செய்து வருகிறார்.இவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அண்ணா நகர் பகுதியில் வேலை பார்த்தபோது, அருகில் இருந்த பட்டபிரான் தெருவை சேர்ந்த மகிமைதாஸ் மகள் பிரித்தி (வயது 21) என்பவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கீரமங்கலம் சிவன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தங்களது பெற்றோர்களால் ஆபத்து வரும் என்று உணர்ந்த அவர்கள், பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் கா வல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவகி, பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்களுக்கு அவர்கள் தேவையில்லை என்று இரு வீட்டாரும் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றனர். பின்னர் போலீசார் திருமணம் செய்த காதல் ஜோடிக்கு அறிவுரைகள் கூறி அனுப்பிவைத்தனர்.

    • 4 கிராம மக்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர்
    • கட்லா, விரால், ஜிலேபி வகை மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி

    பொன்னமராவதி

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்று வட்டாரத்தில் மதியாணி, தேனூர்,ரெட்டியபட்டி, கண்டியா நத்தம் புதுப்பட்டி ஆகிய நான்கு கிராமங்களில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.நெல் அறுவடைக்கு பின்னர் ஊர் விவசாய பாசன கன்மாய்களில் தண்ணீர் வற்றத் தொடங்கும்.அப்போது ஊர் முக்கியஸ்தர்களால் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மீன்பிடித் திருவிழா நடைபெறும். இவ்வாறு நடைபெறும் மீன்பிடித் திருவிழாவில் ஊர் முக்கியஸ்தர்களால் வெள்ளை வீசப்பட்ட பின்னர் கிராம மக்கள் கம்மைகளில் துள்ளி குதித்து தங்கள் கையில் வைத்திருந்த மீன்பிடி உபகரணமான கூடை ,வலை போன்றவற்றை கொண்டு மீன்பிடிக்க தொடங்கினர்.இதில் நாட்டு வகை மீன்களான 5 கிலோ எடை கொண்ட கட்லா மீனும் , 3 கிலோ எடை கொண்ட விரால் வகை மீன்களும் ஜிலேபி கெண்டை அயிரை மீன்கள் கிடைத்தன இதனை மகிழ்ச்சியோடு பிடித்துச் சென்றனர்.பொன்னமராவதி அருகில் உள்ள உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் இன்று இரவு நடைபெறுவதால் காப்பு கட்டப்பட்ட 15 தினங்களுக்கு எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளோ சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறாது. அவ்வாறு நடைபெறும் சுப தினங்கள் 15 தினங்களுக்குப் பின்னர் தான் நடைபெறும் ஆகையால் இன்று பொன்னமராவதி சுற்று வட்டாரத்தில் நான்கு கிராமங்களில் இன்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. 

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
    • மாநில செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் கள் சங்கத்தினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கிட கோரி யும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க கோருதல், பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயா;வு வழங்க கோருதல், கூடுதல் பொறுப்பூதியம் வழங்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் கட்ட ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் அரங்க.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுப.உலகநாதன் முன்னிலை வகித்தார்.இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடை ப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முருகேசன், சத்தியமூர்த்தி ஆகியோரும், அறந்தாங்கியில் மாவட்ட பொருளாளர் பொய்யா மொழி மற்றும் லோகநாதன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாண்டியன், வசந்த குமார், உதயசூரியன், ஜெகதீஷ், அருண் நேரு, வினோத் குமார், ரமேஷ், வின்சென்ட், ஞானசேகர், ஈடித்ரேனா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    ×