என் மலர்
புதுக்கோட்டை
- வாக்குபதிவு எந்திரம் அறை ஆய்வு செய்யப்பட்டது
- கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடந்தது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மூன்று மாதத்திற்கு ஒருமுறை மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறை அங்கீகரி க்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவி பேலட் யூனிட் உள்ளிட்டவைகள் பாது காப்பாக வைக்க ப்பட்டு, அறைக்கு பூட்டி சீல் வைக்க ப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். அதனடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு பாது காப்பு வைப்ப றையினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அங்கீகரி க்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர் கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) கலைமணி மற்றும் அலுவலர்கள் உடனி ருந்தனர்.
- தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா நடந்தது
- கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அளவில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா கலெக்டர்கவிதா ராமு தலைமையில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை, பொது சுகாதாரத்துறை, தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மற்றும் இந்திய தர நிர்ணய அமைபனம் ஆகிய துறைகளில் இருந்து பொதுமக்கள், நுகர்வோர்களுக்கு மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டு நேரடி விளக்கங்கள் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டது.
மேலும் நுகர்வோர்களின் உரிமைகள் தொடர்பான விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டு, விழி ப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது. உணவுப் பொருள் வீணாவதை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளல் போன்ற தலைப்புகளை மையமாகக் கொண்டு நடைபெற்ற கட்டுரை போட்டி ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவி யர்களின் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். நன்முறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ நுகர்வோர் குழு அமைப்பினர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- பா.ஜ.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
- ஆர்வத்துடன் கலந்து கொண்ட நிர்வாகிகள்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக புதிய உறுப்பினர் சேர்க்கை, பூத்கமிட்டிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்ய மூன்று நாள் முனைப்பு முகாம் நடைபெற்றது.
மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளும், சார்பு அணிகள், பிரிவுகளின் நிர்வாகிகளும் முகாமில் பங்கேற்று பணியாற்றினர். முன்னதாக மாவட்ட தலைவர் விஜயகுமார் விராலிமலை ஒன்றியத்திலும், மாவட்ட பொது செயலாளர் ஏவிசிசி கணேசன் அன்னவாசல் ஒன்றியத்திலும் முகாம் பணிகளை தொடங்கி வைத்து ஆய்வு செய்தனர்.
புல்வயல் ஊராட்சியில் அன்னவாசல் ஒன்றிய அமைப்பாளர் ரவிச்சந்திரன்,நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் ரெங்கையா, உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய துணை தலைவர்கள் சாமிநாதன், சோலை ஆகியோரும், விராலிமலை ஒன்றியத்தில் ஒன்றிய தலைவர் சுந்தரம், மாவட்ட பொது செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன், பாராளுமன்ற தொகுதி முழுநேர ஊழியர் சத்தியபாமா மற்றும் கிளை தலைவர்களும் கலந்து கொண்டனர். இம்முகாமில் அனைத்து பா.ஜ.க .நிர்வாகிகளும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
- கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார்
- பொதுமக்களுக்கு நேரடி விளக்கங்கள் அளிக்கப்பட்டது
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அளவில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா கலெக்டர்கவிதா ராமு தலைமையில் நடை பெற்றது.இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை, பொது சுகாதாரத்துறை, தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மற்றும் இந்திய தர நிர்ணய அமைபனம் ஆகிய துறைகளில் இருந்து பொதுமக்கள், நுகர்வோர்களுக்கு மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டு நேரடி விளக்கங்கள் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டது.மேலும் நுகர்வோர்களின் உரிமைகள் தொடர்பான விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டு, விழி ப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது. உணவுப் பொருள் வீணாவதை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளல் போன்ற தலைப்புகளை மையமாகக் கொண்டு நடைபெற்ற கட்டுரை போட்டி ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவி யர்களின் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். நன்முறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ நுகர்வோர் குழு அமைப்பினர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, இணை பதிவாளர் (கூட்டுறவு) ராஜேந்திரபிரஷாத், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், துணை இயக்குநர் (சுகாதாரம்) ராம்கணேஷ், திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர் ச்சி புவனேஸ்வரி மற்றும் பலர்கலந்து கொண்டனர்.
- நார்த்தாமலை முத்துமாரியம்மன் ேகாவில் தேர்த்திருவிழா: நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை
- 29ம்தேதி வேலை நாளாக அறிவிப்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்வான தேர்த்திருவிழா வருகிற 10-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.மேலும் அதற்கு பதிலாக 29-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 30-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்று பணிநாள் ஆகும். மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினை கருதியும் அவசர அலுவலகள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும். மேலும் அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
- நடவடிக்கை எடுக்க தி.மு.க. கவுன்சிலர் வலியுறுத்தல்
- புதுக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகராட்சி கூட்டம் தலைவர் திலகவதி செந்தில் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத்தலைவர் லியாகத்அலி, ஆணையர் நாகராஜன், மற்றும் அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் தலைவர் திலகவதி செந்தில் பேசுகையில், உறுப்பினர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 42 வார்டுகளிலும் தெரு விளக்குகள் அனைத்தும் எரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிதண்ணீர் கிடைக்கவும், முக்கியமாக அடிப்படை வசதிகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.மேலும் கலைஞர் கருணாநிதி மகளிர் கலைக்கல்லூரி எதிரே அமைக்கப்பட்டு வரும் பூங்காவிற்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது பெயரை பூங்காவிற்கு வைக்க அனைத்து உறுப்பினர்கள் ஆதரவோடு தீர்மானம் கொண்டு வந்தார். மேலும் குடிநீர் மானியமாக ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
எஸ்.ஏ.எஸ்.சேட் (அ.தி.மு.க.) பேசுகையில், தனது வார்டான 16-ல் பல்லவன் குளம் அருகே சுகாதார வளாகம் அமைக்க தீர்மானம் கொண்டு வந்ததற்கு நன்றி. எனது வார்டு பகுதியில் 20 சந்துகள் உள்ளன. அவற்றில் குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வார்டு அ.தி.மு.க. என்பதால் புறக்கணிக்கப்படுகிறதா? தற்போது கூட குடிதண்ணீர் வரவில்லை. வராத தண்ணீருக்கு வரி கேட்க முடியாது. நகரை சுற்றி உள்ள 25 வார்டுகளில் அதிகமாக குடிநீர் இணைப்பு உள்ளது. அதனால் நகர்புறத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து குடிதண்ணீர் பிரச்சினையை போக்குங்கள் என்றார்.
பர்வேஸ் (விஜய் மக்கள் இயக்கம்) பேசுகையில், வார்டுகளில் உறுப்பினராக எதற்காக இருக்கிறோம் நாங்கள். எங்கள் வார்டுகளில் டெண்டர் விடும்போது தெரிவிக்க வேண்டும். மேலும் விஸ்வதாஸ் நகரில் தெருவிளக்குகள் இல்லை. அரிமா லைட் நமக்கு நாமே திட்டத்தில் அறிவிக்கப்பட்டு வெறும் அறிவிப்போடு உள்ளது. நான் வளர்ந்து வரும் நகர்மன்ற உறுப்பினர். நான் அடுத்த நிலைக்கு செல்லவேண்டும் என்றால் மக்களின் பிரச்சினைகளை இந்த 5 வருடத்தில் தீர்க்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே முடியும். அதிகாரிகளுக்கு அப்படியில்லை. 60 வயது வரை பணியாற்ற முடியும் என்றார்.
மதியழகன் (தி.மு.க.) பேசுகையில், எனது வார்டு பகுதியில் 2 இன்ச் பைப் லைன் முழுவதுமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும். மேலும் பாதாள சாக்கடை திட்டம் எப்போது நடைமுறைபடுத்தப்படும் என்பதை தெளிவாக கூறவேண்டும் என்றார்.
வளர்மதி சாத்தையா (தி.மு.க.) பேசுகையில், எனது வார்டு பகுதியான பாரத் நகரில் சாலை மோசமாக உள்ளது. இங்கு சாலை அமைத்து 18 வருடம் ஆகிறது. ஆனால் அதிகாரிகள் 5 ஆண்டுகளுக்கு முன்னர்தான் சாலை போடப்பட்டது என்கின்றனர். இதில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மூர்த்தி (தி.மு.க.) பேசுகையில் 2023-24க்கு எனது வார்டுக்கு ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டதற்கு நன்றி. அதற்கு உடனடியாக பணி ஆணை கொடுக்க வேண்டும். பணிகளை விரைந்து ஒதுக்க வேண்டும் என்றார். மேலும் நகராட்சி பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும். புதிய பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் (சிறுநீர்) அனைத்து பகுதிகளிலும் வீசுகிறது.
எனது வார்டு பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டுபவர்கள் சந்தில் கட்டிட கழிவுகளை கொட்டுவதால் சாக்கடைகள் அடைத்துக் கொள்ளும் நிலை தொடர்ச்சியாக உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. அரசிற்கு கெட்ட பெயர் உருவாக்கும் விதமாக சொத்துவரியை அதிகாரிகள் அதிகளவில் போட்டுள்ளனர். அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது துணைத்தலைவர் குறுக்கிட்டு ஆட்சியை பற்றி பேசவேண்டாம் என தெரிவித்தார்.
கவிவேந்தன் (தி.மு.க.) பேசுகையில், எனது வார்டு பகுதியில் சாலை அமைக்கும் ஒப்பந்தகாரர் சாலை அமைக்கும் போது தெரிவிப்பது இல்லை. சாலையை இஷ்டத்திற்கு அதிகாரிகள் துணையோடு போடுகின்றனர். சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அராஜக போக்கில் ஈடுபடும் ஒப்பந்தகாரர் அரவிந்த் உரிமம் ரத்து செய்யவேண்டும் என்றார்.
பழனிவேல் (தி.மு.க.) பேசுகையில், சிங்கமுத்து அய்யனார் கோவிலிலிருந்து சமுத்துவபுரம் செல்லும் சாலை மோசமாக உள்ளது. மேலும் முல்லை நகரில் வீடுகளில் பயன்படுத்தும் கழிவு தண்ணீரை சாலைகளில் திருப்பி விட்டுள்ளனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சமத்துவ பூங்கா அமைக்க 11 ஆயிரம் சதுர அடி இடம் உள்ளது. அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 20-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரியவில்லை என்றார்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
- பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியது
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த தச்சம்பட்டியைச் சேர்ந்த வர் மலையாண்டி (வயது 47). இவர் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட மலையாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அறந்தாங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவருக்கு நேர்ந்த கொடூரம்
- உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிதம்பரவிடுதி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 31). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் வாய்த்தகராறு காரணமாக அடிதடி சண்டை ஏற்பட்டுள்ளது.இதில் சுதாகருக்கு கை, கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் சுதாகர் மீது ஆத்திரம் குறையாத நடராஜன், தனது ஆதரவாளர்கள் 2 பேருடன் மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சையிலிருந்த சுதாகரின் கழுத்தில் பிளேடால் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சுதாகருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.இதனை கண்டித்து சுதாகரின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்திற்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த அறந்தாங்கி காவல்த்துறையினர் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். காவல்த்துறையினரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உறவினர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த நபரின் கழுத்தை பிளேடால் அறுத்த சம்பவம் சக நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 1351 நீர் நிலைகளில் மண்பாண்டத்திற்காக மண் எடுக்க அனுமதி
- கலெக்டர் கவிதா ராமு அறிவிப்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1351 கண்மாய் மற்றும் குளங்களில், விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர் கள், மண்பாண்டம் செய்யும் கூட்டுறவு சங்கம் ஆகியோர் கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண்ணை எடுத்து பயன்படுத்தலாம். வண்டல் மண் பெறும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வருவாய் கிராமத்திலோ அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்திலோ வசிக்க வேண்டும். விவசாயிகள் வண்டல் எடுக்க அடங்கல் மற்றும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குநர் (கனிமம் மற்றும் சுரங்கம் பிரிவிற்கு ) அனுப்பி அனுமதி பெற்றுகொள்ளலாம்.நன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 75 கனமீட்டர், ஹெக்டேருக்கு 185 கனமீட்டர், புன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 90 கனமீட்டர் ஹெக்டேருக்கு 222 கனமீட்டர் , மண்பாண்டம் செய்ய 60 கனமீட்டர் என்ற அளவிற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.வண்டல் மண் எடுக்கும் போது கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். குளத்தின் கரையின் உயரத்தின் இரண்டு மடங்கு தொலைவில் சம்மந்தப்பட்ட பொறியாளர் களால் நிர்ணயி க்கப்பட்ட இடத்தில் வண்டல் மண் அள்ள வேண்டும். ஓரு மீட்டர் ஆழத்திற்கு மேல் மண் அள்ளக்கூடாது. மேலும் குளத்தின் கரையை பாதையாக பயன்படுத்தக்கூடாது. குளத்தின் கரையின் குறுக்கே குறுக்கு பாதைகள் ஏற்படு த்தக்கூடாது. வண்டல் மண்ணை எக்காரணம் கொண்டு சேமித்து வைக்க அனுமதி இல்லை. வண்டல் மண் எடுக்கும் போது கரை, மதகு அல்லது கட்டுமான வேலைப்பா டுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்த க்கூடாது. டிரக்டரில் மட்டுமே வண்டல் மண் எடுத்து செல்ல வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்து ள்ளார்.
- கல்லூரி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
ஆலங்குடி.
ஆலங்குடி அருகே உள்ள வம்பன் மாஞ்சன்விடுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகள் நந்தினி (வயது 19). இவர் புதுக்கோட்டையில் ஒரு கல் லூரியில் பிஎஸ்சி கணிதவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், கருப்பையா ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி பெண்ணை தேடி வருகிறார்.
- திருமணஞ்சேரி கோவிலில் திருமணம் செய்து கொண்ட பின்னர் காவல் நிலையத்தில் தஞ்சம்
- இருதரப்பு வீட்டாரிடமும் போலீசார் சமரசம்
ஆலங்குடி.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே நல்லண்டார் கொல்லையை சேர்ந்த அழகர் மகன் வீரமணி (வயது 27)) இவரும், கந்தர்வகோட்டை தாலுகா கல்லாக் கோட்டை சேர்ந்த பழனிவேல் மகள் சினேகாவும் (வயது 19) கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் இருவரும் கறம்பக்குடி அருகே உள்ள திரும ணஞ்சேரி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் காதல் ஜோடி தங்களுக்கு ப ாதுகாப்பு வழங்குமாறு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி இருதரப்பு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் காதல் ஜோடியை வீரமணியின் பெற்றோர் அழைத்து சென்றனர்.
- ஈசன் அம்பாளுக்கு திருமாங்கல்யம் சூட்டினார்
- ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் அமைந்துள்ள அறம் வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோவில் குடமுழுக்கு விழா நேற்றைய முன் தினம் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து தேரோடும் வீதியில் பட்டனப் பிரவேசமும், பரதநாட்டிய அரங்கேற்றமும் நடைபெற்றது.இதையடுத்து, ஈசன் நாமபுரீஸ்வரருக்கும், அம்பாள் தர்மஸம்வர்த்தினிக்கும் நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெற்றன.சந்தன காப்பு அலங்காரத்தில் ஈசன் காட்சியளித்தார். சிவனடியார்களால் திருவாசகம், முற்றோதுதல் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறிய ரச தேரில் திருமண மேடை அமைக்கப்பட்டது. இதில், உற்சவ மூர்த்திகளான ஈசன், அம்பாள் திருவுருவங்கள் மணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிவன் கோவில் அருகே உள்ள நாடியம்மாள் கோவிலிருந்து திருமாங்கலியம், பட்டு வஸ்திரங்கள், தேங்காய், பழங்கள், இனிப்புகள் போன்ற சீர்வரிசைகளோடு மேள தாளம் முழங்க மணமேடைக்கு கொண்டு வரப்பட்டது. ஈசன்- அம்பாளுக்கு பட்டு வஸ்திரங்களால் அலங்காரம் ெ சய்யப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டன. சிவச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதினர். பல சடங்குகளுக்கு பின் புதிய திருமாங்கல்யம் கொண்டு ஈசன்- அம்பாளுக்கு திருமாங்கல்யம் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த திருக்கல்யாண வைபவத்தை காண வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆலங்குடி சொர்ண பைரவ சிவாச்சாரியர் குழுவினர் தெய்வானை திருக்கல்யாண விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






