நோயாளியின் கழுத்தை அறுத்த வாலிபர்கள்

அறந்தாங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவருக்கு நேர்ந்த கொடூரம் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
நோயாளியின் கழுத்தை அறுத்த வாலிபர்கள்
Published on

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிதம்பரவிடுதி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 31). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் வாய்த்தகராறு காரணமாக அடிதடி சண்டை ஏற்பட்டுள்ளது.இதில் சுதாகருக்கு கை, கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் சுதாகர் மீது ஆத்திரம் குறையாத நடராஜன், தனது ஆதரவாளர்கள் 2 பேருடன் மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சையிலிருந்த சுதாகரின் கழுத்தில் பிளேடால் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சுதாகருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.இதனை கண்டித்து சுதாகரின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்திற்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த அறந்தாங்கி காவல்த்துறையினர் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். காவல்த்துறையினரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உறவினர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த நபரின் கழுத்தை பிளேடால் அறுத்த சம்பவம் சக நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com